Published:Updated:

`அருகருகே இல்லாமல் இருக்கலாம்... ஆனால்?' - டெல்லிப் பெண்ணை இணையத்தில் மணம்முடித்த மும்பை இளைஞர்

ஆன்லைன் திருமணம்
ஆன்லைன் திருமணம் ( toi )

தூரம் தங்களைப் பிரித்தாலும், கொரோனா அவர்களை வீட்டில் முடக்கினாலும் இணையத்தின் மூலம் இணையர்களாக மாறிய ஜோடி.

தூரம் தங்களைப் பிரித்தாலும், கொரோனா அவர்களை வீட்டில் முடக்கினாலும் இணையத்தின் மூலம் இணையர்களாக மாறிய ஜோடி, மக்களின் கவன ஈர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இரு வீட்டார் சம்மதத்துடன், ஆன்லைனில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்துகொண்டனர் ஒரு காதல் ஜோடி.

`தமிழ்முறைத் திருமணம்; வீடியோ கால் வாழ்த்து!' - ஊரடங்கிலும் மரபு போற்றிய கரூர் இளைஞர்
திருமணம்
திருமணம்

மும்பையைச் சேர்ந்த ப்ரீத் சிங்கும் டெல்லியைச் சேர்ந்த நீத் கவுரும் ஒரு வருடம் முன்பு ஆன்லைன் மூலம் நண்பர்களாக அறிமுகமானார்கள். பின்னர் காதலர்களாக மாறியவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் ஏப்ரல் 4-ம் தேதி திருமணம் செய்ய முடிவானது. இதற்கிடையில் கொரோனா காரணமாக, உலகமே முடங்கிய நிலையில், காதலர்கள் கரம் பிடிக்க இணையம் உதவிக்கரம் நீட்டியது. வீடியோ காலிங் வசதி மூலம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைய, சந்தோஷமாக மணவாழ்க்கையை ஆரம்பித்தனர் அந்தத் தம்பதி.

இதைப் பற்றி கருத்து தெரிவித்த மணமகன், "எங்கள் வாழ்க்கைப் பயணத்தை பிரமாண்டமாகத் தொடங்க நினைத்திருந்தோம். ஆனால், அதைச் செய்ய முடியவில்லை. திருமணமாவது தனித்துவமாகத் தெரியட்டுமே என்றுதான் இந்த முடிவெடுத்தோம். ஊரடங்கு முடிந்த பின்பு குருத்வாரா சென்று சீக்கிய முறைப்படி திருமணம் செய்துகொள்வோம்" என்றார்.

திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்

துபாய், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தத் திருமணத்தை ஆன்லைனில் காண உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர். கல்யாணம் முடிந்த பிறகு அனைவரும் நடனமாட குடும்பமே குதூகலத்தில் ஆழ்ந்திருக்கிறது.

15 நபர்கள் மட்டுமே பங்கேற்பு.. அனைவருக்கும் பாதுகாப்பு! -ஊரடங்கால் மாஸ்க் அணிந்து நடந்த திருமணம்

'இருவரும் அருகருகே இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் திருமணம் முடிந்துவிட்ட திருப்தி மிகப் பெரிய நிறைவைத் தந்திருக்கிறது. சீக்கிரமே சந்திப்போம்'' என்று நெகிழ்ந்திருக்கிறார்கள் புதுமண தம்பதியர்.

அடுத்த கட்டுரைக்கு