Published:Updated:

`மகனுக்கு காங்கிரஸ் என்று பெயர் வைக்கக் காரணம் அவர்கள்தான்!' - உதய்ப்பூரின் வைரல் அப்பா ஆனந்தம்  

காங்கிரஸ்
காங்கிரஸ் ( Twitter )

என் மகன் தன் பதினெட்டாவது வயதை அடையும்போது காங்கிரஸ் கட்சி தழைத்தோங்கும்.

திருமணமான 22 வருடங்களுக்குப் பிறகு பிறந்த தன் ஒரே மகனுக்கு `காங்கிரஸ் ஜெயின்’ என்று பெயரிட்டிருக்கிறார் உதய்ப்பூரைச் சேர்ந்த வினோத் ஜெயின். தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான இவர், கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை விற்பனை செய்து வருகிறார். தன் ஆறுமாத ஆண் குழந்தைக்கு `காங்கிரஸ்' என்ற பெயரிட்டு, சமூகவலைதளங்களில் வைரல் அப்பாவாகிவிட்ட வினோத் ஜெயின் சொல்வதைக் கேளுங்களேன்.

Udaipur man named son congress
Udaipur man named son congress
Twitter

``எனக்கு ஏற்கெனவே கல்லூரிக்குச் செல்கிற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 22 வருடங்கள் கழித்து மூன்றாவதாக எனக்கு மகன் பிறந்திருக்கிறான். தங்கள் சகோதரனுக்கு பெயரிட என் மகள்கள் ஆசையோடு இருந்தனர். ஆனால், நான் அவர்களை முந்திக்கொண்டு என் மகனுக்கு காங்கிரஸ் என்று பெயரிட்டுவிட்டேன். தம்பிக்கு தங்களால் பெயர் வைக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் என்னிடம் நாள்கணக்காக பேசாமல் இருந்தனர். அவர்களுடைய வருத்தம் நியாயம்தான். என்ன செய்வது என் பிடிவாதத்திலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. எப்படியோ என் மகள்களை சமாதானப்படுத்திவிட்டேன்'' என்கிற வினோத், மகனுக்கு காங்கிரஸ் என்று பெயரிட்டதின் பின்னணி காரணத்தையும் சொல்கிறார்.

`` `காங்கிரஸ் இல்லா பாரதம்' என்று பி.ஜே.பி-யினர் கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்துதான் என் மகனுக்கு `காங்கிரஸ் என்று பெயரிட முடிவு செய்தேன். வரும் வருடங்களில் என்னைப் போலவே காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் இதை நிச்சயம் செய்வார்கள். விரைவில் காங்கிரஸ் தன் பழைய இடத்தை தக்கவைத்து பெருமையின் உச்சிக்குச் செல்லும். இன்றைக்கு நான் செய்தது அனைவருக்கும் வேடிக்கையாகத் தெரியலாம். என் மகன் தன் பதினெட்டாவது வயதை அடையும்போது காங்கிரஸ் கட்சி தழைத்தோங்கும். காவியை மக்கள் மறந்திருப்பார்கள்.

Udaipur man named son congress
Udaipur man named son congress
tv9telugu

காங்கிரஸின் சித்தாந்தம் என்றுமே சாகாது'' என்பவர், தன்னுடைய மனைவி வந்தனா, தன் விருப்பத்தைப் புரிந்துகொண்டு தனக்கு பக்கபலமாக இருந்ததை மகிழ்ச்சிப் பொங்க குறிப்பிடுகிறார்.

பின் செல்ல