Published:Updated:

சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தையா ‘செக்ஸ்’?

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

- பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 9

பாலியல் கல்விக் கான பால பாடம் வீட்டி லிருந்து பெற்றோர் களிடமி ருந்தே பிள்ளைகளுக்கு வழங்கப் பட வேண்டும் என்பதை குழந்தை களுக்கு எதிராக அடுத்தடுத்து அரங்கேறும் பாலியல் அத்துமீறல் நிகழ்வுகள் அழுத்திச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்த விஷயத்தில் பெற்றோர் தயக்கம் தவிர்த்து முதல் அடியை எடுத்து வைக்காவிட்டால், இனிமேல் நிகழும் ஒவ்வொரு பாலியல் வன்முறையிலும் பெற்றோர்களே முதல் குற்றவாளி களாக இருப்பார்கள். விழித்துக் கொள்வோமா..?

டாக்டர் ஷர்மிளா

``தன் மகளோ, மகனோ ‘செக்ஸ்’ என்ற வார்த்தையை உச்சரித்தாலே டென்ஷனாகும் பெற்றோர்கள் பலர். பெரும்பாலான பெற் றோர்களும் அவர்கள் குழந்தை களாக இருந்தபோது தம் பெற்றோரிடம் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பேசியிருக்க மாட்டார்கள். அதே தயக்கத்தில் தம் பிள்ளைகளிடமும் அந்த உரையாடலைத் தவிர்ப் பார்கள். அப்படிப் பேசாததால் பிள்ளைகள் அந்த விஷயம் குறித்து யோசிக்காமலிருப்பதாக பல பெற் றோருக்கு நினைப்பு. உங்களிடம் பேச முடியாத அந்த விஷயங்களை உங்கள் பிள்ளைகள் டி.வி, இணையதளம், நண்பர்கள் என பல வழிகளில் தெரிந்துகொள் கிறார்கள் என்பதே உண்மை.

இன்னும் சொல்லப்போனால் போதும் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களில் எது சரி, எது தவறு என பகுத்தறியத் தெரியாமலும் குழம்பி இருப்பார்கள். செக்ஸ் என்ற விஷயமே தவறு, அதுகுறித்துப் பேசுவது அதைவிட தவறு என்பதே பிள்ளைகளின் எண்ணம். இப்படி இருக்கையில் ஒரு குழந்தை பாலியல் அத்து மீறலையோ, வன்கொடுமையையோ எதிர் கொள்ளும்போது அதுகுறித்து பெற்றோரிடம் எப்படிப் புகார் அளிக்கவோ, பேசவோ முடியும்?

ஷர்மிளா - ஆஷ்லி
ஷர்மிளா - ஆஷ்லி

பருவ வயதில் ஹார்மோன்களின் வேலை யால் உடல்ரீதியான மாற்றங்கள் நிகழ்வது இயல்பு. தன் உடல் குறித்து, இயல்பாக ஏற்படுகிற பாலியல் உணர்வுகள் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படுவதும் இயல்பே. அது ஒன்றும் தடைசெய்யப்பட்ட விஷயமல்ல. இந்த விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளைச் சரியாக வழிநடத்தினால், பதற்றமும் தவிப்புமின்றி பிள்ளைகள் பாலியல் உணர்வுகளைக் கையாளவும் கடந்துபோகவும் கற்றுக்கொள்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாலியல் குறித்துப் பேசத் தயங்கினால் பிள்ளைகளும் பெற்றோரிடம் தமக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் அத்து மீறல்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அந்தரங்க உறுப்புச் சுகாதாரம், ஆரோக்கியம் பற்றி யெல்லாம் பேசுவதைப் போலவே இலகுவாக பாலியல் உணர்வுகள் குறித்த உரையாடலையும் பிள்ளை களுடன் நிகழ்த்தலாம். பிள்ளை வளர்ப்பில் அது உங்கள் கடமையும் கூட...’’

ஆஷ்லி

‘`டீன்ஏஜ் பிள்ளைகளைப் பொறுத்தவரை ‘செக்ஸ்’ என்பது சென்சார் செய்யப்பட்ட வார்த்தை. செக்ஸ் தொடர்பான விஷயத்தைப் பேசுவதென்றால் அடுத்தவருக்குக் கேட்டுவிடாதபடி, நாங்கள் காதும் காதும் வைத்ததுபோல பேச வேண்டும். நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.

‘ஆமாம்... செக்ஸ் என்பது அந்தரங்கமான விஷயமில்லையா... அதை அப்படித்தானே பேச வேண்டும்?’ என்று என் அம்மா கேட்டதைப்போலவே வேறு சில பெற்றோர் களும் கேட்கலாம். அவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து இப்படிப்பட்ட சித்தாந்தங்களைத் தூக்கிப் போட்டுவிட்டுக் கொஞ்சம் நேர்மையாக யோசிக்கிறீர்களா? நீங்கள், நான் என இந்த உலகத்தில் எல்லோரும் எப்படிப் பிறந்தோம்? நம் பெற்றோர் பாலியல் உறவு கொண்டதன் விளைவாகத்தானே... அதைத் தானே அடுத்தடுத்த தலைமுறை யினரும் செய்யப் போகிறார்கள். இயல்பான அந்த விஷயத்தை ஏன் இவ்வளவு சிக்கலாக்க வேண்டும்?

குறிப்பிட்ட வயதுவரை எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் செக்ஸ் என்றால் ஆபாச ஜோக்ஸும் மோசமான கமென்ட்டுகளும் தான். அப்படி நாங்கள் கேள்விப்படுகிற தகவல்களுக்கு விளக்கம்பெற எங்கள் பெற்றோரை அணுக முடியாததால் இன்டர் நெட், நண்பர்கள், சோஷியல் மீடியா உதவியை நாடுகிறோம். தவறான தகவல்களால், தவறான நபர்களால் வழிதவறிப் போகிறோம். அதன் பிறகு புலம்பி அழுவதற்கு பதில் முன்கூட்டியே பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சரியான தகவல்களைத் தந்து வழிநடத்தலாமே...

‘திடீர்னு எப்படி இதையெல்லாம் பிள்ளைங்ககிட்ட பேசறது...’ என்ற உங்கள் தயக்கமும் நியாயமானதுதான். முதல்நாளே உங்கள் பிள்ளைகளிடம் செக்ஸ் உறவு குறித்தோ, அவர்களது சுய இன்ப உணர்வு குறித்தோ பேசிவிட முடியாதுதான். ஏதேனும் படங்களைப் பார்க்கும்போதோ, பாலியல் அத்துமீறல் தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போதோ மெள்ள மெள்ள உரை யாடலைத் தொடங்குங்கள்.

சென்சார் செய்யப்பட வேண்டிய வார்த்தையா ‘செக்ஸ்’?

உங்கள் பிள்ளைகளுக்கு சுய இன்பம் காண்கிற பழக்கம் இருப்பது தெரியவந்தால், ஏதோ கொலைக் குற்றமே செய்துவிட்டதுபோல ரியாக்ட் செய்யாதீர்கள். பருவ வயதில், ஹார்மோன்களின் தூண்டலால் அதுபோன்ற உணர்வுகளும் செயல்களும் இயல்பானவையே என மருத்துவரீதியாக, அறிவியல்பூர்வமாகப் புரிய வையுங்கள். தேவைப்பட்டால் மருத்து வரின் உதவியாடு இதை பிள்ளைகளிடம் பேசலாம். உங்களது இந்த அணுகுமுறை, எப்பேர்ப்பட்ட தர்மசங்கடமான விஷயத்தை யும் பெற்றோரிடம் தைரியமாக விவாதிக்க லாம், ஆலோசனை கேட்கலாம் என்ற தைரியத்தை பிள்ளைகளுக்குத் தரும். தயக்கம் தவிர்ப்போமா..?’’

- ஹேப்பி பேரன்ட்டீனிங்...

****

டீன் டேட்டா

* பதின்ம வயதில் சுய இன்ப பழக்க அனுபவம் உள்ள ஆண்கள் 45.9 சதவிகிதம், பெண்கள் 12.7 சதவிகிதம். அவர்களில் 14 சதவிகித ஆண்களுக்கும், 9.2 சதவிகித பெண்களுக்கும் அந்தப் பழக்கம் ஆரோக்கி யத்தை பாதிக்குமோ என்ற கவலை இருக் கிறது.

* பாலியல் விழிப்புணர்வு பற்றி சொல்லித்தர மிகச் சிறந்த நபர்கள் என்ற வரிசையில் பெண்கள் முதலிடம் தருவது தங்கள் அம்மாக்களுக்கு. அதாவது 62 சதவிகிதம்.அப்பாக்களுக்கு அதில் மிகமிக குறைந்த பங்கீடே இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது 1.7 சதவிகிதம் மட்டும்தானாம்.அதுவே ஆண் பிள்ளைகளின் பட்டியலில் நண்பர்களுக்கே முதலிடம்... 31.7 சதவிகிதம். குறைந்த பங்கீடு அம்மாக்களுக்காம்... 13.2 சதவிகிதம்.

Source- NCBI