Published:Updated:

தன்னம்பிக்கை வளர உதவுங்கள்... தலைவர்கள் தாமாக உருவாவார்கள்...

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 13 -

தன்னம்பிக்கை வளர உதவுங்கள்... தலைவர்கள் தாமாக உருவாவார்கள்...

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 13 -

Published:Updated:
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

`எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...' என்றொரு பாடல் உண்டு. உண்மைதான்... பிள்ளைகளை நல்லவராகவும் வல்லவராகவும் வளர்ப்பதில் மட்டுமல்ல, தன்னம்பிக்கை நிறைந்தவராகவும் தலைவர்களாகவும் வார்த் தெடுப்பதிலும் பெற்றோரின் பங்கு மகத்தானது.

ஆஷ்லி

``இந்தத் தொடரில் இத்தனை பகுதிகளாக அம்மா நிறையவும் நான் குறைவாகவும் பேசி யிருப்போம். இந்த இதழில் நான் கொஞ்சம் அதிகம் பேச விரும்புகிறேன். பேசவே பயந்து, அம்மாவின் பின்னால் பதுங்கியிருந்தே பழகிய நான், இன்று பேசுகிறேன் என்றால் காரணம் என் அம்மா.

தன்னம்பிக்கை வருவதற்கு முன், தன்னம் பிக்கை வந்த பின் என என் வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். என் டீன்ஏஜ் பயணத்தின் இந்த இரு கட்டங்களும் எனக்கு நன்றாகவே ஞாபகமிருக்கின்றன.

டீன்ஏஜின் முதல் பாதியில் ஆஷ்லி, கூச்ச சுபாவமுள்ளவள். தன்னம்பிக்கையின் ஸ்பெல்லிங்கூட அவளுக்குத் தெரியாது. குடும்ப நிகழ்வுகளில் அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வாள். பயந்தாங்கொள்ளி. சக மனிதர்களை நேருக்குநேர் எதிர்கொள்ளக்கூட கூச்சப்பட்டிருக்கிறாள். அப்படி இருப்பதில் தவறென்ன என்ற எண்ணத்துடன் இருந்த போது, ஒருநாள் அதே விஷயம் எனக்கெதிராக மாறியது. ஆறாவது படித்துக்கொண்டிருந்த போது என் சக மாணவர்கள் என்னை கிண்டல், கேலி செய்தபோது என்னால் அவர் களை எதிர்த்துப் பேச முடியவில்லை. ஒன்றும் செய்யமுடியாமல் குற்ற உணர்வுடன் நிற்க வைத்த அந்த அனுபவம்தான் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் அவசியம் என் கேரக்டரை மாற்றிக்கொண்டாக வேண் டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. இன்று என் அம்மாவுடன் இணைந்து பெற்றோர்களுக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் காரணம் நான் வளர்த்துக்கொண்ட தன்னம்பிக்கை. அதற்கு உதவிய என் அம்மா.

இந்த இறுதி அத்தியாயத்தில் நான் மூன்று முக்கியமான விஷயங்கள் பற்றி பேச விரும்பு கிறேன். பயந்த சுபாவமும் கூச்சமும் நிறைந்த என்னை, இன்று ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கும் சர்வதேசப் பேச்சாளராகவும் மாற்ற காரணமாக இருந்த அந்த மூன்று முக்கியமான டிப்ஸை தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

1. பப்ளிக் ஸ்பீக்கிங்

பெருங்கூட்டத்துக்கு முன் நின்று நான்கு வார்த்தைகளை சரளமாகப் பேசுவதென்பது பெரியவர்களுக்கே நடுக்கத்தை ஏற்படுத்துகிற விஷயம். அசாத்தியமான தன்னம்பிக்கையும் தைரியமும் இருப்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. உங்கள் டீன்ஏஜ் மகளோ, மகனோ அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மாற் றுங்கள். `ரொம்ப பேசாதே... பேச்சு ஓவரா இருக்கே' என்று அடக்காதீர்கள். பொதுவெளி யில் பலர் முன்னிலையில் பேசும்போது உங்கள் டீன்ஏஜ் மகள் அல்லது மகனுக்கு அபாரமான தன்னம்பிக்கை உருவாகும். ஒவ் வொரு மேடையும் ஒவ்வொரு பேச்சும் ஒவ் வொருவரின் கைத்தட்டலும் அவர்களுடைய தன்னம்பிக்கையை நாளுக்கு நாள் வளர்க்கும்.

தன்னம்பிக்கை வளர உதவுங்கள்...
தலைவர்கள் தாமாக உருவாவார்கள்...

2. பெற்றோரின் ஆதரவு

என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரம் இது. என் அம்மா சொன்ன ஒவ்வொரு நம்பிக்கை வார்த்தையும் என் தன்னம்பிக்கையை வளர்த்தது. தினமும் காலையில் ரெடியாகி வரும்போது என் அம்மா என்னைப் பார்த்து, `நீ இன்னிக்கு சூப்பரா இருக்கியே செல்லம்...' என்பார். உபயோகிக்கிற ஒவ்வொரு வார்த்தை யும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந் தார் அம்மா. என் தன்னம்பிக்கையை வளர்த்த தில் அம்மாவின் அப்படிப்பட்ட வார்த்தை களுக்கு முக்கியப் பங்கு உண்டு. வார்த்தைகள் என்ன செய்யும் என யோசிக்கா தீர்கள். அந்த மேஜிக்கை உங்கள் பிள்ளைகள் நிச்சயம் உணர்வார்கள்.

3. பயிற்சி

ரோம் நகரம் ஒருநாளில் கட்ட மைக்கப்படவில்லையே... அப் படித்தான் தன்னம்பிக்கையும். அது மெள்ளமெள்ளதான் வளரும். எந்தச் சூழலிலும் அதைவிட்டுக்கொடுக்காமலிருப்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு உங்கள் குழந்தைக்கு கணக்குப் பாடமே வரவில்லை என வைத்துக் கொள்வோம். அது வரவே வராது என முடிவு செய்வதோ, `நீயெல்லாம் எங்கே உருப்படப் போறே...' என்று பேசுவதோ வேண்டாம். `முடியாதுன்னு எதுவும் இல்லை. பயிற்சியும் முயற்சியும் இருந்தா உன்னாலயும் நிச்சயம் முடியும்' என நம்பிக்கை வார்த்தைகளைப் பேசுங்கள். அதுதான் தன்னம்பிக்கையை வளர்க்கும் மந்திரம். என்னால் முடிந்தது உங்களாலும் முடியும்!''

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

டாக்டர் ஷர்மிளா

``பெற்றோர்களுக்கு குழந்தைகளின் வெற்றிப் பயணத் தில் உதவுவதில் மிக முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் என்ன விரும்புகிறார்கள், என்ன செய்கிறார்கள் என் பதைப் புரிந்துகொண்டு, இந்தப் பயணத்தில் அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் இளம் தலைவரை வெளியே கொண்டு வர முடியும். உங்கள் குழந்தையுடனான வெளிப்படையான உரையாடலின் மூலமும், அவர்களுக்கான சிறந்த வழிகாட்டிகளாக இருந்து, பிள்ளைகள் வளர்வதற்கேற்ற சரியான சூழலை உருவாக்கித் தருவதன் மூலம் இதைச் சாத்தியப்படுத்த முடியும். இவை அனைத்தும் இருக்கும்போது, உங்கள் குழந்தைகள் மிகச்சிறந்த தலைமைப் பண்போடு வளர் வார்கள். என்னால் என் மகளுக்குள் இருந்த தலைவரை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்த முடிந்தபோது உங்களால் முடியாதா என்ன?

தன்னம்பிக்கை வளர உதவுங்கள்...
தலைவர்கள் தாமாக உருவாவார்கள்...

டீன்ஏஜ் பிள்ளை வளர்ப்பென்பது சுமையல்ல... சவால்கள் நிறைந்த சுவாரஸ்ய பயணம். இன்னொரு முறை வாய்க்காத அந்தப் பயணத்தை குற்றம், குறை சொல்லிக் கொண்டு கோட்டை விடாதீர்கள். ஒவ்வொரு நொடியையும் நாளையும் அனுபவித்து மகிழுங்கள். வாழ்த்துகள்.''

நிறைவடைந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism