Published:Updated:

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 11

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

அன்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்... அன்புக்குத் தகுதியானவர்களாக மாறுங்கள்...

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 11

அன்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்... அன்புக்குத் தகுதியானவர்களாக மாறுங்கள்...

Published:Updated:
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.... இதுவே பெற்றோர்களின் அல்டிமேட் ஆசை. ஆனால் அதற்கான முக்கிய விஷயத்தைப் பல பெற்றோரும் கோட்டை விடுகிறார்கள். வீடு, வேலை, லட்சியங்களை நோக்கிய ஓட்டம், எதிர் காலத்துக்கான சேமிப்பு என எல்லாப் பெற்றோர்களும் இன்று ஏதோ ஒரு வகையில் பிசியாகவே இருக்கிறார்கள். பிள்ளைகளுடன் அவர்கள் செலவிடுகிற நேரம் என்பது அறவே இல்லாமலோ அரிதாகவோதான் இருக்கிறது. பெற் றோர்கள் அதை உணரும்போது பிள்ளைகள் பால்யம் கடந்து வளர்ந்து நிற்பார்கள். கடந்துபோன அந்தக் காலம் திரும்ப வராது. பிள்ளைகளுடன் செலவிட நேரமே இல்லை என்று சொல்கிற பல பெற்றோர்களும் பிள்ளைவளர்ப்புக்குத் தேவையான பிரதான முதலீடே அந்த நேரம்தான் என்பதை உணர்வதில்லை.

டாக்டர் ஷர்மிளா

``அநேக பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர் தான் ரோல் மாடல்களாக இருப்பார்கள். அதேபோல பெரும்பாலான பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை அளவுகடந்து ரசிப்பார்கள். உங்கள் பிள்ளைகளின் இதயத்தில் உங்களுக்கு நிரந்தர இடம் வேண்டு மென்றால் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் ஆதரவாக, அனுசரணையாக, அக்கறையாக நடந்துகொள்ள வேண்டும். அதாவது...

* பிள்ளைகளின் பள்ளிப்படிப்பு, பொழுதுபோக்கு, பிற ஆர்வங்கள் போன்றவற்றில் அவர்களுக்கு உதவுவது.

* பிள்ளைகள் பேசுவதை எந்த முன் முடிவும் இல்லாமல் காதுகொடுத்துக் கேட்பது; அவர்களது பார்வையில் இருந்து அவர்களின் பிரச்னைகளை அணுகுவது, புரிந்துகொள்வது.

* பிள்ளைகள் செய்யும் தவறுகள், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களைத் தாண்டி, அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது.

* குழந்தைகளின் மீது எதிர்பார்ப்புகளை வைப்பதுடன், அவற்றை அவர்கள் அடைய உதவி, அவர்களை எப் போதும் பாதுகாப்பாக உணரச் செய்வது.

* குழந்தைகளை ஒழுங்காக நடத்துவது... அதன் மூலம் அவர்களுக்கும் உங் களுக்குமான சுமுக உறவை பலப் படுத்துவது.

* பள்ளிநேரம் முடிந்ததும் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பது, அன்றைய தினம் அவர்களுக்கு எப்படிக் கழிந்தது என கேட்பது. அதைக் குறுக்கு விசாரணையாகச் செய்யாமல் இயல்பாக, அக்கறை யாகச் செய்வது.

* பள்ளிக்கூடம் தொடர்பான எல்லா நிகழ்வுகளிலும் எல்லா பெற்றோர் களாலும் எல்லா நேரமும் பங்கேற்க முடியாததன் யதார்த்தத்தை பிள்ளை களுக்குப் புரியவைப்பது. ஆனால், வீட்டில் பிள்ளைகளுக்கான உங்கள் நேரத்தை உறுதிப்படுத்துவது.

* குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கியமானவர்களாகக் கருதும் நபர்களுடன் தொடர்பில் இருப்பது.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 11

பிள்ளைகளுடன் ஏன் நேரம் செலவிட வேண்டும்?

`நான் என் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுகிறேனா... அதைத் தரமாகச் செலவிடுகிறேனா...' என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். குழந்தை களுடன் எவ்வளவு நேரத்தைச் செல விடுகிறீர்கள் என்பதைவிடவும் அந்த நேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதே முக்கியம். குவாலிட்டி டைம் எனப்படும் அதை உங்கள் தினசரி வாடிக்கையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

குவாலிட்டி டைமை எப்படிச் சாத்தியப் படுத்துவது?

அன்பை காட்டுங்கள்: தினமும் உங்கள் பிள்ளைகளிடம் `ஐ லவ் யூ' சொல்லுங்கள். உங்கள் அன்பையும் நீங்கள் அவர்கள்மீது வைத்திருக்கும் மதிப்பையும் பிள்ளைகளை உணரச் செய்யுங்கள்.

நேரத்தை திட்டமிடுங்கள்: குழந்தைகளுடனான நேரம் என்பதைத் திட்டமிடுங்கள். குழந்தைகளுடன் பேசுவது, விளையாடுவது என அது ஒட்டுமொத்த குடும்பத்துக்கான நேரமாகவும் இருக்கலாம்.

தொந்தரவுகளைத் தூர வையுங்கள்: பிள்ளை களுடன் நேரம் செலவிடும்போது குழந்தைகள் மட்டுமே உங்கள் கவனமாக இருக்க வேண்டும். செல் போன், கம்ப்யூட்டர் என எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள்.

பிள்ளைகள் முடிவெடுக்கட்டும்: பிள்ளைகளுடன் நீங்கள் செலவிடும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பிள்ளைகளே முடிவெடுக்கட்டும். எது அவர்களைச் சந்தோஷமாக வைக்கிறதோ அதை அவர்கள் தேர்வு செய்யட்டும்.

நண்பராக மாறுங்கள்: பிள்ளைகளுடன் நேரம் செலவிடும்போது பெற்றோர் என்ற முகமூடியைக் கழற்றிவைத்துவிட்டு ஃபிரெண்டாக மாறுங்கள்.

என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

பிள்ளைகள் வளர, வளர அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வு தேவைப்படும். நீங்கள் அவர் களுடன் செலவிடுகிற நேரம் அந்த உணர்வை அவர் களுக்கு உறுதிப்படுத்துவதுடன், எல்லா விஷயங்களை யும் உங்களுடன் பேச, பகிரக் கற்றுக்கொடுக்கும்.

பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி, குழு நடவடிக்கைகளில் ஈடுபடும் பெற்றோர், பிள்ளைகளுக்கு பாசிட்டிவிட்டியையும் சுய மதிப்பையும் கடத்து வார்கள். வீட்டிலும் வெளியிலும் இணக்கமான சூழலுக்கு இது வித்திடும்.

வேலை, வெளி விவகாரங்கள், பிள்ளை வளர்ப்பு என பல விஷயங்கள் ஏற்படுத்தும் ஸ்ட்ரெஸ்ஸை, பிள்ளைகளுடன் செலவிடும் சிலமணித் துளிகள் விரட்டியடிக்கும்.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 11

டேக் ஹோம் மெசேஜ்

பிள்ளைகள் கேட்டதையும் பல நேரங்களில் கேட்காததையும் வாங்கித் தருவதன் மூலம் அவர்களை மகிழ்விப்பதைவிட மேலானது நீங்கள் அவர்களுடன் செலவிடும் குவாலிட்டி டைம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளை வாஞ்சையோடு கட்டியணையுங்கள். `ஐ லவ் யூ' சொல்லுங்கள். பிள்ளைகள் உங்களின் ரசிகர்களாக இருக்கும்பட்சத்தில் அதைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்ல, அதற்குத் தகுதியானவர்களாகவும் இருப்பது உங்கள் கடமையல்லவா?''

ஆஷ்லி

``என் அம்மா என்னுடைய மிகப்பெரிய ரசிகை என்பது எனக்குத் தெரியும். எந்தப் பிரச்னையானாலும் சரி நான் அம்மாவிடம் அதைப் பகிரவும் தீர்வுதேடவும் முடியும். ஆறாவது படித்துக்கொண்டிருந்த போது ஒரு தேர்வை மிக மோசமாக எழுதியிருந்தேன். அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என் அம்மாவை ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவரது முகத்தைப் பார்க்கவே தயங்கிக்கொண்டிருந்தேன். என் பிரச்னையைத் தெரிந்துகொண்ட அம்மா என்னைக் கட்டியணைத்து, `எல்லா நேரமும் எல்லா எக்ஸாம்லயும் சூப்பரா பண்ணிட முடியாது. அடுத்த வாட்டி நல்லா பண்ணிட்டா போச்சு...' என்று அந்தத் தருணத்தை இலகுவாக்கினார். எனக்கு என்ன பிரச்னை என்றாலும் பக்கபலமாக அம்மா இருக்கிறார் என்ற நம்பிக்கை வலுப்பட்டதுடன், அம்மாவை இன் னும் அதிகம் நேசிக்கவும் ஆரம்பித் தேன்.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

டைம் டேட்டா

* 1000 பெற்றோர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில் 46 சதவிகிதப் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுடன் ஒரு வாரத்துக்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். 54 சதவிகிதப் பெற்றோர்களுக்கு பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதில் ஆர்வம் இருக்கிறதாம்.

* சராசரியாக தன்னுடைய 13வது வயதிலிருந்து பெற்றோரின் அருகிலிருப்பதைத் தவிர்க்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள்.

* டீன்ஏஜில் அடியெடுத்துவைத்ததும் பிள்ளைகளுக்கும் தமக்குமான உறவில் மிகப் பெரிய இடைவெளியும் மாற்ற மும் நிகழ்வதாகச் சொல்பவர்கள் 73 சதவிகிதப் பெற்றோர்.

* பிள்ளைகளுக்கும் தமக்குமான இடைவெளி குறையாம லிருக்கும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் 80 சதவிகிதப் பெற்றோர்.

* அதற்காக அவர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவது அவர்களுடைய பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுவது, இசையை ரசிப்பது என நேரம் ஒதுக்குவதாகச் சொல்கிறார்கள். தங்கள் பதின்பருவ பிள்ளைகள் பயன்படுத்தும் நவீன வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில்கூட சில பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

Source: OnePoll Survey

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism