Published:Updated:

பிள்ளை வளர்ப்பு சுமையல்ல... சுகம் | பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 23

Parenting (Representational Image)

பெற்றோருடன் இணக்கமான உறவுமுறையில் இருக்கும் பிள்ளைகள் வெளியுலகத்திலும் மற்றவர்களுடன் பாசிட்டிவ்வான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார்கள். சக வயதினருடனும், நண்பர்களுடனும் அவர்களுக்கு சுமுக உறவு நிலவும். பெற்றோருடன் இணக்கமாக இருக்கும் பிள்ளைகளின் அறிவாற்றல் மேம்படும்.

பிள்ளை வளர்ப்பு சுமையல்ல... சுகம் | பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 23

பெற்றோருடன் இணக்கமான உறவுமுறையில் இருக்கும் பிள்ளைகள் வெளியுலகத்திலும் மற்றவர்களுடன் பாசிட்டிவ்வான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார்கள். சக வயதினருடனும், நண்பர்களுடனும் அவர்களுக்கு சுமுக உறவு நிலவும். பெற்றோருடன் இணக்கமாக இருக்கும் பிள்ளைகளின் அறிவாற்றல் மேம்படும்.

Published:Updated:
Parenting (Representational Image)

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.

பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள், அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால், விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிள்ளை வளர்ப்பு... சுமையல்ல, கொண்டாட்டம்...

பிள்ளை வளர்ப்பு என்பது ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்வோடு கடக்க வேண்டிய பயணம். ஆனால், பல பெற்றோர்களும் அதை போருக்கு நிகராகக் கருதுகின்றனர். அன்றாட வாழ்வில் எளிதில் பழகக்கூடிய சில பழக்க வழக்கங்களின் மூலம், பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த முடியும்.

டீன் ஏஜ் என்பது குறும்புகள் நிறைந்த பருவம். அந்தப் பருவத்தில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பிள்ளைகள் நிறைய மாற்றங்களை உணர்வார்கள். பிள்ளைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. அளவுக்கு அதிகமாக அவர்களைக் கட்டுப்படுத்தாமல், தேவையான சுதந்திரத்தைக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

டீன் ஏஜில் அடியெடுத்து வைத்ததுமே பிள்ளைகளுக்கு குடும்பத்தின் மீதான முக்கியத்துவம் போய்விடும், குடும்பத்தார் இரண்டாம் பட்சமாகிவிடுவார்கள் என்ற பொதுக்கருத்து ஒன்று உண்டு. உண்மை அதுவல்ல. உங்கள் குழந்தை எப்போதும்போல டீன் ஏஜ் பருவத்திலும் உங்கள் சப்போர்ட்டை எதிர்பார்க்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெற்றோர்கள் - பிள்ளைகளுக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்துவது எப்படி?

குடும்பமாகச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது.

குடும்பமாக வெளியில் செல்வது.

பிள்ளைகள் பெற்றோருடன் இருக்கும்போது அவர்களை மனதளவில் சௌகர்யமாக, மகிழ்ச்சியாக உணரச் செய்வது.

குடும்பப் பொறுப்புகள் சிலவற்றை பிள்ளைகளிடம் ஒப்படைப்பது.

குடும்ப விதிகளைக் கடைப்பிடிப்பது.

ஆண்- பெண் - குடும்பம்
ஆண்- பெண் - குடும்பம்
Representational image

இந்தப் பிணைப்பு ஏன் முக்கியம்?

பெற்றோருடன் இணக்கமான உறவுமுறையில் இருக்கும் பிள்ளைகள், வெளியுலகத்திலும் மற்றவர்களுடன் பாசிட்டிவ்வான அணுகுமுறையுடன் நடந்துகொள்வார்கள். சக வயதினருடனும் நண்பர்களுடனும் அவர்களுக்கு சுமுக உறவு நிலவும்.

ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போதும், கடினமான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்போதும் உணர்வுகளை அழகாகக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்வார்கள்.

பெற்றோருடன் பாதுகாப்பான, இணக்கமான உறவில் இருக்கும் பிள்ளைகளின் அறிவாற்றல் மேம்படும்.

பிள்ளைகளின் தினசரி நடவடிக்கைகளை ஆரோக்கியமான முறையில் பெற்றோர் கண்காணிக்கும்போது, பிள்ளைகள் படிப்பிலும் இதர நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திறன்களையும், சமூக மதிப்பீடுகளையும் கற்றுக்கொள்வார்கள்.

எப்படி பலப்படுத்தலாம்?

நம் பிள்ளைகள்தானே என உரிமை எடுத்துக்கொள்ளாமல் அவர்களை அன்போடும், மரியாதையோடும் நடத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. உதாரணத்துக்கு பிள்ளைகளை கண் பார்த்துப் பேசுவது, அவர்களுடன் முகம் மலர உரையாடுவது, புன்னகையோடு அணுகுவது, அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களைப் பாராட்டுவது போன்றவற்றைச் செய்ய வேண்டும்.

இது தவிர... வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிள்ளைகளிடம் `ஐ லவ் யூ' சொல்லலாம்.

பிள்ளைகளுக்கு எல்லைகள் விதித்து, விதிமுறைகளை வலியுறுத்த வேண்டும். அவை மீறப்பட்டால் நடக்கும் விளைவுகளையும் சொல்லி வளர்க்க வேண்டும்.

பிள்ளைகள் பேசுவதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் இடத்தில் தம்மைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். பிள்ளைகள் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர்கள் பெற்றோருடன் பேச முடிய வேண்டும், அதுவும் எந்தத் தொந்தரவும் இன்றி.

ஒருவேளையாவது பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ்
டீன் ஏஜ்

பிணைப்பு பலமாவதால் என்ன பலன்?

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு பலப்படுவதால் பிள்ளைகளின் டீன் ஏஜில் மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்துக்கும் அந்த அணுகுமுறை பெரிய உதவியாக இருக்கும்.

உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வளரப் பழகுவார்கள்.

பிள்ளைகளின் மனநலம் மேம்படும்.

சுய ஊக்கம் அதிகரிக்கும்.

குழந்தைகளின் அனைத்துவிதமான வளர்ச்சிக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இணக்கமான, பாசிட்டிவ்வான உறவுதான் அடிப்படை. எத்தனை வேலைகள் இருந்தாலும் பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்குவது, பிள்ளைகளிடம் அன்பையும் மரியாதையும் காட்டுவது, பிள்ளைகள் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பது, குடும்ப விஷயங்களில் அவர்கள் முடிவுகளையும் பரிசீலிப்பது, எந்தச் சூழ்நிலையிலும் எது குறித்தும் பெற்றோரிடம் பயமின்றி பேசலாம் என்ற தைரியத்தைக் கொடுப்பது போன்றவற்றின் மூலம் இணக்கமான உறவும் இனிமையான பிள்ளை வளர்ப்பும் நிச்சயம் சாத்தியம்...

- ஹேப்பி பேரன்ட்டீனிங்!