Published:Updated:

வேண்டாம் வளவள... வேண்டும் சட்சட்! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

காலம் மாறிவிட்டது. அதற்கேற்ப மனிதர்களும் மாறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான பெற்றோர்கள் மாற்றத் துக்குத் தயாராக இல்லை

பிரீமியம் ஸ்டோரி

காலம் மாறிவிட்டது. அதற்கேற்ப மனிதர்களும் மாறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான பெற்றோர்கள் மாற்றத் துக்குத் தயாராக இல்லை. பெற்றோராக இருப்பதையே மிகப் பெரிய தகுதியாக நினைத்துக்கொண்டு பிள்ளைகளிடம் பிரசங்கம் செய்பவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால் ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கொண்டிருக்கும் தொழில் நுட்பங்களுக்கேற்ப டீன்ஏஜ் பிள்ளைகள் உடனுக்குடன் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இன்ஸ்டாகிராம் உலகில் வாழும் அவர்களால் 30 விநாடிகளுக்குள் ஒரு வீடியோ, மூன்றே விநாடிகளில் போட்டோவுடன் ஒரு போஸ்ட் என என்ஜாய் செய்ய முடிகிறது. ஆனால், பெற்றோர்களுக்கோ பிள்ளைகளுக்கு லெக்ச்சர் கொடுப்பதிலேயே ஆசை. உண்மையில் பிள்ளைகள் அந்த நேரத்தில் அடுத்து யாருக்கு மெசேஜ் அனுப்பலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

டாக்டர் ஷர்மிளா

``நான் மட்டும் என்ன வானத்திலிருந்து குதித்து வந்தவளா என்ன? உங்களில் ஒருத்தியாக இதையெல்லாம் கடந்து வந்தவள்தான். பெரும் போராட்டத்துக்குப் பிறகு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டவள் நான். ஆஷ்லியின் நடவடிக்கைகள் என்னை உச்சகட்ட எரிச்சலுக்குட்படுத்தியிருக்கின்றன. நானும் எல்லா பெற்றோர் களையும் போலவே அவளிடம் பிரசங்கம் பண்ணியிருக்கிறேன். எங்கேயோ வெறிக்கும் பார்வையும் மனத்தளவில் அந்த இடத்திலிருந்து விலகிய நிலையுமாக இருப்பாள் ஆஷ்லி. `நான் உன்கிட்ட பேசும்போது என் கண்களைப் பார்' என அவளிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அவளது பார்வையே எனக்குத் தெரியாத அளவுக்கு கூந்தலால் பாதி முகத்தை மறைத்தபடி உட்கார்ந்திருப்பாள். எனக்கு கோபம் தலைக்கேறும். அவளோ தனக்கு மியூட் போட்டதுபோல எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பாள். இதே நிலைமையை என்னைப் போலவே பல பெற்றோர் களும் அனுபவித்திருப்பார்கள்.

ஆஷ்லி - ஷர்மிளா
ஆஷ்லி - ஷர்மிளா

ஒருநாள் இதை வேறு மாதிரி அணுக முடிவு செய்தேன். நான் கோபப்படாமல் ஆஷ்லியிடம், `நான் பேசும்போதெல்லாம் ஏன் கவனிக்க மாட்டேங்குறே' என்றேன். `அம்மா.... இதே வார்த்தைகளை, இதே அட்வைஸை நான் ஆயிரம் முறை கேட்டுட் டேன். நீங்க ஏன் எதைச் சொல்றதுன்னாலும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்ல மாட்டேங்கிறீங்க... நீங்க எனக்கு மெசேஜ்லகூட சொல்லலாம். அனாவசியமா கத்தி, கோபப்பட்டு உங்க எனர்ஜியையும் வீணாக்க வேண்டாம். நீங்க என்கிட்ட கோபப்பட்டு கத்தற ஒவ்வொரு வாட்டியும், நான் உலக மகா கெட்டவள் மாதிரியும், உங்க எதிர்பார்ப்புக்கேத்தபடி வாழத் தகுதியில்லாதவளாகவும் ஃபீல் பண்றேன். அப்புறம் நான் முயற்சி பண்றதையே நிறுத்திடறேன்'' என்றாள்.

ஆஷ்லியின் வார்த்தைகள் என் கன்னத்தில் அறைந்ததுபோல இருந்தன. ட்விட்டர் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு ட்விட்டர் ஸ்டைலில் சுருக்கமாக தகவல்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெற்றோர், மணிக் கணக்கில் லெக்ச்சர் அடித்துக்கொண்டிருப்பது சரியே இல்லை என உணர்ந்து கொண்டேன். நீங்கள் சொல்ல நினைப்பதை உங்கள் பிள்ளைகளிடம் சேர்ப்பதா, கத்திக் கூப்பாடு போட்டு, உணர்ச்சிவசப்பட்டு அந்தச் சூழலையே மோசமாக்குவதா... எது உங்கள் நோக்கம் என்பதில் தெளிவாக இருங்கள். இந்த விஷயத்தில் பிள்ளைகள் எதிர்பார்க்கும் ஷார்ட் அண்ட் ஸ்வீட் உரையாடல் நிச்சயம் பலனளிப்பதையும் சூழலை மோசமாக்காமல் இருப்பதையும் நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதாவது, வளவள என்று பேசிக்கொண்டிருக்காமல், சட்சட்டென்று நறுக்குத்தெறித்தாற்போல சுருக்க மாகச் சொல்வதுதான் குழந்தைகளுக் குப் பிடித்தமானதாக இருக்கிறது. இதையும் தாண்டி சில நேரங்களில் முகம் பார்த்துப் பொறுமையாக, குடும்பத்தினர் சேர்ந்து விவாதிக்க வேண்டிய விஷயங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அந்த நிலையிலும் உணர்ச்சிப் பெருக்குக்கு உள்ளாக வேண் டிய அவசியமில்லை. முயற்சி செய்தால் மட்டுமே இதன் பலன் விளங்கும்.''

வேண்டாம் வளவள... வேண்டும் சட்சட்! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 7

ஆஷ்லி

``டீன்ஏஜில் எங்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குப் பொறுமை இருப்பதில்லை. பெற்றோரின் நோக்கம் எங்களுக்குப் புரிந்தாலும் அவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது எங்களுக்கு அது அதிகமாகத் தெரிகிறது. எல்லா நேரத் திலும் அம்மாவின் அட்வைஸோ, உரையாடலோ எனக்கு வெறுப்பைத் தருவதில்லை. அவை லெக்ச்சர் மாதிரி மாறும்போதுதான் பிரச்னையே.... அதுபோன்ற நேரத்தில்தான் நான் மனத்தளவில் அந்த இடத்திலிருந்து விலகி விடுகிறேன். ஒரு விஷயத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவதை எங்கள் வயதினர் விரும்புவதில்லை. அடுத்தென்ன, அடுத்தென்ன என்ற தேடல் எங்களுக்குள் அதிகம். எங்கள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சவா லான, புதிய விஷயங்களைக் கேட்கவே விரும்புகிறோம். எங்களுடன் சேர்ந்து நீங்களும் கொஞ்சம் மாறலாமே...''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

கவனக் குறைவு!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பதின்பருவத்தினர் இணையதளத்தில் தாங்கள் பார்க்கும் ஏதாவது ஒரு விஷயத்தின் மீது செலுத்தும் கவனமானது, 12 நிமிடங்கள் என்கிற அளவுக்கு நீடித்தது. உதாரணத்துக்கு, அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தை நோக்குகிறார்கள் என்றால், குறைந்தபட்சம் 12 நிமிடங்கள் வரை தொடர்ந்து கவனம் செலுத்தி பார்த்துவந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இப்படி கவனம் செலுத்துவது, நிமிடங்களிலிருந்து தடாலடியாக விநாடிகளுக்குக் குறைந்துவிட்டது. அதிலும் டெக்ஸ்டாப், லேப்டாப்பைவிட மொபைல்போன் பயன்படுத்தும்போது அவர்களின் கவனம் ரொம்பவே குறைந்துள்ளது.

வேண்டாம் வளவள... வேண்டும் சட்சட்! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 7

மொபைல் மூலம் பார்க்கும்போது நோட்டிஃபிகேஷன்கள் உள்ளிட்டவை அதிகமாக இருப்பதால், அவர்களின் கவனம் சட்சட்டென்று வேறு விஷயங்களின் பக்கம் திரும்பி விடுகிறது. டெஸ்க்டாப், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, அவற்றின் பெரிய திரை, நோட்டிஃபிகேஷன் தொல்லைகள் வெகு குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் இவற்றில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கிறது. ஆனால், இதுவும் சில விநாடிகள் மட்டுமே. மற்றபடி இணையத்தில் செலவிடுகிற நேரமானது கடந்த 3 ஆண்டுகளில் 49 விநாடிகளாக குறைந்திருக் கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்த நேரமானது குறைந்துகொண்டே வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு