Published:Updated:

அந்தரங்க உறுப்பில் வெஜைனல் வாஷ், சென்ட் பயன்படுத்தலாமா? | காமத்துக்கு மரியாதை - S3 E42

Sex Education

``அந்தரங்க உறுப்பில் அதற்கென தயாரிக்கப்பட்ட வெஜைனல் வாஷ்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. அதேபோல், அடிக்கடி சோப் போட்டும் சுத்தம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால்... ''

Published:Updated:

அந்தரங்க உறுப்பில் வெஜைனல் வாஷ், சென்ட் பயன்படுத்தலாமா? | காமத்துக்கு மரியாதை - S3 E42

``அந்தரங்க உறுப்பில் அதற்கென தயாரிக்கப்பட்ட வெஜைனல் வாஷ்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. அதேபோல், அடிக்கடி சோப் போட்டும் சுத்தம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால்... ''

Sex Education

சுத்தமாக இருப்பது மிக மிக நல்ல விஷயம்தான். ஆனால், அதுவே அதிகமாகும்போது... சிலருக்கு அதுவே பிரச்னையாகவும் மாறலாம். சமீப சில வருடங்களாக அந்தரங்க உறுப்பை அதற்கென்றே தயாரிக்கப்பட்ட திரவங்களால் சுத்தப்படுத்துவது, அந்தப் பகுதியில் வாடை வராமல் இருப்பதற்காக நறுமண திரவங்களைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் பழக்கம் நல்லதா என்பதை தெரிந்துகொள்ள பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம்.

''அந்தரங்க உறுப்பில் அதற்கென தயாரிக்கப்பட்ட வெஜைனல் வாஷ்களை பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. அதேபோல், அடிக்கடி சோப் போட்டும் சுத்தம் செய்யக்கூடாது. குறிப்பாக ஆன்டி செப்டிக் திரவங்களையும் அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. இதனால், அந்தப் பகுதி சருமம் உலர்ந்து, வறண்டு போவது மட்டுமல்லாமல், அந்தரங்கப் பகுதியில் இருக்கும் நன்மை பயக்கும் கிருமிகளையும் கொன்று விடும்.

Dr. Kamaraj
Dr. Kamaraj

விளைவு, அந்தப் பகுதியில் தீமை விளைவிக்கும் வேறு கிருமிகள் வந்துவிடும். தொற்று ஏற்பட்டு, அதை சரிசெய்ய மருத்துவர் ஆன்டி செப்டிக் திரவங்களைப் பரிந்துரைத்தால் பயன்படுத்தலாம். மற்றபடி, குளிக்கும்போது சுத்தம் செய்வது மட்டுமே போதுமானது.

சிலர் ஸ்பிரே, சென்ட் போன்ற வாசனைத் திரவியங்களை அந்தரங்கப் பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள். உடம்பானது தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ளும். அதற்கான சிஸ்டம் அதற்குள்ளேயே இருக்கிறது. மனித உடம்பில் இயற்கையில் இருக்கிற வாசனையானது, ஆணை நோக்கி பெண்ணையும், பெண்ணை நோக்கி ஆணையும் கவர்ந்து இழுக்கும். விலங்குகளிடம் இந்த நுண்ணுணர்வு இன்னமும் இருக்கிறது. மனிதர்கள்தான் வாசனை சோப், வாசனை திரவியம் என்று பயன்படுத்தி, அந்த இயற்கை வாசனையை நீக்கி விடுகிறோம்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.