Published:Updated:

`முதல் சந்திப்பில் தொடங்கி திருமணம் வரை!’- மருதாணியில் ஒரு காதல் கதை #ViralVideo

நானும் என் காதலரும் 16 வயதில் எங்கள் காதலை பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம். அது கொல்கத்தாவில் நிகழ்ந்தது என்பதால் ஹவுரா பாலத்தையும் வரையச் சொன்னேன்.

மருதாணி
மருதாணி

`கண்ணில்படாதது கருத்திலும் நில்லாது' என்பார்கள். இது காதலுக்கும் பொருந்தும். அதிலும் தொலைதூரக் காதலுக்கு இது நிறையவே பொருந்தும். ஆனால், வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் ஓர் அழகான விதிவிலக்கு இருக்குமல்லவா?

ஹைதராபாத்தைச் சேர்ந்த லீனா பூஷன் தன்னுடைய டிக் டாக்கில் பகிர்ந்த காதல் வீடியோ ஒன்று அப்படியோர் அழகான விதிவிலக்காக நெட்டிசன்களின் கண்களுக்குத் தெரிந்ததால், அவருடைய வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த வீடியோவில் மணப்பெண் ஒருவர், தன் திருமணத்துக்காகத் தன் இரண்டு கைகளிலும் வைத்திருக்கிற மருதாணி டிசைன்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி அதன் பின்னணியில் இருக்கிற தங்கள் காதல் கதைகளை விவரிக்கிறார்.

மருதாணி
மருதாணி

``எங்களுடையது 8 வருடக் காதல். அதைப் புகைப்பட நினைவுகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், அந்த நினைவலைகளை என் கைகளில் மெஹந்தி டிசைனாகப் போடச் சொன்னேன். இந்த மெஹந்தி டிசைனின் ஓரிடத்தில், ஆணும் பெண்ணுமாக இரு வளரிளம் பருவத்தினர் இருக்கிறார்கள் அல்லவா? அது நாங்கள்தான். நானும் என் காதலரும் 16 வயதில் எங்கள் காதலை பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம். அது கொல்கத்தாவில் நிகழ்ந்தது என்பதால் ஹவுரா பாலத்தையும் வரையச் சொன்னேன். அதைத்தான் இந்த டிசைன் குறிப்பிடுகிறது.

``கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியான கணவன்!" - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதற்கு மேலே சுதந்திர தேவி சிலை டிசைன் இருக்கிறது. நான் நியூயார்க்கில் படிப்பதற்காக அவரைப் பிரிந்து சென்றேன். அதைச் சுட்டிக்காட்டவே இந்த டிசைனை வரையச் சொன்னேன்'' என்கிற அந்த மணப்பெண், ஒரு எம்பளத்தைச் சுட்டிக்காட்டியவர், அதைப்பற்றிச் சொல்வதற்கு முன்னால் அதிகப்படியான மகிழ்ச்சியில் சிரிக்க ஆரம்பிக்கிறார்.

காதலர்கள்
காதலர்கள்

``இந்த எம்பளம், நாங்கள் படித்த பள்ளிக்கூடத்தினுடையது. அதனால், அதையும் என் கல்யாண மெஹந்தியில் சேர்த்துவிட்டேன்'' என்பவர், இன்னொரு டிசைனைச் சுட்டிக்காட்டி ``என் காதலர் என்னிடம் தன் காதலைச் சொன்ன ஹோட்டலின் எம்பளம் இது'' என்கிறார்.

வாழ்க பல்லாண்டு!