Published:Updated:

“எங்க அம்மா மெழுகுவத்தியில்லை, அது தரும் வெளிச்சம்!” - ‘பாசமகள்’ திவ்யா

அம்மாவுடன் திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவுடன் திவ்யா

அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

“எங்க அம்மா மெழுகுவத்தியில்லை, அது தரும் வெளிச்சம்!” - ‘பாசமகள்’ திவ்யா

அன்னையர் தினம் சிறப்புப் பகிர்வு

Published:Updated:
அம்மாவுடன் திவ்யா
பிரீமியம் ஸ்டோரி
அம்மாவுடன் திவ்யா

“ஆந்திரா பக்கத்துல ஒரு சின்ன கிராமம்... அங்கே மாற்றுத்திறனாளியா பிறந்தவங் களுக்கு என்ன வாய்ப்புகள் கிடைச்சிடும்? ‘நடக்க முடியாதவ’னு சொன்னவங்களுக்கு முன்னாடி வாழ்ந்து காட்டணும்னு ஆசைப் பட்டதா எங்க அம்மா அடிக்கடி சொல்லு வாங்க. வாழ்ந்தும் காண்பிச்சாங்க. அவங்க ளோட தன்னம்பிக்கைதான் எங்களையும் உருவாக்கியிருக்கு. என் அம்மா, எனக்கு மகள்” - படுக்கையில் இருக்கும் தன் அம்மாவை அறிமுகம் செய்தபடி பேசுகிறார் திவ்யா. மகளின் பேச்சில், அம்மா விஜயபவானியின் கண்கள் பிரகாசமாகின்றன.

திவ்யா எம்.பி.ஏ முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகப் பணியாற்றி யவர். தற்போது பெண்கள் நலன் சார்ந்து இயங்கும் சமூகச் செயற்பாட்டாளர். திவ்யா வின் தந்தை இறந்துவிட, அம்மா என்ற ஒற்றை மனுஷி மட்டுமே திவ்யாவுக்கும் அவரின் சகோதரி காவ்யாவுக்கும் ஒரே ஆதாரம்.

“அம்மாவுக்கு சின்ன வயசிலேயே போலியோ அட்டாக் வந்து, கால்கள் செயலிழந்து போச்சு. ரெண்டு கைகளுக்கும் ஊன்றுகோல் (Crutches) வெச்சுதான் நடப்பாங்க. அம்மா, அந்தக் காலத்திலேயே டிகிரி முடிச்சவங்க. 21 வயசுலயே அம்மாவுக்கு கல்யாணமாயிடுச்சு. நானும் என் தங்கச்சியும் பிறந்தோம். எங்கப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, சொத்தை யெல்லாம் இழந்து, ஏகப்பட்ட கடனை வெச் சுட்டு இறந்துட்டாரு. தினமும் கடன்காரங்க எங்க வீட்டுக்கு வந்து, கொடுத்த காசை கேட்டு அவமானப்படுத்துவாங்க. ‘ரெண்டும் பொண்ணுங்க, உனக்கும் நடக்க முடியாது, இனி இதுங்கள யாரு கவனிச்சிப்பாங்க’ னு கேள்வி கேட்ட எல்லாருக்கும் எங்க அம்மா, பதிலா நின்னாங்க.

“எங்க அம்மா மெழுகுவத்தியில்லை, அது தரும் வெளிச்சம்!” - ‘பாசமகள்’ திவ்யா

அம்மா ரயில்வேயில உதவி அலு வலரா வேலைக்குச் சேர்ந்தாங்க. கிடைச்ச வருமானத்துல அப்பா வெச்சுட்டு போன கடனை அடைச் சது மட்டுமில்ல, எங்களையும் நல்லா படிக்க வெச்சாங்க. நானும் என் தங்கச்சியும் எம்.பி.ஏ வரை படிச்சோம். நான் கோல்டு மெடலிஸ்ட். படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், ‘நீ இனி ரெஸ்ட் எடும்மா, நாங்க பார்த்துக்கிறோம்’னு சொன்னோம். ஆனா, அம்மா கேட்காம வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விபத்தால அம்மா வுக்கு நடக்க முடியாமப் போயிருச்சு. வேலை யிலேருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டாங்க. எலும்புகள் தேஞ்சு கழுத்துக்குக் கீழே அம்மாவோட எந்த உறுப்புகளும் வேலை செய்யாமப் போயிருச்சு. நானும் என் தங்கச்சியும் அழுதுட்டு நின்னபோது, ‘உறுப்புகள் தானே வேலை செய்யல, நான் உசுரோட தானே இருக்கேன். அழாதீங்க’ னு அம்மா எங்களுக்கு ஆறுதல் சொன்னாங்க.

நாங்க ரெண்டு பேரும் அம்மாவை குழந்தை மாதிரி கவனிச்சுக்கணும்னு நினைச்சோம். ஆனா, அவங்களுக்கு மன தைரியம் அதிகம். எழுந்து நடக்க முடியாதே தவிர, படுத்துக் கிட்டே வீட்டை ரொம்ப அழகா நிர்வாகம் பண்றாங்க. கரன்ட் பில் எப்போ கட்டணும், கிச்சன்ல என்ன இருக்கு, என்ன சமைக் கணும்னு எல்லாத்தையும் இருந்த இடத்துல இருந்தே அம்மா கவனிச்சுப்பாங்க. அவங்க மட்டும் இல்லைனா எங்க நிலைமை என்னாகி யிருக்குமோ...” கண்கள் குளமாகும் திவ்யா, அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்.

“ எங்க அம்மா மாதிரி எத்தனையோ பெண்கள் சமுதாயத்துல கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு உதவணும்னு தான் ஒரு பொதுநல அமைப்பை உருவாக்கி, பழங்குடியின பெண்களுக்கான கல்வியில கவனம் செலுத்திட்டு இருக்கேன். என் அம்மா மெழுகுவத்தியில்லை, அதுலேருந்து வரும் வெளிச்சம்”

- நெகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார் திவ்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism