Published:Updated:

``கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியான கணவன்!" - இணையத்தில் வைரலாகும் வீடியோ

அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம் தர யாரும் முன் வரவில்லை.

நாற்காலியான கணவன்
நாற்காலியான கணவன்

ன் கணவன் தன்னை எப்போதும் அன்பாகப் பார்த்துக்கொண்டு உள்ளங்கையில் தாங்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மனைவியின் ஆசையாக இருக்கும். அப்படித்தான் சீனாவில் ஒருவர் தன் மனைவியைத் தாங்கியுள்ளார். ஆனால், கையில் அல்ல; முதுகில்!

நாற்காலியான கணவன்
நாற்காலியான கணவன்

கணவர் ஒருவர் மருத்துவமனையில் சோர்வாக இருக்கும் தன் மனைவிக்காக முட்டிபோட்டு தன் தோளில் அமர வைத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீன நாட்டைச் சேர்ந்த ஒரு கணவர் தன் கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு மருத்துவரைப் பார்க்க அவர்கள் முறை வரும்வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு அதிகக் கூட்டமாக இருந்ததால் அங்குள்ள நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம் தர யாரும் முன் வரவில்லை.

தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அந்தக் கணவர் உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலியாக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார்.

இதை யாரோ வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ பார்ப்பவரின் மனதை உருக வைப்பதாக உள்ளது.

கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியான கணவன்
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியான கணவன்

இதைக் கண்ட நெட்டிசன்கள் தன் மனைவிக்காக நாற்காலியான கணவரைப் பாராட்டியும் மருத்துவமனையில் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம் தராதவர்களைத் திட்டியும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.