Published:Updated:

``சிங்கிளாகவே இருப்பது சந்தோஷம்தான்... ஆனா?'' - முரட்டு சிங்கிள்களுக்கு `டேட்டிங் குரு' வார்னிங்

Loneliness
Loneliness

`நீ சிங்கிளா, சுதந்திரமா இருக்கே'ன்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி உங்களைக் கொம்பு சீவி விட்டவங்களே, சில வருஷங்களுக்கு அப்புறம், `இன்னுமா செட்டில் ஆகல'ன்னு கேட்டு வெறுப்பேத்துவாங்க.

ஒரு முரட்டு சிங்கிளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்று தற்செயலாகக் கண்ணில்பட்டது.

``உலகின் ஆகச்சிறந்த

சுதந்திரவாதியென

குடும்பம் இல்லாதவன்

பெருமைகொள்கிறான்

அவன் இஷ்டப்படி

விழிக்கிறான் உண்கிறான்

வயிறுமுட்டக் குடிக்கிறான்

`உங்களோடு யாரும் வரலையா?' எனும்

டாக்டரின் கேள்வியை யாரிடம் சொல்வதென

எண்களைத் துழாவுகிறான்.

A Man playing guitar
A Man playing guitar

மறைந்த கவிஞர் வே.பாபுவின் இந்தக் கவிதை வரிகள், ஒரு நபர் சிங்கிளாக இருப்பதன் ப்ளஸ், மைனஸ் இரண்டையுமே சில வரிகளில் பொட்டில் அறைந்ததுபோல சொல்லிவிடுகின்றன. இந்த வரிகள் ஆண், பெண் இருபாலருக்குமே பொருந்தும்.

சரி, கவிதை இருக்கட்டும். எதார்த்த வாழ்வில் ஓர் ஆணோ, பெண்ணோ சிங்கிளாக இருப்பதன் ப்ளஸ், மைனஸ் என்னென்ன..? `டேட்டிங் குரு' வருண் மன்னவா தன் அனுபவத்தில் தெரிந்துகொண்டவற்றை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Teenage Girl
Teenage Girl

``சிங்கிள்களுக்கான முதல் நல்ல விஷயம், உங்க நேரம் உங்களுக்கே உங்களுக்குன்னு இருக்கும். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு ஸ்போர்ட்ஸ் சேனல்ஸ் பார்க்கலாம். வடிவேலு காமெடி பார்க்கலாம். நாலு கழுதை வயசானாலும் விதவிதமா சின் சான் மூவி பார்க்கலாம். டோரா புஜ்ஜியும் பார்க்கலாம். சிங்கிளா இருக்கிறதோட சுதந்திரம் அனுபவிச்சா மட்டும்தாங்க புரியும்.

உங்களுக்குப் பிடிச்ச ஹீரோவோட / ஹீரோயினோட பெயரை தைரியமா வெளியே சொல்லலாம். `எனக்குப் பிடிக்காதவனுக்கு/பிடிக்காதவளுக்கு நீ எப்படி ஃபேனா இருக்கலாம்?'ங்கிற பஞ்சாயத்தெல்லாம் வரவே வராது.

பார்க்கிற வேலை பிடிக்கலைன்னா பேப்பர் போட்டுட்டு, அதுக்கப்புறம் நிதானமா அடுத்த வேலையைத் தேடலாம். வேலையில, வாழ்க்கையில ஏதாவது லட்சியங்கள் வெச்சிருந்தீங்கன்னா, எந்தவித இடையூறுமில்லாம அதுல கவனம் செலுத்தலாம்.

`டேட்டிங் குரு' வருண் மன்னவா
`டேட்டிங் குரு' வருண் மன்னவா

ரிலேஷன்ஷிப்பும் சண்டையும் ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவிகள். சிங்கிள் சிங்கமான உங்களுக்கு, நேர்ல சண்டை, போன்ல சண்டை, சாட்டிங்ல சண்டை, டூ வீலர்ல போறப்போ சண்டையெல்லாம் வாழ்க்கையில இருக்கவே இருக்காது. முக்கியமா மணிக்கணக்கா போன்ல பேசி காது வலி, வாய் வலி வராம நிம்மதியா இருக்கலாம்.

மூவி, மால், ஆன்லைன் ஷாப்பிங்னு காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

நிறைய பேர்கூட டேட்டிங் போய் உங்களுக்கான சரியான நபரைத் தேர்ந்தெடுக்கலாம். டேட்டிங்கிறது ஒருவரையொருவர் புரிஞ்சுக்கிறதுக்காகப் பேசுறது மட்டும்தான்கிறதை நினைவு வெச்சுக்கிறது நல்லது.

Girl
Girl

சிங்கிளா இருக்கிறதோட மைனஸ் என்னன்னு பார்த்தா, எல்லாருக்கும் பார்ட்னர் இருக்காங்க, நமக்கில்லையேங்கிற எண்ணம் வந்துடும். தேவையில்லாத யோசனைகள் வரும். டிப்ரஷன் வரும். இது ஆண், பெண் ரெண்டு பேருக்குமே பொருந்தும்.

பார்ட்னர் இல்லாததால, பசங்க நேரத்தைக் கடத்துறதுக்குத் தண்ணியடிக்கிறது, தம்மடிக்கிறதுன்னு வேண்டாத பழக்கங்களையெல்லாம் கத்துக்க ஆரம்பிப்பாங்க.

`நீ நல்லாதானே இருக்கே... ஏன் சிங்கிளா சுத்துறே'னு கேட்க ஆரம்பிச்சு, போகப் போக சமூகம் தர்ற அழுத்தம் அதிகமாயிட்டே வரும். `நீ சிங்கிளா, சுதந்திரமா இருக்கே'ன்னு நாலு வருஷத்துக்கு முன்னாடி உங்களைக் கொம்பு சீவி விட்டவங்களே, சில வருஷங்களுக்கு அப்புறம், `இன்னுமா செட்டில் ஆகல'ன்னு கேட்டு உங்களை வெறுப்பேத்துவாங்க.

Relationship
Relationship

உங்களோட கஷ்டங்களைப் பகிர்ந்துக்க, ஆறுதல் பெற, தோள் சாய உங்களுக்குன்னு ஒரு துணை இருக்க மாட்டாங்க. நம்மளை நேசிக்கிறதுக்கு ஒரு உயிர் இருக்குங்கிறது செம லவ்வபிள் ஃபீலிங். இது கிடைக்காமப்போகும்.''

அதாகப்பட்டது, இந்தக் கட்டுரை மூலமா தெரிய வர்றது என்னன்னா, கொஞ்ச நாள் சிங்கிளா சுதந்திரத்தை அனுபவிச்சுட்டு, அப்புறம் சம்சார சாகரத்துல தொபுக்கடீர்னு குதிச்சிடுங்க. ஆல் தி பெஸ்ட்!

அடுத்த கட்டுரைக்கு