Published:Updated:

லிவ் இன் ரிலேஷன்ஷிப், குழந்தை! -பிரிட்டன் வரலாற்றில் பதவியில் இருந்தபடியே மணமுடிக்கும் முதல் பிரதமர்

போரீஸ் ஜான்சன் - கேரீ சைமண்ட்ஸ்
போரீஸ் ஜான்சன் - கேரீ சைமண்ட்ஸ்

போரீஸுக்கு 55 வயது, சைமண்ட்ஸுக்கு 31 வயது. கூடுதல் தகவல், போரீஸுக்கு சைமண்ட்ஸ் மூன்றாவது மனைவி.

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், முன்னாள் இதழியலாளர், வரலாற்றாளரும்கூட. இவரின் இணை, கேரீ சைமண்ட்ஸ். இவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இது உலகம் முழுக்கச் செய்தியாகக் காரணம், இவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஜோடி என்பதுதான்.

கேரீ சைமண்ட்ஸ்
கேரீ சைமண்ட்ஸ்

சைமண்ட்ஸ், தங்களது நிச்சயதார்த்த செய்தியையும் விரைவில் தங்களுக்குக் குழந்தை பிறக்கவிருக்கும் செய்தியையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார். இச்செய்தி அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியோடு பேசப்பட்டு வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் போரீஸுக்கு 55 வயது, சைமண்ட்ஸுக்கு 31 வயது. கூடுதல் தகவல், போரீஸுக்கு சைமண்ட்ஸ் மூன்றாவது மனைவி.

`திறன், ஆங்கிலம் முக்கியம்; சம்பள உச்சவரம்பு!’-குடியேற்றத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த பிரிட்டன்

போரீஸின் முதல் மனைவி, அலெக்ரா மோஸ்டைன் ஓவன். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது சந்தித்துப் பின் 1987-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அந்தத் திருமணம் ஆறு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது மனைவி மரீனா வீலர். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த இவர்களுக்கு கோர்ட்டில் டைவர்ஸ் முடிவாகிவிட்டது. போரீஸ் - வீலர் தம்பதிக்கு லாரா, மிலோ, கஸீ, தியோடர் ஆகிய குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போரீஸ் ஜான்சன்
போரீஸ் ஜான்சன்

தற்போது, போரீஸின் லிவ் இன் பார்ட்னர் சைமண்ட்ஸ் கருத்தரித்திருக்கிறார். ஐரோப்பிய பிரசாரமொன்றில் கடுமையாக போரீஸை விமர்சித்த எழுத்தாளர் ருத் டேவிட்சன், போரீஸுடன் முரண்பட்டு அரசுப் பதவியிலிருந்து விலகிய சாஜித் டேவிட் போன்ற பலரும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் கடந்து போரீஸுக்கு வாழ்த்து ட்வீட்களை வாரி வழங்கி வருகின்றனர்.

`ஐரோப்பிய கட்டமைப்பு; மண் தெரியாத சாலைகள்!’- பிரமிக்க வைக்கும் பவுன்ட்ஷோலிங் நகரம் #MyVikatan

இங்கிலாந்து வரலாற்றில், பிரதமர் பதவி வகிப்பவரின் முதல் லிவ் இன் பார்ட்னர் ஆனார் சைமண்ட்ஸ். மேலும், 250 ஆண்டுக்கால வரலாற்றில், பதவிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் முதல் பிரதமர் ஆகவிருக்கிறார் போரீஸ்.

அடுத்த கட்டுரைக்கு