Published:Updated:

விந்தணுக்கள் எத்தனை கி.மீட்டர் வேகத்தில் வெளியேறும் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை S3 E 5

sex education

``நிறைய பேர் இதை விந்து என்று நினைத்துப் பயந்துவிடுவதால், அவர்களுடைய பயத்தை, போலி மருத்துவர்கள் பணமாக்கிக் கொள்கிறார்கள்.''

விந்தணுக்கள் எத்தனை கி.மீட்டர் வேகத்தில் வெளியேறும் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை S3 E 5

``நிறைய பேர் இதை விந்து என்று நினைத்துப் பயந்துவிடுவதால், அவர்களுடைய பயத்தை, போலி மருத்துவர்கள் பணமாக்கிக் கொள்கிறார்கள்.''

Published:Updated:
sex education

பல காலமாக நம் சமூகத்தில் பாலியல் தொடர்பாக இருந்து வருகிற ஒரு சந்தேகம், `அடிக்கடி விந்து வெளியேறினா நான் பலவீனமாகிடுவேனோ... தாது நஷ்டம், விந்து நஷ்டம்னு வர்ற விளம்பரங்கள் எல்லாம் உண்மைதானா?' என்பதுதான். இந்த வாரம், வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிப்பதோடு, இந்தச் சந்தேகம் தொடர்பான முழு விளக்கத்தையும் அளித்திருக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

``எனக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடந்தது. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணைப் பார்க்கிறப்போ, அவகிட்ட பேசுறப்போ ஆணுறுப்புல இருந்து தண்ணி மாதிரி திரவம் சுரக்குது. இது விந்துவா? இப்படி அடிக்கடி நிகழ்ந்தால் நான் பலவீனமாகிடுவேனா? விந்தணுக்கள் சேதமாகாம இருக்க நான் என்ன செய்யணும்?'' - இதுதான் அந்த வாசகரின் கேள்வி. இனி டாக்டரின் பதில்.

பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி
பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி

``ஆணுறுப்பின் வழியேதான் சிறுநீரும் வரும்; விந்துவும் வெளியேறும். இரண்டு வெளியேற்றத்துக்கான குழாய்களும் திறந்து இருக்காது. ஆனால், இரண்டு குழாய்களின் சுவரும் ஒன்றையொன்று ஒட்டிக் கொண்டிருக்கும். விந்து வெளியேறும்போது கிட்டத்தட்ட 40-ல் இருந்து 90 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியே வரும். அவ்வளவு வேகமாக விந்து வெளியேறுகையில், ஆணுக்குத் தாங்க முடியாத வலிதானே வர வேண்டும். அப்படி வலியெடுத்தால் எந்த ஆணாவது தாம்பத்திய உறவில் ஈடுபாடு காட்டுவானா? இதற்குத்தான் இயற்கை சிறுநீரும் விந்துவும் வெளியேறும் வழியில் சில சுரப்பிகளை வைத்திருக்கிறது. இதை பாரா யூரித்தரல் கிளாண்ட் (paraurethral glands) என்போம். மனதுக்குப் பிடித்த பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டுமென ஆண் உணர்ச்சிவசப்படுகையில், இந்தச் சுரப்பிகள் சுரக்க ஆரம்பித்துவிடும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண் உணர்ச்சிவசப்படுவதற்கு காட்சிகளே போதுமானது. அதனால்தான், உங்களுக்கு நிச்சயம் செய்துள்ள பெண்ணைப் பார்க்கும்போதும், அவரிடம் பேசும்போதும் அந்தக் காட்சியானது உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. உடனே பாரா யூரித்தரல் சுரப்பியும் சுரக்க ஆரம்பித்துவிடுகிறது. இதன் மூலம் ஆணுறுப்பில் லூப்ரிகேஷன் எனப்படும் உயவுத்தன்மை கிடைத்து விடும். இதன் பிறகு, எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் விந்து வெளியே வந்தாலும் வலி வராது. இந்தச் சுரப்பைத்தான் பலரும் `விந்து வெளியேறுகிறது' என்று நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இது விந்து கிடையாது. மருத்துவத்தில் நாங்கள் இதை `ப்ரீ காய்ட்டஸ் செக்ரீஷன்' (precoitus secretion) என்போம்.

sex education
sex education

தாம்பத்திய உறவுக்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறப்புறுப்பில் சுரக்கக்கூடிய திரவம் இது. நிறமற்று, பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கும். பல ஆண்கள் இதை விந்து என்று நினைத்து பயந்துவிடுவதால், அவர்களுடைய பயத்தைப் போலி மருத்துவர்கள் பணமாக்கிக்கொள்கிறார்கள். `தாது நஷ்டம்; விந்து நஷ்டம்; சிறுநீருடன் விந்து கலந்து வந்தால் பலவீனமாகி விடுவீர்கள்; ஆண்மை போய்விடும்' என்று விளம்பரம் செய்து மக்களை பயமுறுத்துகிறார்கள். உங்களுக்கு நிகழ்ந்தது இயல்பானது. உங்கள் உடம்பு சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தமும்கூட. பயப்படாதீர்கள்'' என்றவர், விதைப்பையைப் பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளையும் தெரிவித்தார்.

``நம்முடையது வெப்ப மண்டல பிரதேசம். ஜீன்ஸ் போன்ற தடிமனான துணிகளிலான ஆடைகள் உருவாக்கும் வெப்பமானது விதைப்பையைச் சேதமாக்கலாம். அதனால், காட்டன் ஆடைகளை மட்டும் அணியுங்கள். சூடு அதிகமுள்ள வெந்நீரில் தொடர்ந்து குளித்தாலும் விதைப்பை சேதமாகலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். பால்வினை நோய்களும் விதைப்பையைச் சேதமாக்கலாம் என்பதால், அந்நோய்கள் வருவதற்கான வழிகளில் செல்லாமல் இருப்பது நல்லது'' என்றார் பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.