Published:Updated:

கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? பிள்ளைகள் ரோபோ அல்ல... |பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 21

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

பெற்றோரிடத்தில் பிள்ளைகளுக்கு அன்பும் நம்பிக்கையும் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்கலாமா? இன்னும் சில பெற்றோர் குரலை உயர்த்தி பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குரலை உயர்த்திப் பேசுவது நாகரிகமான செயலா?

கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? பிள்ளைகள் ரோபோ அல்ல... |பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 21

பெற்றோரிடத்தில் பிள்ளைகளுக்கு அன்பும் நம்பிக்கையும் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்கலாமா? இன்னும் சில பெற்றோர் குரலை உயர்த்தி பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குரலை உயர்த்திப் பேசுவது நாகரிகமான செயலா?

Published:Updated:
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக்காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.

பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர, இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்...

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் ஷர்மிளா

சமீபத்தில் ஒரு குடும்பத்தைச் சந்தித்தோம். அம்மா, அப்பா, டீன் ஏஜில் ஒரு மகள் என அளவான குடும்பம். அந்த அம்மா தன் மகள் குறித்து சொன்ன விஷயங்கள்தான், இந்த அத்தியாயத்துக்கான அடிப்படை. `எங்க பொண்ணு நாங்க நில்லுன்னா நிப்பா, உக்காருன்னா உக்காருவா. எங்கப் பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டா. எங்க மேல அவளுக்கு பயம் ஜாஸ்தி... இந்தக் காலத்துப் பிள்ளைங்க மாதிரியெல்லாம் இல்லை. நாங்க அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா வளர்த்திருக்கோம்...'' என்றார் பெருமையாக.

பெற்றோர் சொல்வதை அப்படியே செய்ய பிள்ளைகள் என்ன ரோபோவா..? பெற்றோரிடத்தில் பிள்ளைகளுக்கு அன்பும் நம்பிக்கையும் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்கலாமா? இன்னும் சில பெற்றோர், குரலை உயர்த்தி பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குரலை உயர்த்திப் பேசுவது நாகரிகமான செயலா? அதைப் பிள்ளைகள் ஏற்றுக்கொள்கிறார்களா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்ட்ரிக்ட்டாக இருப்பது ஏன் தவறு?

``நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு...'' எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பெற்றோரோ நீங்கள்? டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நீங்கள் கறாராக, கண்டிப்பாக நடந்துகொள்வதால் அவர்களுக்கு தூக்க குறைபாடு, உணவு உண்ணும் பழக்கத்தில் பிரச்னைகள், பதற்றம், தன்னம்பிக்கையின்மை, படிப்பில் மந்தமாவது போன்ற பிரச்னைகள் வரலாம் என்பதை உணர்வீர்களா?

கண்டிப்பாக இருப்பதில் இரண்டு வகை உண்டு. பலவிதமான பேரன்ட்டிங் ஸ்டைல்கள் பற்றி ஏற்கெனவே கடந்த அத்தியாங்களில் பார்த்திருக்கிறோம். சில பெற்றோர் கண்டிப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டு செய்வது சர்வாதிகார வளர்ப்புமுறை. இப்படிப்பட்ட பெற்றோர், ஸ்ட்ரிக்ட்டான ஹாஸ்டல் வார்டன்களை நினைவுபடுத்துவார்கள். தண்டனை கொடுப்பதை தயங்காமல் செய்கிறவர்கள். வீட்டுக்குள் இந்தவகை பெற்றோருடனான உரையாடல் என்பது ஒருபக்கம் சார்ந்தே இருக்கும்.

அதாவது பெற்றோர்கள் பேசுவார்கள். அதைப் பிள்ளைகள் கவனிக்க வேண்டும். அது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள். பொதுவாகவே, இந்தப் பெற்றோரின் பிள்ளைகள் அதிகம் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். மிகவும் கண்டிப்பான ஸ்டைல் என்பதால் இது ஆரோக்கியமான பேரன்ட்டிங் ஸ்டைல் என எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படு வதில்லை. பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் எப்போதாவது மரியாதையையும் எப்போதும் பயத்தையும் ஏற்படுத்துகிற ஸ்டைல் இது.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

அதுவே அதிகாரபூர்வ வளர்ப்புமுறையும் ஸ்ட்ரிக்ட்டான பேரன்ட்டிங் ஸ்டைலில்தான் வரும். பிள்ளைகளின்மீது அக்கறை கொண்ட பேரன்ட்டிங் ஸ்டைல் இது. பிள்ளைகள் எளிதில் அணுகக்கூடிய பெற்றோர்களாக இவர்கள் இருப்பார்கள். இந்தப் பெற்றோர் வளர்க்கும் பிள்ளைகள், தற்சார்பும் சுயஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு செயலையும் சுயமாக யோசித்து அதற்கேற்ப முடிவெடுக்கும்படி வளர்க்கப்படுவார்கள்.

இந்த வகை பெற்றோருக்கும் பிள்ளைகளின் மீது எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனாலும், அவற்றைப் பிள்ளைகளுக்குத் தெளிவாக உணர்த்திவிடுவார்கள். அதேநேரம் அந்த எதிர்பார்ப்புகள் குறித்த தங்கள் கருத்துகளை பிள்ளைகளும் பெற்றோரிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். சர்வாதிகார வளர்ப்புமுறையைக் கடைப்பிடிக்கும் பெற்றோர், பிள்ளைகளிடம் நடத்தைக் கோளாறுகள், தன்னம்பிக்கையின்மை, சுயகட்டுப்பாடின்மை, மனநல பிரச்னைகள் போன்றவற்றைப் பார்ப்பார்கள். அதிகாரபூர்வ வளர்ப்பு முறையில் அப்படி எதுவும் நடப்பதில்லை.

ஸ்ட்ரிக்ட்டாக இருப்பதில் என்ன சாதகங்கள்?

இத்தகைய பெற்றோர் பிள்ளைகளுக்கு எல்லைகளை வகுத்திருப்பார்கள். குடும்ப விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். பிள்ளைகள் சுய கட்டுப்பாட்டுடன் வளர்வார்கள். இப்படிப்பட்ட பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் சக வயதினர் தரும் அழுத்தம் குறித்து கவலைகொள்ளவோ, ரிஸ்க்கான செயல்களில் ஈடுபட நினைக்கவோ மாட்டார்கள். பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தின் அவசியம் தெரிந்திருக்கும்.

Teen age (Representational image)
Teen age (Representational image)
Pixabay

ஓவர் ஸ்ட்ரிக்ட் பிள்ளைகளுக்கு ஆகாது!

அதீத கண்டிப்புடன் வளரும் பிள்ளைகள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க நினைப்பார்கள்.

அளவுக்கதிக கண்டிப்பு என்பது பிள்ளைகளை எப்போதும் ஒருவித பயத்திலேயே வைத்திருக்கும்.

இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகளிடம் அதிக கோபமும் மன அழுத்தமும் இருக்கும்.

எதைச் செய்யக் கூடாது எனச் சொல்லி வளர்க்கப் படுகிறார்களோ, அதைச் செய்ய நினைப்பார்கள்.

எந்தச் சூழலையும் இலகுவாக கையாளத் தெரியாமல் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

ஃபிரெண்ட்லியா... ஸ்ட்ரிக்ட்டா... எப்படி இருக்க வேண்டும் பெற்றோர்?

அதீத கண்டிப்புதான் உங்கள் ஆயுதம் என நினைத்து அந்த ஸ்டைலில் பிள்ளைகளை வளர்க்க நினைத்தால் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமான உரையாடலில் இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகும்.

பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையில் சுமுக உறவு என்பதே இருக்காது.

பிள்ளைகள் உங்களுக்கு பயப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது ஸ்ட்ரிக்ட் பேரன்ட்டிங்கின் முக்கியமான எதிர்பார்ப்பு. அதன்படியே பிள்ளைகள் பயப்படுவார்கள். ஆனால் மெள்ள மெள்ள உங்களிடம் பல விஷயங்களை மறைக்கத் தொடங்குவார்கள். பயத்தின் காரணமாக உங்களுக்குத் தெரியாமல் பல விஷயங்களையும் செய்யப் பழகுவார்கள். அது அவர்களது பாதுகாப்புக்கு நல்லதல்ல.

எனவே, பிள்ளைகளிடம் ஃபிரெண்ட்லியாக நடந்துகொள்வதுதான் ஆரோக்கியமானது.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

ஆஷ்லி

`குரலை உயர்த்திக் கத்திப் பேசுவது எனக்குப் பிடிக்காத, என்னைக் காயப்படுத்துகிற ஒரு விஷயம். என் அம்மா அப்படிச் செய்யும்போதெல்லாம் அதையடுத்து எனக்கு வேறு ஒன்றும் செய்யப் பிடிக்காது. முன்பெல்லாம் என் அம்மா அப்படிக் கத்தும்போது எங்களுக்குள் நிறைய சண்டைகள் வரும். அதையடுத்து நான் டிப்ரெஷனுக்குள் போயிருக்கிறேன். அது, என் மனநிலையை பாதித்ததோடு, படிப்பையும் பாதித்தது.

பிறகு, நானும் அம்மாவும் அது குறித்துப் பேசினோம். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தோம். அம்மா குரலை எழுப்பிக் கத்துவதால் நான் அனுபவிக்கும் உணர்வுகளைப் புரியவைத்தேன்.

இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும் நாங்கள் இருவரும் அமைதியாகப் பேசித் தீர்த்துக்கொள்கிறோம். அம்மாவின் குரல் உயர்வதே இல்லை. பெற்றோர் குரல் உயர்த்திக் கத்துவதை நான் மட்டுமல்ல என் வயதிலுள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். அதிகாரம் செய்வதையும் நாங்கள் விரும்புவ தில்லை. அன்பை மட்டுமே உங்கள் ஆயுதமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சத்தமாகப் பேசினால்தான் உங்கள் வார்த்தைகள் எடுபடும் என நினைக்காமல் பொறுமையாக, அமைதியாக எல்லா பிரச்னை களையும் அணுகுங்கள் பெற்றோர்களே...''

- ஹேப்பி பேரன்ட்டிங்!