Published:Updated:

`ரன்வீரின் டான்ஸ்; திடீர் சத்தம்: பேன்ட்டைத் தைத்தேன்!' - தீபிகாவின் `மனைவி' அலப்பறைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ( instagram )

``ரன்வீருக்கும் எனக்கும் ஒரே சைஸ் ஷூ, அதனால் அடிக்கடி ஷூக்களை மாற்றிப் போட்டுக்கொள்வோம். சமயங்களில் அவரது பர்ஸில் இருந்து பணம் எடுப்பது என ஒரு பக்கா ஹவுஸ் வொய்ஃப் அவதாரமும் எடுப்பேன்" என்கிறார் தீபிகா படுகோன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சினிமா பிரபலங்களுடன் நகைச்சுவையாக உரையாடும் சோனி டிவியின் 'கபில் ஷர்மா' நிகழ்ச்சி பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் படுபிரபலம். தற்போது இந்நிகழ்ச்சியின் சீஸன் 2 ஒளிபரப்பாகிவருகிறது.

கபில் ஷர்மா
கபில் ஷர்மா
mid - day

இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்த நிலையில், தற்போது தான் தயாரிக்கும் முதல் படமான 'சபாக்' திரைப்படத்தின் புரொமோஷனுக்காக, இப்படத்தின் டைரக்டர் மேக்னா குல்சருடன் பங்கேற்றிருக்கிறார் தீபிகா. இது வரும் வாரம் சோனி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கபில் ஷர்மா, பிரபலங்களிடம் சகஜமாக, நகைச்சுவையாகக் கலந்துரையாடி தேவையான தகவல்களைப் பெறுவதில் தேர்ந்தவர்.

இப்பேட்டியில், 'ரன்வீருக்கும் எனக்கும் ஒரே சைஸ் ஷூ, அதனால் அடிக்கடி ஷூக்களை மாற்றிப் போட்டுக்கொள்வோம். சமயங்களில் அவரது பர்ஸில் இருந்து பணம் எடுப்பது என ஒரு பக்கா ஹவுஸ் வொய்ஃப் அவதாரமும் எடுப்பேன்' எனப் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார் தீபிகா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கலந்துரையாடலில், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை பற்றிய கேள்விக்கு, தீபிகா சில இன்ட்ரஸ்டிங்கான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். ``ரன்வீருடன் வெளியில் செல்லும்போதெல்லாம். சேஃப்டி பின், ஊசி, நூல் போன்ற பொருள்களை எடுத்துச் செல்வேன்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்
instagram

ஃபேஷனாக உடையணிவது மட்டுமல்லாமல் அதிகபட்ச உற்சாகத்தில் இருக்கும்போது ரன்வீரை கன்ட்ரோல் செய்ய முடியாது.

ஒருமுறை நாங்கள் இருவரும் கலந்துகொண்ட ஒரு மியூசிகல் நிகழ்ச்சிக்கு லூசான பேன்ட் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியில் கூடுதல் உற்சாகமாகி ஏடாகூடமான டான்ஸ் மூவ்மென்ட்ஸ் போட்டார். அருகில் இருந்த எனக்கு வித்தியாசமான சத்தம் கேட்டது.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
instagram

துணி கிழிந்ததுபோல் இருந்த அந்த சத்தத்தால், சந்தேகப்பட்டு ரன்வீரின் பேன்ட்டை பார்த்து சத்தம் வந்த காரணத்தை உறுதி செய்தேன்.

உடனே என்னுடைய தையல் 'கிட்டை' எடுத்து அவரது பேன்ட்டை தைக்க ஆரம்பித்தேன். சுற்றியிருந்தவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த இடத்தில், அவர்களுக்கு நடுவில் இப்படி ஒரு வேலையைச் செய்தேன்” என்றார்.

தன்னுடைய தூக்க நேரத்தை ஒழுங்குபடுத்தியது, நேரத்துக்குச் சாப்பிடும் முறையைக் கடைப்பிடிக்க வைத்தது எனத் தனக்குத் தோழியாக இருந்தபோதே தீபிகா வெளிப்படுத்திய அன்பு கலந்த அக்கறைதான் அவர்மீது காதல் ஏற்பட முக்கியக் காரணமாக இருந்தது என ரன்வீர் தன்னுடைய பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
instagram

அதை உண்மையென மனைவியான பிறகும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் தீபிகா. இவர்களது காதலை இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் பறைசாற்றும்.

'தீப்வீர்' காதல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு