லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

காதலே... காதலே...

காதலே... காதலே...
பிரீமியம் ஸ்டோரி
News
காதலே... காதலே...

"என் கணவர் கிருஷ்ணாவும் நானும் காதலிச்சுக்கிட்டிருந்த நேரம். ஒருமுறை என் பிறந்த நாளன்னிக்கு, அவர் உடல்ல என் பெயரை பச்சைக்குத்திக்கிட்டார், `நான் உனக்குக் கொடுக்கிற பெஸ்ட் கிஃப்ட் இது'னு வாழ்த்தினார்.

காதலே... காதலே...

ஆறாம் தேதி ஆச்சர்யம்!

"2018-ம் வருஷம், ஏப்ரல் 6-ம் தேதி... என் கணவர் சத்யாவும் நானும் காதலை வெளிப் படுத்தினோம். அந்த மகிழ்ச்சியை ஒரு வருஷத்துக்குக் கொண்டாடணும்னு சத்யா ஆசைப் பட்டார். மே மாசத்துலேருந்து மாசாமாசம் 6-ம் தேதியில ஏதாச்சும் ஒரு பரிசு கொடுத்து என்னை சர்ப்ரைஸ் செஞ்சார். தினமும் நாங்க சந்திச்சாலும், அந்த 6-ம் தேதி சந்திப்பை ரொம்பவே ஸ்பெஷலாக்கினார். ஒருமுறை கச்சேரிக்காக அமெரிக்கா போயிருந்தேன். என் தோழியும் நடிகையுமான ஜனனி ஐயர் அப்போ என்கூட இருந்தாங்க. ஜனனி மூலமா அந்த மாசமும் எனக்கு கிஃப்ட் கிடைக்கச் செய்தார் சத்யா. ஒருமுறை மலேசியா கூட்டிட்டுப்போய் சத்யாவுக்குப் பிடிச்சதையெல்லாம் வாங்கிக்கொடுத்து நான் சர்ப்ரைஸ் செஞ்சேன்.''

- பின்னணிப் பாடகி என்.எஸ்.கே.ரம்யா

காதலே... காதலே...

ஐ லவ் யூ கார்டு இன்னும் வெச்சிருக்கேன்!

"என் கணவர் முரளி கிருஷ்ணனும் நானும் ஒரே காலேஜ்ல படிச்சோம். ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறப்போ காதலர் தினத்தப்போ கிரீட்டிங் கார்டு கொடுத்து புரொபோஸ் செஞ்சார். காலேஜ் முடியுற வரைக்குமே அவர்கிட்ட என் விருப்பத்தை நான் சொல்லலை. ஆனா, அந்த கார்டை பத்திரமா வெச்சிருக்கேன். சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்துக்கிறது எங்களுக்குள்ள ரொம்ப ஸ்பெஷல். ஒருமுறை எங்க கல்யாண தினத்தப்போ ஊட்டியில `மாறா' படத்தோட ஷூட்டிங்ல இருந்தேன். படக்குழுவினர்கிட்ட சொல்லி, கேக் கட்டிங் செலிபிரேஷனுக்கு என் கணவர் ஏற்பாடு செய்ய வெச்சார். மொத்த யூனிட்டின் வாழ்த்தும் எனக்குக் கிடைச்சது. அதை மறக்கவே முடியாது.''

- நடிகை ஷிவதா நாயர்

காதலே... காதலே...

24 மணி நேரம்... 24 கிஃப்ட்!

"என் கணவர் கிருஷ்ணாவும் நானும் காதலிச்சுக்கிட்டிருந்த நேரம். ஒருமுறை என் பிறந்த நாளன்னிக்கு, அவர் உடல்ல என் பெயரை பச்சைக்குத்திக்கிட்டார், `நான் உனக்குக் கொடுக்கிற பெஸ்ட் கிஃப்ட் இது'னு வாழ்த்தினார். அந்த அன்புல ரொம்பவே நெகிழ்ந்துட்டேன். இன்னொரு பிறந்தநாளுக்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு கிஃப்ட்னுநாள் முழுக்க கிஃப்ட்டா கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். கல்யாணமானப்போ அவருக்கு வாலெட் ஒண்ணு கிஃப்டா கொடுத்தேன். அதை என் ஞாபகமா இப்ப வரைக்கும் பயன்படுத்துறார். பிறந்தநாள், கல்யாணநாள்ல ஷூட்டிங்ல யாராச்சும் ஒருத்தர் பிஸியா இருப்போம். அதனால, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிஃப்ட் கொடுத்து சந்தோஷப்படுவோம்!''

- நடிகை சாயா சிங்

காதலே... காதலே...

அந்த மனசுதான் காதல் பரிசு!

‘`எங்க கல்யாணத்தின்போது அவர் ஆஸ்திரேலியாவுல வேலை பார்த்துட்டு இருந்தார். கல்யாணத்துக்குப் பிறகு சில வருஷங்கள் பெங்களூர்ல வேலை பார்த்தார். மறுபடியும் ஆஸ்திரேலியா போயிட்டார். வீடு, எனக்கான வேலையெல்லாம் ஏற்பாடு செய்ததும், நானும் ஆஸ்திரேலியா போற பிளான்ல இருந்தோம். அந்த நேரத்துல எனக்கு மீடியாவுல வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. என் ஆர்வத்தைப் பார்த்துட்டு என் கரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் வெளிநாட்டு வேலையை விட்டுட்டு இந்தியா வந்து தன் வேலையை அமைச்சுக்கிட்டார். என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த அந்த மனசுதான் எனக்கு மிகப்பெரிய காதல் பரிசு!

- சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்ஸர் அனிதா சந்தோக்

காதலே... காதலே...

உன் உயிர் என்னிடமும்... என் உயிர் உன்னிடமும்...

‘`நாங்க ரெண்டு பேருமே அடிக்கடி கிஃப்ட் ஷேர் பண்ணிப்போம். 14 வருஷங்களுக்கு முன்னாடி அவர் எனக்காக ஒரு போட்டோ ஃபிரேம் கிஃப்ட் பண்ணாரு. அதுல ரெண்டு பறவைகள் இருக்கும். பறவைகளுக்கு பக்கத்துல , ‘உன் உயிர் என்னிடமும்... என் உயிர் உன்னிடமும்’னு எழுதியிருக்கும். இன்னிக்கு காஸ்ட்லியான கிஃப்ட்ஸை பரிமாறிக் கிட்டாலும், அவர் கொடுத்த அந்த போட்டோ ஃபிரேம்தான் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்.’’

- நடிகை சுஜா வருணி

காதலே... காதலே...

மறக்கவே முடியாத கல்யாணப் பரிசு அது!

‘`கல்யாணத்தப்போ, ஒரு பொண்ணுக்கு பிறந்த வீட்ல சில சீர் செய்வாங்க. புகுந்த வீட்ல சில சீர் செய்வாங்க. எனக்கு எல்லாமும் செஞ்சது அவர்தான். காதல் திருமணம்கிறதால, சட்டுனு திட்டமிட்டு உடனே செஞ்சுக்கிட்டோம். கல்யாணத்துக்காக நான் அவரோட ஊருக்குப் போயிட்டேன். அன்னிக்கு, அவர் உழைச்சு சம்பாதிச்ச பணத்துலதான் பட்டுப் புடவை, தாலி, தோடு, கொலுசுன்னு கல்யாணப் பொண்ணுக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் வாங்கிக் கொடுத்தார். இதுக்கு முன்னாடியும் பின்னாடியும் எத்தனையோ பரிசுகள் பரிமாறிக்கிட்டிருந்தாலும், இதுக்கு ஈடாக முடியாதில்லையா?’’

- ராஜலட்சுமி செந்தில் கணேஷ்

காதலே... காதலே...

ரோஜா நிற ஷர்ட்டும் கையெழுத்திட்ட புத்தகங்களும்...

‘`நாங்கள் பரஸ்பரம் கொடுத்துக்கொண்ட முதல் பரிசை எப்போதும் மறக்க முடியாது. அவரிடம் என் காதலை வெளிப்படுத்துவதற்கான தயாரிப்பிலிருந்த காலகட்டத்தில் வந்த அவருடைய பிறந்த நாளுக்கு, ஒரு ஜீன்ஸ் ஷர்ட் வாங்கிப் பரிசளித்தேன். அதன் நிறம் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. நாட்டு ரோஜாவின் இதழ்கள் ஒன்று சேரும் உள்பகுதியில் அடர்த்தியான செந்நிறத்தில் இருந்தது அந்த ஷர்ட். அடுத்து வந்த என்னுடைய பிறந்த நாளுக்கு, கந்தர்வன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி, அவற்றில் அவருடைய அழகான கையெழுத்தில் வாழ்த்துகள் என்று எழுதிப் பரிசளித்தார்.’’

- கவிஞர் அ.வெண்ணிலா

காதலே... காதலே...

மோதிரத்தைக் கொடுத்து, செயினை வாங்கி...

‘`நாங்க நண்பர்களா இருந்தப்போ அவங்க எனக்கு ஒரு ஃபிரெண்ட்ஷிப் பேண்ட் கிஃப்ட் பண்ணாங்க. புரொபோஸ் பண்ணதுக்கு அப்புறம், வந்த முதல் வேலன்ட்டைன்ஸ் டேவுக்கு அவங்களுக்கு சர்ப்ரைஸா நான் ஒரு ரிங் வாங்கியிருந்தேன். அதை அவங்க கிட்ட கொடுத்தபோது, ஷ்ரேயா சர்ப்ரைஸா எனக்கு செயின் கிஃப்ட் பண்ணாங்க. நம்மள மாதிரியே யோசிச்சு இருக்காங்களேனு ரொம்ப ஹேப்பியா ஆயிட்டேன். அந்த முதல் கிஃப்ட்... மறக்க முடியாத கிஃப்ட்டும் கூட!’’

- சின்னத்திரை நடிகர் சித்தார்த்

காதலே... காதலே...

பூப்போட்ட பர்கண்டி கலர் சுடிதார்...

``எங்களுக்கு கல்யாணம் ஆனபோது, எனக்கு 21 வயசு. உமாவுக்கு 19 வயசு. நான் அப்போ ரெண்டு படம்தான் பண்ணியிருந்தேன். அந்த ரெண்டு படத்துலயுமே எனக்கு சம்பளம் கிடையாது. அதுக்குப் பிறகும், எனக்கு ஏத்த மாதிரி ஒரு படமும் அமையல. அப்புறம் குடும்பத்த நடத்துறதுக்காக, ஒரு கேபிள் டிவி ஆரம்பிச்சேன். அந்த வருமான மும் பத்தலை. முதல் முதலா உமாவுக்கு பாண்டிபஜார் ரோட்டுக்கடைல பூப்போட்ட பர்கண்டி கலர் சுடிதார் வாங்கித் தந்தேன். அது உமாவுக்கு அவ்ளோ பிடிச்சது.''

- நடிகர் ரியாஸ்கான்