Published:Updated:

சென்னை என் குடும்பத்தின் மகிழ்ச்சியைப் பறித்ததா? #LetsSpeakRelationship

இடமாற்றத்தால் மனஅழுத்தம் ஏற்படுமா என்று கேட்டிருக்கிறீர்கள். கிராமத்துக்கும் சென்னை போன்ற நகர சூழ்நிலைகளும் வெவ்வேறானவை.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

நாங்கள் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பம். என் கணவரது வேலை மாற்றத்தால சென்னைக்கு குடும்பத்துடன் வந்துவிட்டோம். குழந்தைகள் இங்க புதுப் பள்ளிக்கூடத்தில் படிக்கறாங்க. ஆனால், ஊரில் இருந்த நிம்மதி இங்க இல்லை. எங்க குடும்பமே மன அழுத்தத்தில் இருக்கிறதா உணர்கிறோம். இது இடமாற்றத்தால் வந்த சிக்கலா.. இதற்குத் தீர்வு இருக்கா.. என் குடும்பம் திரும்பவும் மகிழ்ச்சியாக இருக்குமா?

-அனுராதா

`` கணவருக்கு என்ன வேலை, பிள்ளைகள் என்ன வகுப்புகளில் படிக்கிறார்கள், நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்களா... என்பது போன்ற விவரங்கள் எதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. இடமாற்றத்தால் மனஅழுத்தம் ஏற்படுமா என்று கேட்டிருக்கிறீர்கள். கிராமத்துக்கும் சென்னை போன்ற மெட்ரோக்களுக்குமான சூழ்நிலைகள் வேறு. நம்மை ரிலாக்ஸாக்கிக் கொள்வதற்குக்கூட கிராமத்தில் இருப்பதுபோல வயல்வெளிகளை, உறவுகளைச் சென்னை போன்ற மெட்ரோக்களில் அதிகம் பார்க்கமுடியாது.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

சென்னை, அதன் தட்பவெப்பம், உணவு, மக்கள் என அத்தனைக்கும் ஏற்ற மாதிரிப் பழகிக்கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும். இது ஊர் மாற்றத்தால் ஏற்படும் பிரச்னைதான். குழந்தை பிறந்தவுடனேயே அழுகிறது. ஆனால், வளர வளர அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறது.

அதுபோலத்தான் இதுவும். இதைப் பெரிய விஷயமாகப் பார்க்காமல், வார இறுதியில் உங்கள் குடும்பத்துடன் அமர்ந்து இதுபற்றிப் பேசவும். குடும்பத்துக்கு முதன்மையானது எது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடன் பேசிப் பட்டியலிடுங்கள். அதன்படியே செயல்படுங்கள். ஊரில் இருப்பதுபோல இங்கே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாகப் பேசமாட்டார்கள். சென்னையில் நண்பர்களைத் தேடுவது கடினம்தான். இருந்தும் மனம் தளர வேண்டாம், நண்பர்களிடம் அதிகம் உரையாடுங்கள்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

அதிகாலையில் நடைப்பயிற்சி அல்லது வார இறுதியில் விளையாட்டு என குடும்பத்துடன் குழுவாக ஏதாவது ஒன்றைச் செய்யவும். அது உங்களிடையேயான புரிதலை அதிகரிக்கும். அனைத்துச் சிக்கல்களுக்கிடையிலும் உங்கள் உறவை வலுப்படுத்தும். நிச்சயம் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மீண்டும் கிடைக்கும். அதுபோலத்தான் இதுவும். இதைப் ..பெரிய விஷயமாகப் பார்க்காமல், வார இறுதியில் உங்கள் குடும்பத்துடன் அமர்ந்து இதுபற்றிப் பேசவும்.

குடும்பத்துக்கு முதன்மையானது எது.. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடன் பேசிப் பட்டியலிட்டு அதன்படி செயல்படுங்கள். ஊரில் இருப்பதுபோல இங்கே அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாகப் பேசமாட்டார்கள். சென்னையில் நண்பர்களைத் தேடுவது கடினம்தான். இருந்தும் மனம் தளர வேண்டாம், நண்பர்களிடம் அதிகம் உரையாடுங்கள். அதிகாலையில் நடைப்பயிற்சி அல்லது வார இறுதியில் விளையாட்டு என குடும்பத்துடன் குரூப் ஆக்டிவிட்டியாக ஏதாவது ஒன்றைச் செய்யவும். அது உங்களிடையேயான புரிதலை அதிகரிக்கும். அனைத்துச் சிக்கல்களுக்கிடையிலும் உங்கள் உறவை வலுப்படுத்தும். நிச்சயம் உங்கள் குடும்பத்துக்கு மீண்டும் மகிழ்ச்சி கிடைக்கும்".

- மருத்துவர் கவிதா, குடும்ப நல ஆலோசகர்

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship