கட்டுரைகள்
Published:Updated:

பெஸ்ட்டியா, லவ்வரா..? - 2K கிட்ஸுக்கு ஒரு கேள்வி!

பெஸ்ட்டியா, லவ்வரா..?
பிரீமியம் ஸ்டோரி
News
பெஸ்ட்டியா, லவ்வரா..?

‘நீதான் என் பெஸ்ட்டி’, `நான்தான் உனக்கு பெஸ்ட்டி’, ‘இவன் என் பெஸ்ட்டி’ போன்ற வாக்குறுதிகள், சண்டைகள், போட்டிகள் எல்லாம் நடக்குது.

`பெஸ்ட்டின்னாலே ஃபிரெண்ட்தான். லவ்வரெல்லாம் கிடையாது.’

‘ம்... பெஸ்ட்டியைப் பிடிச்சிருந்தா லவ் பண்ணலாம், தப்பில்லை!’

‘என் பெஸ்ட்டி எப்படி இன்னொருத்தனை/இன்னொருத்தியை லவ் பண்ணலாம்?’

எக்கச்சக்க இன்டரஸ்டிங் முரண்களுடன் லைஃபை என்ஜாய் செய்துகொண்டிருக்கிறார்கள் 2K கிட்ஸ். அவற்றில் ஒன்றுதான் ‘பெஸ்ட்டி - லவ்வர்’ விஷயம்.

‘ப்ரோ’, ‘டியூட்’ வரிசையில் 2K கிட்ஸ் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படுகிற வார்த்தை, `பெஸ்ட்டி.’ சிலர் ‘நண்பேன்டா’ எனத் தெளிவுடன் இருக்கிறார்கள். சிலரோ, ‘ஃபிரெண்ட்ஷிப்தான். ஆனா, லவ்வா மாறினாலும் மாறலாம்’, ‘லவ்வுதான்... ஆனா, இப்போதைக்கு ஃபிரெண்டா இருக்கோம்’ என்று பெஸ்ட்டியை இடியாப்பச் சிக்கலாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பெஸ்ட்டியா, லவ்வரா..? - 2K கிட்ஸுக்கு ஒரு கேள்வி!

நட்பிலும் காதலிலும் சொதப்புகிறார்களா 2K கிட்ஸ்? மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் பேசினோம்.

‘‘டீன் ஏஜ் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவுல நட்புக்கு வாய்ப்பே இல்லைன்னு சிலர் நினைச்சாலும், ‘பெஸ்ட்டி’ங்கிற ரிலேஷன்ஷிப் பத்தித் தெரிஞ்சவங்க, ‘பொண்ணுக்கும் பையனுக்கும் நடுவுல நல்ல ஃபிரெண்ட்ஷிப்பும் இருக்கலாம்’னு புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க.

எதிர்ப்பாலினத்தோட பழகினாலே காதல்ல விழுந்துடுவோம்கிற பலவீனம் 2K கிட்ஸ்கிட்ட கிடையாது. ஒருவேளை மனசுக்குள்ள காதலிச்சாலும், வெளியில பெஸ்ட்டியா இருக்கிறதால, காதல் தோல்வியில இருந்து ஈசியா வெளியே வந்துடுறாங்க. ‘பெஸ்ட்டி’யோட பாசிட்டிவ் பக்கங்கள்னா இவைதான்.

இதுல சிக்கலான பக்கங்கள்னு பார்த்தா, நிறைய சொல்லலாம். பசங்க தங்களோட பாய்ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தனைப் பெரும்பாலும் `பெஸ்ட்டி’ன்னு சொல்றதில்லை. பொண்ணுங்களைத்தான், சொல்லப்போனா ஒரே ஒரு பொண்ணைத்தான் ‘பெஸ்ட்டி’னு சொல்லிக்கிறாங்க. அதே மாதிரி பொண்ணுங்களும், பெரும்பாலும் ஆண் நண்பர்களைத்தான் ‘பெஸ்ட்டி’னு சொல்றாங்க; பலரும் ஒரே ஒரு நண்பனுக்குத்தான் `பெஸ்ட்டி’ அந்தஸ்து கொடுக்குறாங்க. அதனால, சிலர் பெஸ்ட்டிங்கிற பேர்ல தங்களோட எதிர்ப்பாலின ஈர்ப்பை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்கன்னுதான் சொல்லணும்.

பூங்கொடி பாலா
பூங்கொடி பாலா

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒண்ணுல இளைஞர்கள், ‘பெஸ்ட்டி நான் இருக்கிறப்போ, அவன்/அவள் வேற ஒருத்தர்கூட பழகினான்/ள். அந்த நட்பைக் கெடுத்து விட்டுட்டேன்’னு பெருமையா சொல்லிக்கிட்டதை பார்த்தப்போ, நம்ம குழப்பம் வலுவாகுது. இந்த நடவடிக்கைக்குக் காரணம், பொசசிவ்னெஸ்தான். அப்போ இந்த உணர்வுக்குக் காரணம் என்ன... ‘அவனை/அவளை நான் காதலிக்கலை. ஆனா, அவன்/அவள் யாரையாவது காதலிச்சா அதை அனுமதிக்கவும் மாட்டேன்’ என்பது என்ன மாதிரியான மனநிலை?

பொசசிவ்னெஸ் வந்துவிட்டால், அந்த நபருக்கு பெஸ்ட்டிகிட்ட லவ் வந்துடுச்சுனு எடுத்துக்கலாம். நல்ல நட்பு, காதல்ல முடியுறது எல்லா காலத்துலேயும் நடந்துக்கிட்டுதான் இருந்துச்சு. அது, 2K கிட்ஸின் வாழ்க்கையிலயும் நடந்துக்கிட்டு இருக்கு. அப்போ பெஸ்ட்டிங்கிற பேர் கிடையாது. இப்போ இருக்கு, அவ்ளோதான் வித்தியாசம்.

பெஸ்ட்டியா, லவ்வரா..? - 2K கிட்ஸுக்கு ஒரு கேள்வி!

‘நீதான் என் பெஸ்ட்டி’, `நான்தான் உனக்கு பெஸ்ட்டி’, ‘இவன் என் பெஸ்ட்டி’ போன்ற வாக்குறுதிகள், சண்டைகள், போட்டிகள் எல்லாம் நடக்குது. ஸோ, ஈர்ப்பைத்தான் சிலர் பெஸ்ட்டின்னு சொல்லிக்கிறாங்க. இந்த இடத்துல கொஞ்சம் தெளிவா இருந்தா நல்லது.

என்னோட கிளினிக்கல் அனுபவத்துல சொல்றேன்... ‘நாங்க நாலு வருஷமா பெஸ்ட்டியாத்தான் இருந்தோம். அவனுக்கு/அவளுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுக்கப்புறம் என்னால தாங்க முடியலை. இப்போதான் நான் அவனை/அவளை லவ் பண்றேன்னு தெரியுது’னு பல 2K கிட்ஸ் அழுதிருக்காங்க. அதனால டியூட்ஸ்.. பெஸ்ட்டியா, லவ்வரா அப்படிங்கிறதை புரிஞ்சுக்கிட்டு, அந்த ரிலேஷன்ஷிப்பைத் தொடருங்க’’ என்கிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.