Published:Updated:

`இம்பர்ஃபெக்ட்டா இருப்பது தப்பில்லை!' - பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 7

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

`இம்பர்ஃபெக்ட்டா இருப்பது தப்பில்லை!' - பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 7

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

Published:Updated:
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் 'பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டாக்டர் ஷர்மிளா

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் ஆகச்சிறந்தவர்களாகவும் மற்றவர்களைவிட ஒருபடி மேலானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. அதிலும் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் தங்கள் குழந்தைகள் ஆகச் சிறந்தவர்களாக இருக்க அவர்களைத் தயார்படுத்துவதற்கு பெற்றோர் எந்த அஸ்திரத்தையும் எடுக்கத் தயங்குவதில்லை. பிள்ளைகளின் சாதனைகளின் மேல் பெற்றோரின் கவனம் ஒரேயடியாக குவிவதால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவில் சிக்கல் ஏற்படுகிறது.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

பிள்ளைகள் ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டுடனும் வளர பெற்றோர் அவர்கள் மீது ஓரளவு அழுத்தம் போடலாம். ஆனால் அது எல்லையை மீறும்போது உங்களுடைய பதின்பருவ பிள்ளைகள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகவும் பதற்றத்திற்குள்ளாகவும் வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய அதீத கண்டிப்பு மற்றும் அழுத்தத்தின் காரணமாக பிள்ளைகளின் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் காண்பதை நீங்கள் தவற விடுவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெற்றோர் என்ன செய்யலாம்?

உங்களுடைய குழந்தைப்பருவ அனுபவங்களையும் போராட்டங்களையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளைப் பொருத்தவரை பெற்றோரை தங்களுடைய இடத்தில் பொருத்திப் பார்ப்பதென்பது சற்று சிரமமானதுதான். ஆனாலும் உங்கள் அனுபவங்களை நீங்கள் பிள்ளைகளிடம் பகிரும்போது படிப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மந்தமாக இருப்பதும் விளையாட்டில் ஆர்வமின்றி இருப்பதும் இயல்பானதுதான் என்பதை பிள்ளைகள் உணர்வார்கள்.

பிள்ளைகளிடம் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.


பிள்ளைகளிடம் பேசும்போது 'நீ இப்படிச் செய்திருக்க வேண்டும்' என்றோ 'நீ இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம்' என்றோ பேசுவது அவர்களுடைய கடந்தகாலச் செயல்களை நீங்கள் குற்றம் சாட்டுவதென ஆகிவிடும். அதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கமே என்பதுபோல அவர்களிடம் அணுகுங்கள். ஏற்கெனவே நடந்து முடிந்த விஷயங்களை ரிவர்ஸ் செய்ய முடியாது. எனவே பிள்ளைகளுக்கு முன் காத்திருக்கும் புதிய நாள்களை அவர்கள் புதிய வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுபோல அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

Parenting
Parenting
Photo by RODNAE Productions:

பிள்ளைகளை நீங்கள் அளவுகடந்து நேசிப்பதை உறுதிப்படுத்துங்கள்.

இது ஏன் அவசியம் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சில நேரங்களில் நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பாராட்டும்போது அல்லது திட்டும்போது அவர்களுடைய வெற்றி, தோல்வியை வைத்து அப்படிச் செய்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே எப்போதும் உங்கள் பிள்ளைகளின் மீதான அன்பை வெளிப்படுத்த, உறுதிப்படுத்த தவறாதீர்கள்.

பர்ஃபெக்ட் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.

எந்த விஷயத்தையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு பதில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று சொல்லிப் பழகுங்கள். அப்படிச் சொல்வதன் மூலம் அவர்களின் மீது நீங்கள் வைக்கும் அழுத்தம் தவிர்க்கப்படும்.

நீங்களும் வாழ்க்கையில் அவ்வப்போது தவறு செய்பவர்தான் என்பதை உணர்த்துங்கள்.


இப்படிச் சொல்வதன் மூலம் மனிதர்கள் எல்லோரும் தவறு செய்வது இயல்புதான், அதை நினைத்து குற்ற உணர்வில் வருந்த வேண்டியதில்லை என்ற உணர்வு பிள்ளைகளுக்கு ஏற்படும்.

parenting
parenting

உங்கள் உணர்வுகளை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

யாரோ ஒருவரின் செயல்களால் நீங்கள் கோபமாக இருப்பதையோ வருத்தமாக இருப்பதையோ உங்கள் பிள்ளைகளிடம் பகிர்வதில் எந்தத் தவறும் இல்லை.
இப்படி நீங்கள் வெளிப்படையாக உங்கள் பிள்ளைகளிடம் உங்கள் உணர்வுகளைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு தங்கள் பிரச்னைகளை, உணர்வுகளை உங்களிடம் தைரியமாக வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற தைரியம் ஏற்படும்.

உங்களை நீங்களே நேசிக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்.

உங்களை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதை பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் சில விஷயங்களை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அதற்காக ஏற்கெனவே நடந்துமுடிந்த விஷயங்கள் குறித்த வருத்தம் தேவையற்றது என்பதையும் புரியவையுங்கள்.

டேக் ஹோம் மெசேஜ்

பெற்றோராகிய நாமே இம்பர்ஃபெக்ட்டாக இருந்தால் எப்படி.... என நினைக்கவே வேண்டாம். உங்கள் இம்பர்ஃபெக்ஷனையும் பார்த்து வளரும்போதுதான், வாழ்க்கையில் அப்படி இருப்பதும் இயல்புதான் என்ற எண்ணம் உங்கள் பிள்ளைகளுக்கு வரும். தவறுகள் செய்யும்போது தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள். பிள்ளைகள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்பவர்கள்தாம். அனுபவங்கள்தான் அவர்களுக்கான ஆகச் சிறந்த ஆசான்கள். வாழ்க்கைப் பாடம் கற்றுத்தரும் அந்த அனுபவங்களை வகுப்பறைகள் கற்றுத்தர வாய்ப்பில்லை.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...

ஆஷ்லி

''அம்மா எப்போதும் பர்ஃபெக்ட் என்பது என் எண்ணம். அம்மாவால் தவறுகளே செய்ய முடியாது என நினைத்துக்கொண்டிருந்தேன். அம்மா மிகவும் சிரமப்பட்டு படித்து டாக்டரானவர். அதன் பிறகு எம்.பி.ஏ முடித்து வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பவர். அவருடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்துக் குற்ற உணர்வு கொண்டிருக்கிறேன். டாக்டர்கள் நிரம்பிய குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நானும் டாக்டராவேன் என்பதுதான் குடும்பத்தாரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் எனக்கு அது வேண்டாம் என முடிவெடுத்ததையே நான் என் இயலாமையாக நினைத்த நாள்கள் உண்டு.

அம்மாவுக்கேற்ற மகள் இல்லையோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஒருநாள் இது பற்றி அம்மாவிடம் மனம் விட்டுப் பேசினேன். 'நீ தேர்ந்தெடுத்தது சரியா என்பதைவிடவும் தேர்ந்தெடுத்ததை சரியா செய்யறதுதான் ரொம்ப முக்கியம். அது உன் கையிலதான் இருக்கு. அப்படி நீ தேர்ந்தெடுத்ததில் உன் திறமையை நிரூபிச்சுக் காட்டறதுதான் உன் வெற்றி. அதுல குற்ற உணர்வுக்கு இடமே இல்லை...'' என்று புரியவைத்த பிறகுதான் நான் சமாதானமானேன். இந்த மாதிரியான மனம் திறந்த உரையாடல்கள் என்னைப் போன்ற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வாழ்க்கை குறித்த மிகப் பெரிய தெளிவைத் தரும்.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism