லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

காதலுக்கு கண்கள் தேவையில்லை... விழிச்சவால் தம்பதியின் கல்யாணம் டு காதல் கதை!

கண்ணன் - செண்பகவள்ளி தம்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணன் - செண்பகவள்ளி தம்பதி

பார்வைத்திறன் குறைபாடு உள்ளவங்களுக்கு வீணை கத்துக்க வாய்ப்புகள் அவ்வளவா கிடைக்கிறதில்லை. இதைச் சவாலா எடுத்துக்கிட்டு வீணை மற்றும் கீபோர்டு வாசிப்புல அனுபவம் பெற்றேன்.

“பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள், தன்னைப் போலவே குறைபாடு உள்ளவரைத்தான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுவாங்க. ஏன்னா, ரெண்டு பேருமே சந்திக்கிற சவால்களும், அதுக்கான தீர்வு களும் ஒரே மாதிரி இருக்கும். அதனால, ஒருத்தரை ஒருத்தர் முழு மையா புரிஞ்சுக்க அதிக வாய்ப்புகள் இருக்கும். இதே மனப்பான்மை யோடதான் நாங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். காதல், வாழ்க்கையை எவ்ளோ அழகாக்கும்னு அதுக்கப்புறமாதான் உணர்ந் தோம்!” - கல்யாணம் டு காதல் கதை சொல்லி சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றனர், கண்ணன் - செண்பகவள்ளி தம்பதி. சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகள். தங்களைப்போல விழிச்சவால் கொண்ட பலரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தருபவர்கள்.

``பால்யத்துலயே பார்வைத்திறன் குறைபாடு இருந்தால, ஸ்கூல் படிப்பு வரைதான் படிச்சேன். பெண்களுக்குப் படிப்புதான் முக்கி யம்னு கல்யாணத்துக்குப் பிறகு, என்னை பி.ஏ படிக்க வெச்சார் என் கணவர். அதுவரைக்கும் ஓரளவுக்கு பார்வைத்திறன் இருந்த நிலையில, 2007-ல் முழுமையா பார்வைத்திறனை இழந்துட்டேன். ஆனாலும், எந்தக் குறையும் தெரியாத வகையில கணவரின் அன்பு என்னை முழுமையா அரவணைச்சது” - மகிழ்ச்சியான இல்லறம் குறித்து செண்பகவள்ளி சிலாகிக்க, கண்ணன் தொடர்ந்தார்...

காதலுக்கு கண்கள் தேவையில்லை... விழிச்சவால் தம்பதியின் கல்யாணம் டு காதல் கதை!

“ஒரு வயசுலேருந்து எனக்குப் பார்வைத்திறன் இல்லை. காலேஜ் முடிச்சுட்டு, போட்டித்தேர்வு மூலமா ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ நிறுவனத்துல டைப்பிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். 2000-ம் வருஷத்துக்குப் பிறகு கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமானப்போ, பார்வை யற்றவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துறதுலயும், கம்ப் யூட்டர் சார்ந்த வேலைவாய்ப்பு வாங்கிறதுலயும் பெரும் சவால் ஏற்பட்டுச்சு. அப்பதான் ‘ஜாவ்ஸ்’ (JAWS) சாஃப்ட்வேர் பிரபலமாச்சு. பலருக்கும் உதவணும்னு தமிழகத்துல நான் உட்பட பார்வையற்ற சிலர் பிரயத்தனப்பட்டு அதைப் பயன்படுத்தக் கத்துக்கிட்டோம்” என்பவர், தன் உத்தி யோகத்தில் படிப்படியாக உயர்ந்து ‘நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்’ நிறுவனத்தில் உதவி மேலாளராக உயர்ந்திருக்கிறார். பார்வைத்திறன் இல்லாத பல நூறு பேருக்கு ‘ஜாவ்ஸ்’ மென்பொருள் பயன்பாட்டுக்கான பயிற்சியை சேவை நோக்கில் வழங்கி யிருக்கிறார் கண்ணன். கர்னாடக இசையில் வாய்ப் பாட்டு, வீணை மற்றும் கீபோர்டு வாசிப்புக்கான பயிற்சி வகுப்பு களைப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் செண்பக வள்ளியால் சராசரி குழந்தை களுடன், பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாணவர்கள் பலரும் பயனடைந்துள்ளனர். இதனால், ‘முன்மாதிரி யான மாற்றுத்திறனாளி’க்கான மத்திய அரசின் விருதை சமீபத்தில் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார் செண்பகவள்ளி.

“பார்வைத்திறன் குறைபாடு உள்ளவங்களுக்கு வீணை கத்துக்க வாய்ப்புகள் அவ்வளவா கிடைக்கிறதில்லை. இதைச் சவாலா எடுத்துக்கிட்டு வீணை மற்றும் கீபோர்டு வாசிப்புல அனுபவம் பெற்றேன். பிறகு, பயிற்சி வகுப்பு ஆரம்பிச்சப்போ, ‘பசங்க சரியா கத்துக்கிறாங்களானு எப்படிக் கண்கூடா தெரிஞ்சுப்பீங்க?’னு சிலர் கேட்டாங்க. பசங்களோட குரல், கைத்தாளம்னு ஓசையை வெச்சே என்னால கண்டுப்பிடிக்க முடியும்ங்கிறதை அனுபவத்துல புரியவைச்சேன். நேரடி வகுப்பு தவிர, ஆன்லைன் மூலமா வெளிநாட்டினரும் என்கிட்ட இசை கத்துக்கிறாங்க” எனும் செண்பகவள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார், எம்.பி.ஏ படிக்கும் அவரின் மகன் பாலசுப்ரமணியன்.

கண்ணன் - செண்பகவள்ளி தம்பதி
கண்ணன் - செண்பகவள்ளி தம்பதி

“பையன் நார்மல் குழந்தையா பிறந்தப்போ எங்களுக்கு விவரிக்க முடியாத சந்தோஷம். தொடுவுணர்வு மற்றும் குரல் மூலமாவே மகனின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிஞ்சுகிட்டோம். குழந்தைகளோடு நாம அதிக நேரம் செலவிட்டா, அவங்களும் முழுமையா நம்மோடு ஐக்கியமாகிடுவாங்க. அதை நாங்க சரியா செஞ்சதால, பையனும் எங்க உணர்வுகளை முழுமையா புரிஞ்சு கிட்டான். எங்க பையன் இப்போ எங்களை கவனிச்சுக்கிறான்!” செண்பகவள்ளியின் பேச்சில் பெருமிதம் இழையோடுகிறது.

“சமையல், வீட்டு வேலை, பயணம்னு எல்லாத் தேவைகளை யும் சுயமா செய்துக்கிறோம். பார்வைத்திறன் இல்லாததால எந்த ஆதங்கமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இந்த நிலையிலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழணும்ங்கிறது மட்டுமே எங்க ஒரே விருப்பம். நமக்கு என்ன பிரச்னை இருந்தாலும், நம்மகிட்ட இருக்கிற திறன்களை வாய்ப்புகளா மாத்தினா வாழ்க்கை வசந்தமாகும். இதுதான் எங்க வெற்றிக் கான ஃபார்முலா!” என்கிற கண்ணனின் வார்த்தைகள் தன்னம்பிக்கையைக் கடத்துகின்றன.

பொதுநலன் கருதி...

“மாற்றுத்திறனுடன் குழந்தை பிறந்தா, அதைப் பெரும்பாலான பெற்றோர்களால ஏத்துக்க முடியுறதில்லை. இதனால, அவங் களோட உளவியலும், குழந்தைகளின் நலனும் பாதிக்கப்படுது. மாற்றுத்திறனுள்ள குழந்தைகளுக்கு மட்டுமன்றி, அவங்களோட பெற்றோர்களுக்கும் ஆரம்பத்துலயே முறை யான நம்பிக்கையும் வழிகாட்டுதல்களும் அரசாங்கத்தால எளிதாவும் கட்டணமின்றியும் கிடைக்கச் செய்யறது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்!” என்று முக்கியமான ஆலோசனையை முன்வைக்கிறார் கண்ணன்.