Published:Updated:

`திருமண நாள் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்!' - தீபிகா-ரன்வீர் ரொமான்ஸ்

திருமணத்துக்குப் பிறகு தம்பதியர் இருவரும் முன்பைவிட தங்களின் கரியரில் பிசியாக இருக்கிறார்கள்.

தீபிகா
தீபிகா

பாலிவுட்டின் பியூட்டீஸ் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு நாளை (நவம்பர் 14) முதல் திருமண நாள். சென்ற வருடம் இந்த ஜோடியின் திருமணம் இத்தாலியிலுள்ள கோமோ ஏரியில் நடந்தது. திருமணம், தீபிகாவின் கொங்கணி முறைப்படியும் ரன்வீரின் சிந்தி முறைப்படியும்  செம கலர்ஃபுல்லாக நடந்தது. திருமணத்தைத் தொடர்ந்து, சில தினங்கள் 'தீப்வீர்' என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்கள் டிரெண்டாயின.

ரன்வீர்
ரன்வீர்
instagram.com/deepikapadukone

'ராச லீலா' படத்தில் ஜோடியாக நடித்த தீபிகா, ரன்வீரின் கெமிஸ்ட்ரி முதல் படத்திலேயே செம ஹிட்டாக, அதைத் தொடர்ந்து, இவர்கள் ஜோடி சேர்ந்த 'பத்மாவத்'தும் பெரிய அளவில் பேசப்பட்டது. வேறு வேறு நபர்களுடன் கிசுகிசுக்களில் அடிபட்டாலும், 6 வருட காதலில் சின்சியராக இருந்து திருமணம் செய்துகொண்டார்கள்.

Vikatan

திருமணத்துக்குப் பிறகு, தம்பதியர் இருவரும் இன்னமும் தங்கள் கரியரில் பிசியாக இருக்கிறார்கள். கிரிக்கெட்டர் கபில் தேவ் பயோ பிக்கில், ரன்வீர் தான் கபில். கபில் தேவின் மனைவி ரோமியாக நடித்துக்கொண்டிருப்பவர் தீபு. தீபிகா, ஆசிட் வீச்சிலிருந்து மீண்ட தன்னம்பிக்கைப் பெண் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார்.

தீபிகா ரன்வீர்
தீபிகா ரன்வீர்

கணவனும் மனைவியும் ஷூட்டிங் ஷூட்டிங் என்று ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், முகத்தில் ஃபேஸ் பேக், தலைக்கு மேலே ஸ்டீமர் சகிதம் சலூனில் உட்கார்ந்துகொண்டிருக்கும் கணவருடைய புகைப்படத்தைத் தன்னுடைய இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்கிறார் தீபிகா. அதற்கு, 'முதல் திருமண நாளுக்கான தயாரிப்பில் இருக்கிறார் ரன்வீர்' என்று கமென்டும் செய்திருக்கிறார், தீபிகா.  தவிர, திருமண நாளையொட்டி, தீபிகாவும் ரன்வீரும் குடும்ப சகிதமாக திருப்பதி பெருமாளைத் தரிசிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு, அமிர்தசரஸில் இருக்கிற பொற்கோயிலை தரிசிக்கச் செல்கிறார்கள். 

அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகள் தீப்வீர்!