கொரோனா எனும் பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, அடிக்கடி கைகளைக் கழுவுவது, ஆறடி இடைவெளி, முகக்கவசம் எனக் கடந்த இரண்டாண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையில் சத்தமே இல்லாமல் இன்னொரு தொற்றும் பரவிக் கொண்டிருக்கிறது.
அதன் பெயர் விவாகரத்துத் தொற்று.
அமெரிக்காவின் பிரவுன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ரோஸ் மெக்டெர்மாட் தலைமையிலான குழு, விவாகரத்து தொடர்பான ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு விவாகரத்துத் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதென்ன விவாகரத்துத் தொற்று என்கிறீர்களா?
குடும்ப உறுப்பினரோ, நெருங்கிய நண்பரோ விவாகரத்து செய்திருக்கும்பட்சத்தில், உடனிருக்கும் நபர்களுக்கும் மணமுறிவு எண்ணம் எழுவதுதான் விவாகரத்துத் தொற்று. இந்த எண்ணத்துக்கு `விவாகரத்துத் தொற்று' (Divorce Contagion) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விவாகரத்துத் தொற்றின் பின்னணியை அலசும் விரிவான கட்டுரை அவள் விகடன் இதழில் வரவிருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்த உங்கள் கருத்தையும் கீழ்க்கண்ட சர்வே வழியாக அறிய விழைகிறோம்.