Published:Updated:

``காதலன் தாய்ப்பூனை; கணவன் தாய்க்குரங்கு!’’ - ஆண்களின் காதல் குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

காதலிக்கும்போது, குட்மார்னிங் மெசேஜ் அனுப்பி காதலியை எழுப்பிவிடுவது வரைக்கும் சேவை செய்கிற ஆண்கள், அதே பெண்ணைத் திருமணம் செய்த பிறகு, பாராமுகம் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். பெரும்பான்மை ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆண் ஏன் இப்படி மாறி விடுகிறான்?

`பெண் மனது ஆழமானது’ என்று ஆணுக்கு சொல்லியிருக்கிற இந்த சமூகம், ஆண் மனது எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குச் சொன்னதாகவே தெரியவில்லை. தான் நேசிக்கிற ஒரு காரணத்துக்காகவே, `அவர் ரொம்ப நல்லவர்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதற்கும், பொள்ளாச்சி சம்பவம் போல ஆபத்தில் மாட்டிக் கொள்வதற்கும், ஆண்களைப்பற்றிய சரியான புரிந்துணர்வு பெண்களுக்கு இல்லாததுதான் காரணம். அந்த வகையில் ஆண்களைப் பற்றி பெண்களுக்கு முழுமையாகப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காக அவள் விகடனில் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்' என்கிற தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறோம்.

இந்தத் தொடர் ஆண்களின் தவறுகளை மட்டுமல்ல; அவர்கள் உலகத்து அவஸ்தைகளையும் பேசும். சென்ற இதழ்களில், பிளேபாய் மற்றும் சாக்லெட் பாய் இயல்புகளையும், பெண்களின் மார்பகத்தை உற்றுப்பார்க்கிற ஆண்களைப்பற்றியும், குடும்ப வன்முறைகள், உருவகேலி ஆகியவை குறித்தும் பேசியிருந்தோம். இந்த இதழில் `உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?' பற்றிப் பேசியிருக்கிறோம். இதழில் வெளியாகும் தொடரின் நீட்சியாக விகடன் இணையதளத்திலும் இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளும் சூத்திரத்தை பலதுறை பிரபலங்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகள் வாயிலாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் ஆர்.கே.செல்வமணி

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவது ஏன்?
love
love

காதலிக்கும்போது, குட்மார்னிங் மெசேஜ் அனுப்பி காதலியை எழுப்பிவிடுவது வரைக்கும் சேவை செய்கிற ஆண்கள், அதே பெண்ணைத் திருமணம் செய்த பிறகு, பாராமுகம் காட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். பெரும்பான்மை ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஆண் ஏன் இப்படி மாறி விடுகிறான்? திருமணத்துக்குப் பிறகு, அவன் காதல் குறைவுபட்டு விடுகிறதா? இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் கேட்டோம்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை!

``ஓர் ஆண், ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது காட்டுகிற அதே அன்பைத் திருமணத்துக்குப் பிறகும் காட்டுகிறானா என்றால், இல்லை என்பதுதான் 100 சதவிகித உண்மை. ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கும்போது, ஆணுக்கு அவளை தான் எந்தளவுக்குக் காதலிக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம். அதனால்தான் காதலிக்கும் நேரத்தில் ஆண் உருகி உருகிக் காதலிக்கிறான். இதுவே, திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண் அவனுக்கு நன்கு அறிமுகமானவளாகி விடுகிறாள். இந்த இடத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதை ஆண் குறைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறான்.

ஓர் உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால், காதலி 6 மணிக்கு கடற்கரைக்கு வரச் சொன்னால், ஐந்தரைக்கெல்லாம் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவான். அதே பெண் மனைவியாகி, 6 மணிக்கு ஆஃபீஸ்க்கு வந்து என்னை பிக்கப் செய்து கொள்ளுங்கள் என்றால், ஆறே காலுக்குத்தான் போவான். தாமதமாகப் போனால் காதலி கோபித்துக்கொண்டு கிளம்பி விடுவாளோ என்ற பயம். காதலி மனைவியான பிறகு, நேரமானாலும் அவள் காத்திருப்பாள் என்ற நம்பிக்கை. மற்றபடி ஆண், தான் நேசிக்கிற பெண்ணை எந்தக் காலத்திலும் அலட்சியப்படுத்த மாட்டான். தம்பதியரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு வந்த பிறகு, மனைவிக்கே இது புரிந்துவிடும்.

lets understand men
lets understand men
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 4 - கணவரின் நண்பர்களை மனைவிக்குப் பிடிப்பதில்லையே... ஏன்?

ஓர் ஆண், காதலிக்கும்போது பூனைக்குட்டியைக் கவ்விக் கொண்டு அலைகிற தாய்ப்பூனையைப்போல இருப்பான். அதனால்தான் நேரங்காலம் பார்க்காமல் உருகுவான். திருமணத்துக்குப் பிறகு, குரங்குபோல மாறிவிடுவான். அதாவது, குரங்குக்குட்டிதான் தன் தாயை இறுக்கிக்கொண்டிருக்கும். அதுபோல மனைவிதான் கணவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பாள். அம்மா குரங்கைப்போல ஆண் ரிலாக்ஸாக மாறிவிடுவான். ஆனால், தன் மனைவிக்கு வீட்டுக்குள்ளோ, பொதுவெளியிலோ ஒரு பிரச்னையென்றால் தாய்க்குரங்கைப் போல சட்டென்று தாங்கிப் பிடித்துவிடுவான். இந்த அன்பை மனைவி மீது கணவன் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும். மனைவியும், என் கணவர் என் மீது அன்பாகத்தான் இருப்பார் என்பதை நம்ப வேண்டும்.

மனைவி மீது காதலைக் காட்டினால், சமூகம் மட்டுமல்லாமல் சொந்தக் குடும்பம்கூட ஆணை `அவன் பொண்டாட்டிதாசன்டா’ என்று கேலி செய்துவிடும். சொந்த வீட்டில் இந்தப் பேச்சைக் கேட்கும்போது அலட்சியமாகவும், கேலி செய்வது வெளியாட்கள் என்றால் அசட்டை செய்யாமலும் கடந்துவிட வேண்டும். சில கணவர்கள் படுக்கையறையில் மட்டும் மனைவியிடம் அன்பாகவும், தங்கள் சுயமரியாதையை இழக்கவும் தயாராக இருப்பார்கள். இவர்கள் பொண்டாட்டிதாசன் என்ற வார்த்தைக்கு அச்சப்படுபவர்கள். ஆனால், மனைவி மீது அன்பில்லாதவர்கள் இல்லை.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி
ஆண்களைப் புரிந்துகொள்வோம்! : 5 - வளராத மீசை... வளரும் தாழ்வு மனப்பான்மை...

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்கிறார்கள். வெளியில் எத்தனையோ சங்கடங்களைச் சந்தித்துவிட்டு வீட்டுக்குள் நுழைபவர்கள், அந்தக் கோபத்தையெல்லாம் கணவர் மீதோ, சமையலறை சாமான்கள் மீதோ, ஏன் சில நேரங்களில் குழந்தைகள் மீதுகூட காட்டுவார்கள். இந்த நேரத்தில் மனைவியை தன் குழந்தையைச் சமாதானப்படுத்துவதுபோல கணவன் ஆற்றுப்படுத்த வேண்டும். `நானோர் ஆண், என் சுயமரியாதை என்னவாவது' என்பதையெல்லாம் தூக்கி வீசிவிட்டு யாரெல்லாம் மனைவியிடம் அன்பாக நடந்துகொள்கிறார்களோ அவர்களுடைய திருமண வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்'' என்கிறார் தெளிவாக.

உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவதற்காகக் காரணங்கள் குறித்த மனநல மருத்துவரின் கருத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு