Published:Updated:

பெற்றோரா... வார்டனா? - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 4

பேரன்ட்டிங் ஸ்டைலில் பிரதானமான நான்கு பிரிவுகளையே பெரும்பான்மை பெற்றோர்கள் பின்பற்றுகிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

பெரும்பான்மை பெற்றோரும் தன்னை ‘ஆகச் சிறந்த’ பெற்றோராகவே நினைத்துக்கொள்கிறார்கள். பிள்ளைகளை வளர்ப்பதில் தன்னுடைய ஸ்டைல்தான் ‘தி பெஸ்ட்’ என்ற எண்ணமும் பலருக்கு உண்டு. அந்த எண்ணத்தில்தான் ‘வளர்ப்பு சரியில்லை’ என்று போகிற போக்கில் அடுத்தவர்களை விமர்சிக்கிறார்கள்.

தன்னுடைய குழந்தை வளர்ப்பு ஸ்டைல்தான் சிறந்தது என்ற எண்ணத்துக்கு வருவதற்கு முன், பல்வேறு வகையான பேரன்ட்டிங் ஸ்டைல்களை பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய குழந்தை வளர்ப்புப் பயணத்துக்கு அது அவசியம், அடிப்படை. நீங்கள் பின்பற்றும் குழந்தை வளர்ப்பு ஸ்டைலானது உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலும் அவர்களது எதிர்கால வாழ்க்கையோடும் தொடர்புடையது.

பொறுப்பான தலைமுறையை உருவாக்குவது மட்டுமே குழந்தை வளர்ப்பின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு, பெற்றோராக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களை உணர்ந்துகொண்டால் உங்களுடைய இந்த இலக்கில் வெற்றியடைய முடியும்.

டாக்டர் ஷர்மிளா

நான்குவகை பேரன்ட்டிங் ஸ்டைல்

பேரன்ட்டிங் ஸ்டைலில் பிரதானமான நான்கு பிரிவுகளையே பெரும்பான்மை பெற்றோர்கள் பின்பற்றுகிறார்கள். கீழ்க்காணும் ஸ்டைல்களில் உங்களுடையது எது என்று கண்டுபிடியுங்கள். அதுபற்றி உங்கள் பிள்ளைகளிடம் பேசி, அவர்களுக்கு அந்த ஸ்டைலில் உடன்பாடு இருக்கிறதா என்பதையும் கேளுங்கள்.

சர்வாதிகார வளர்ப்புமுறை

இப்படிப்பட்ட பெற்றோர், ஸ்ட்ரிக்ட்டான ஹாஸ்டல் வார்டன்களை நினைவுபடுத்து வார்கள். தண்டனை கொடுப் பதை தயங்காமல் செய்கிறவர்கள். வீட்டுக்குள் இந்த வகை பெற் றோருடனான உரையாடல் என்பது ஒருபக்கம் சார்ந்தே இருக்கும். அதாவது பெற் றோர்கள் பேசுவார்கள். அதைப் பிள்ளைகள் கவனிக்க வேண்டும். அது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள். பொதுவாகவே இந்தப் பெற் றோரின் பிள்ளைகள் அதிகம் கேள்விகள் கேட்க அனுமதிக்கப் பட மாட்டார்கள். மிகவும் கண்டிப்பான ஸ்டைல் என்பதால் இது ஆரோக்கியமான பேரன்ட் டிங் ஸ்டைல் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் எப்போதாவது மரியாதையையும் எப்போதும் பயத்தையும் ஏற்படுத்துகிற ஸ்டைல் இது.

பெற்றோரா... வார்டனா? - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... 
இனி இல்லை இடைவெளி! - 4

அதிகாரபூர்வ வளர்ப்புமுறை

பிள்ளைகளின்மீது அக்கறை கொண்ட பேரன்ட்டிங் ஸ்டைல் இது. பிள்ளைகள் எளிதில் அணுகக்கூடிய பெற்றோர்களாக இவர்கள் இருப்பார்கள். இந்தப் பெற்றோர் வளர்க்கும் பிள்ளைகள் தற்சார்பும் சுய ஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு செயலையும் சுயமாக யோசித்து அதற்கேற்ப முடிவெடுக்கும்படி வளர்க்கப்படுவார்கள். இந்த வகை பெற்றோருக்கும் பிள்ளைகளின் மீது எதிர் பார்ப்புகள் இருக்கும். ஆனாலும் அவற்றை பிள்ளைகளுக்குத் தெளிவாக உணர்த்தி விடுவார்கள். அதே நேரம் அந்த எதிர் பார்ப்புகள் குறித்த தங்கள் கருத்துகளை பிள்ளைகளும் பெற்றோரிடம் வெளிப்படை யாகச் சொல்லிவிடுவார்கள்.

மற்ற ஸ்டைல்களுடன் ஒப்பிடும்போது இந்த வகை பேரன்ட்டிங் ஸ்டைலின் மூலம் பிள்ளைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்கலாம் என பல ஆய்வுகள் சொல் கின்றன. இந்த ஸ்டைல் பின்பற்றப்படும் வீடுகளில் அந்த வீட்டுக்கான விதிகள் தெளிவாக உணர்த்தப்பட்டிருக்கும். அதற்கான காரணங்களும் விவாதிக்கப்பட்டிருக்கும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடலில் எப்போதும் சிக்கல் இருக்காது.

அனுமதிக்கும் வளர்ப்புமுறை

முதலில் குறிப்பிட்ட சர்வாதிகார வளர்ப்பு முறைக்கு அப்படியே நேரெதிரானது இது. பிள்ளைகள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்கிற பேரன்ட்டிங் ஸ்டைல் என்று சொல்லலாம். பிள்ளைகள் செய்ய விரும்புகிற விஷயங்களில் பெற்றோரின் தலையீடு அல்லது வழிநடத்தல் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும். இந்த ஸ்டைல் பின்பற்றப்படுகிற வீடுகளில் பெரிய ரூல்ஸ் எதுவுமிருக்காது. பிள்ளைகள் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வுகாண்பார்கள். பெற்றோர் என்பதைத் தாண்டி, பிள்ளைகளுடன் ஃபிரெண்ட்ஸாக பழகுவார்கள். பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசுவார்கள். எல்லா விஷயங்களையும் விவாதிப்பார்கள். ஆனால், பிள்ளைகளாகக் கேட்காதவரை தாமாக அட்வைஸ் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு பிள்ளைகளைப் பற்றி எதிர்பார்ப்புகளே இருக்காது அல்லது மிகக் குறைந்த எதிர்பார்ப்புகளே இருக்கும்.

ஈடுபாடற்ற வளர்ப்புமுறை

பிள்ளைகளுக்கு அளவுகடந்த சுதந்திரம் கொடுப்பவர்கள் இந்த வகை ஸ்டைலை பின்பற்றும் பெற்றோர். மற்ற பேரன்ட்டிங் ஸ்டைல்களோடு ஒப்பிடும்போது பிள்ளை களிடம் மிகக் குறைந்த அக்கறையை, ஈடுபாட்டை, கண்டிப்பை காட்டும் பேரன்ட்டிங் ஸ்டைல் இதுதான். இந்த ஸ்டைலைத் தேர்வுசெய்யும் பெற்றோர், பிள்ளைகளை எல்லா விஷயங்களிலும் தன்னிச்சையாக இருக்க, வாழ அனுமதிப் பார்கள். இந்த ஸ்டைலில் வளர்க்கப்படும் பிள்ளைகள் விரும்பியதை எல்லாம் செய் வார்கள் அல்லது பெற்றோரிடமிருந்து தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வழிகாட்டு தலும் இல்லாததால் தாங்களாகவே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் போல என நினைத்து அப்படியே வளர்வார்கள். பெற் றோருக்கு பிள்ளைகளிடம் எந்த எதிர் பார்ப்புமே இருக்காது.

ஆஷ்லி

என் அம்மா இரண்டாவது வகையைப் பின்பற்றுபவர். எங்கள் வீட்டுக்கென விதிமுறைகள் உண்டு. ஆனால், அவை ஏன் தேவை என்பதையும் அம்மா எனக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதே நேரம் எந்த விஷயத்திலும் என் தரப்பையும் கேட்கத் தயங்கமாட்டார். பொறுப்பு இருக்கும்போது தான் சுதந்திரமும் இருக்கும் என்பது அம்மாவின் கருத்து.

பெற்றோரா... வார்டனா? - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... 
இனி இல்லை இடைவெளி! - 4

எங்கள் வீடு டாக்டர்களால் நிரம்பியது. அதனால்தானோ என்னவோ நான் டாக்ட ராவதில்லை என சிறு வயதிலேயே முடி வெடுத்துவிட்டேன். ஒன்பதாவது படிக்கும் போதே அறிவியல் பாடத்துக்கு பதிலாக பிசினஸ் பாடத்தைத் தேர்வு செய்கிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன். அம்மா பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அறிவியல் பாடத்தைத் தேர்வுசெய்தால் அம்மாவால் எனக்கு படிப்பில் உதவ முடியும் என்றும், ஒருவேளை நான் என் விருப்பப்படி பிசினஸ் பாடத்தைத் தேர்வுசெய்தால் அதில் என் சொந்த முயற்சியில்தான் சாதித்துக்காட்ட வேண்டும் என்றும் சொல்லி முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் எனக்கு கொடுத்தார். அது எனக்கு சுவாரஸ்யமான சவாலாக இருந்தது. நான் விரும்பியதைத் தேர்ந்தெடுக்க எனக்கு சுதந்திரம் கிடைத்தது. கூடவே அதில் நான் பெஸ்ட்டாக வர வேண்டிய பொறுப்பு இருப் பதையும் உணர்ந்தேன். இதனால் படிப்போ, பள்ளிக்கூடமோ எனக்கு ஒருநாளும் அழுத்தம் தரும் விஷயங்களாக இருந்ததே இல்லை. சந்தோஷமாக, சுதந்திரமாக நான் விரும்பிய துறையில் சாதித்தும் காட்டினேன்.

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு