Published:Updated:

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 12 - இது எங்க ஏரியா... உள்ள வராதீங்க...

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...

பதின்பருவத்தை எட்டியதும் பிள்ளைகள், பெற்றோரிடமிருந்து மெள்ள மெள்ள விலக ஆரம்பிக்கிறார்கள்.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 12 - இது எங்க ஏரியா... உள்ள வராதீங்க...

பதின்பருவத்தை எட்டியதும் பிள்ளைகள், பெற்றோரிடமிருந்து மெள்ள மெள்ள விலக ஆரம்பிக்கிறார்கள்.

Published:Updated:
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...

பெற்றோராக இருப்பது கடினம். பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோராக இருப்பது அதைவிட கடினம். பதின்பருவத்தில் அடியெடுத்துவைப்பதற்கு முந்தைய பருவம் வரை பிள்ளைகளுக்கு பெற்றோர்தான் உலகம். அந்த வயதில் தாங்கள் செய்கிற எந்தச் செயலுக்கும் பெற்றோரின் அன்பும் ஆதரவும் முக்கியமென கருதுவார்கள். பிள்ளைகளின் அன்பைத் தக்கவைத்துக்கொள்கிற மாதிரியே பெற்றோரும் நடந்துகொள்வார்கள். ஒரு நல்ல நாளில் இது அத்தனையும் அப்படியே மாறும் என்ற யதார்த்தத்தை பெற்றோர் உணர்ந்து தயாராக இருக்க வேண்டும்.

டாக்டர் ஷர்மிளா

``பதின்பருவத்தை எட்டியதும் பிள்ளைகள், பெற்றோரிடமிருந்து மெள்ள மெள்ள விலக ஆரம்பிக்கிறார்கள். நண்பர்கள், வெளி வட்டாரத் தொடர்புகளால் ஈர்க்கப்படும் அவர்களை அந்த மூன்றாம் நபர்களின் தாக்கம் ஆட்கொள்ளத் தொடங்குகிறது. பிள்ளைகளின் மீதான பெற்றோரின் தாக்கம் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் டீன்ஏஜில் பிள்ளைகள் இதை உணராததுபோலவே நடந்து கொள்வார்கள். பெற்றோரிடமிருந்து விலகி, தமக்கென ஒரு வாழ்க்கைப் பாதையை, தனக்கென ஓர் அடையாளத்தை, தனித் துவத்தை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியை நோக்கி நகர்வார்கள்.

ஆஷ்லி - ஷர்மிளா
ஆஷ்லி - ஷர்மிளா

பதின்பருவத்தினருக்கு பெற்றோரும் குடும்பமும் ஏன் முக்கியம்?

பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள்.வேலை, செலவுகள், பொருளாதார சுமை குறித்த பல கவலைகள் அவர்களுக்கு இருக்கக் கூடும். பிள்ளைகள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை உட்கார்ந்து பேசி, சமாளித்துத் தீர்வுகாணச் செய்யும் அளவுக்கு பெரும் பாலான பெற்றோருக்கு பிள்ளைகளுக்கான கவனத்தையும் நேரத்தையும் ஒதுக்க முடியாத சூழலே நிலவுகிறது.

உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் புதிய மாற்றங்களை, போராட்டங்களை எதிர்கொள்ளும் கடினமான பருவம் டீன்ஏஜ். அந்தக் கட்டத்தில் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் இருப்பதைப் பிள்ளைகளுக்கு உறுதிபடுத்த வேண்டும். குடும்பத்துக்கென விதிமுறைகள், எல்லைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது பிள்ளைகளுக்கு பொறுப் புணர்வு, பாதுகாப்பு போன்றவற்றையும் பெற்றோர் மறைமுகமாக உணர்த்த முடியும்.

பதின்பருவத்தில் பிள்ளைகளின் நடத்தை மாறுவதேன்?

பதின்பருவத்தில் எல்லா பிள்ளைகளும் பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் மூர்க்கமாகவும் மரியாதைக் குறைவாகவும் நடந்துகொள்வதில்லை. அந்தப் பருவத்தில் பிள்ளைகளின் மனநிலை சட்டென்று மாறுகிறது. அவர்களது மூளையின் வளர்ச்சி யின் தன்மை காரணமாக, சட்டென மாறும் உணர்வுகளையும் அவர்களால் கையாள முடிவதில்லை. மரியாதையற்ற நடத்தை என பெற்றோர் கருதும் விஷயத்தின் பின்னால் பிள்ளைகளின் மனக்கவலை அல்லது மன அழுத்தம் என ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். மற்றவர்களின் கவனத்தை தம் பக்கம் திருப்ப முடியும் என்ற எண்ணத்திலும் அப்படி நடந்துகொள்ளும் நண்பர்களைப் பார்த்தும்கூட டீன்ஏஜ் பிள்ளைகள் சிலர் மரியாதையற்ற அலட்சியமான போக்கைப் பின்பற்றலாம்.

பெற்றோர் இதை எப்படிக் கையாளலாம்?

டீன்ஏஜில் பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய அடிப்படை குடும்ப விதிகளை வலியுறுத்தி, அப்படி நடந்துகொள்ள வேண்டிய எதிர் பார்ப்பு உங்களுக்கு இருப்பதைப் புரிய வைக்கலாம். நடத்தையிலும் வார்த்தைப் பரிமாற்றங்களிலும் குடும்ப விதிகள் மிக முக்கியம். உதாரணத்துக்கு ‘நம்ம வீட்டுல யாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடறதில்லை. வேலை செய்யறவங்க, வெளி ஆட்கள்னு யாரையும் ஒருமையில கூப்பிடக் கூடாது' என்பது போன்ற விஷயங்களை குடும்ப விதி களாக அவர்கள் மனதில் பதிய வைக்கலாம்.

வீட்டுக்குள் எந்த விவாதம் எழுந்தாலும் அதற்கு அமைதியாக ரியாக்ட் செய்யும் பக்குவத்தைப் பிள்ளைகளுக்கு வலியுறுத்த வேண்டும். கோபத்தில் கத்துவது, உணர்ச்சியில் கொந்தளிப்பது போன்றவை தவிர்த்து, நிறுத்தி, நிதானமாக, அமைதியாக தன் கருத்தைச் சொல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களை பிள்ளை களுக்கு வலியுறுத்துவதற்கு முன் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும். பிள்ளைகள் எப்படிப் பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ, அவற்றை நீங்கள் முதலில் பின்பற்றி அவர்களுக்கு ரோல் மாடலாகுங்கள்.

டேக் ஹோம் மெசேஜ்

பதின்பருவத்தில் அடியெடுத்துவைக்கும் போது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே பிரச்னைகள் வருவது இயல்புதான். பிள்ளைகள் வளர வளர, பக்குவம் பெற்றதும் பிரச்னைகள் தாமாக சரியாகும். எக்காரணம் கொண்டும் குடும்ப உறவுகளில் சமரசங்கள் செய்யப்படக் கூடாது. பிள்ளைகளுக்கான அன்பை, ஆதரவை, பாதுகாப்பை... இன்னும் எல்லா விஷயங்களையும் உறுதிசெய்ய வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

பதின்ம வயதில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் மாறினாலும் அவர்களுக்கு பெற்றோரிடம் அன்பு குறையாது. தங்கள் வாழ்க்கையில் பெற்றோரின் தலையீடு இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். அதைப் புரிந்துகொண்டு, பிள்ளைகள் மன அழுத்தத் துக்கு ஆளாகாமல், மது, போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விடாமல் ஆதரவாக நிற்பதே பெற்றோரின் முதல் கடமை.''

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 12 - இது எங்க ஏரியா... உள்ள வராதீங்க...

ஆஷ்லி

‘`டீன்ஏஜில் அடியெடுத்து வைத்த பிறகு எனக்கும் அம்மாவுக்கும் இடையே நிறைய வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ‘நீ முன்ன மாதிரி இல்லையே... வித்தியாசமா நடந்துக்கறியே...’ என அம்மா கவலைப்பட்டிருக் கிறார். அதாவது எனக்கு அம்மாவுடன் நேரம் செலவிடுவதைவிடவும், நண்பர்கள், காலேஜ் என வேறு விஷயங்கள் வாழ்க்கையில் பிரதானமாகிவிட்டதாக நினைத்தார். அதை நான் இல்லை என்று மறுக்க மாட்டேன்.

அதே நேரம் முற்றிலும் உண்மை என்றும் சொல்ல மாட்டேன். அந்த வயதில் நான் வாழ்க்கையின் பிற விஷயங்களை ஆராய விரும்பினேன். எனக்கே எனக்காக நிறைய நேரத்தைச் செலவிட விரும்பினேன். அதற்காக அம்மா நினைத்ததைப் போல அவரிடமிருந்து விலகியதாக நினைக்கவில்லை. காலப்போக்கில் அம்மாவுக்கு அது புரிந்தது. இப்போதெல்லாம் நாங்கள் இருவரும் பல நாள்கள் எந்த வேலையையும் செய்யாமல் சேர்ந்திருக்கிறோம். தனித்தனியாகச் செய்ய வேண்டிய விஷயங் களுக்கும் நேரம் ஒதுக்கப் பழகிக்கொண்டோம். டியர் பேரன்ட்ஸ்.... உங்கள் மகளோ, மகனோ.... வளர்ந்திருக்கலாம்... ஆனாலும் அவர்கள் எப்போதும் உங்கள் குழந்தைதான்.’’

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

*****

பிள்ளைகளின் பிரைவஸிக்கு மதிப்பளியுங்கள்...

உங்கள் டீன்ஏஜ் பிள்ளைகள், உடல்நலமில்லாத நிலையில் தனியே மருத்துவரை சந்திக்க விரும்பினால் அதை அனுமதியுங்கள்.

பிள்ளைகளின் ஹேண்ட்பேக், வாலெட் போன்றவற்றை அவர்களின் அனுமதியின்றி திறந்து பார்க்காதீர்கள்.

பிள்ளைகளின் அறைக்குள் செல்வதற்கு முன் கதவைத் தட்டிவிட்டுச் செல்லுங்கள்.

பிள்ளைகளின் செல்போனை ஆராயாதீர்கள்.

அவர்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக் கும்போது ஒட்டுக்கேட்காதீர்கள். கூடிய வரையில் அந்த நேரத்தில் அவர்கள் அருகில் இருப்பதைத் தவிருங்கள்.

நீங்கள்தான் பெற்றோர். ஆனாலும் குழந்தை களின் அந்தரங்கத்துக்கு மதிப்பு கொடுங்கள்.

- Source: Parenteening Seminar Survey

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism