Published:Updated:

`கோபமா இருக்கும்போது செக்ஸ் வேண்டாம்; ஃப்ரீ அட்வைஸ்!' - காமத்துக்கு மரியாதை - S2 E15

Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

``ஏதோ ஒரு காரணத்தால் கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரம் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது உறவுகொண்டால், அது இருவருக்குமே நல்லதல்ல. இதுதான் முதல் காரணி."

Published:Updated:

`கோபமா இருக்கும்போது செக்ஸ் வேண்டாம்; ஃப்ரீ அட்வைஸ்!' - காமத்துக்கு மரியாதை - S2 E15

``ஏதோ ஒரு காரணத்தால் கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரம் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது உறவுகொண்டால், அது இருவருக்குமே நல்லதல்ல. இதுதான் முதல் காரணி."

Couple ( Photo by Womanizer Toys on Unsplash )

``எவையெல்லாம் தாம்பத்திய உறவை நாசமாக்கும் விஷயங்கள் என்று கேட்டால், கணவன், தன் மனைவியின் குடும்பத்தாரையும், மனைவி, தன் கணவன் குடும்பத்தாரையும் கைகாட்டுவார்கள். ஆனால், தாம்பத்திய உறவை நாசம் செய்கிற காரணிகள் சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியரிடையேதான் இருக்கும்'' என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அவை பற்றி விளக்குகிறார்.

டாக்டர் காமராஜ்
டாக்டர் காமராஜ்

``ஊடலுக்குப் பிறகான கூடல் தம்பதியரிடையே மிக இனிமையாகவே இருக்கும். அதேபோல, ஒரு சண்டை நிகழ்ந்து சமாதானம் ஆனபிறகு நிகழ்கிற தாம்பத்திய உறவிலும் கூடுதல் ஆனந்தம் கிடைக்கும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரம் கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும்போது உறவுகொண்டால், அது இருவருக்குமே நல்லதல்ல. இதுதான் முதல் காரணி.

காதலிக்கும்போதோ, திருமணமான புதிதிலோ இருவரும் ஈருடல் ஓருயிராக இருப்பார்கள். மோகம், ஆசையெல்லாம் முடிந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு வந்தபிறகும், அதே காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடினீர்களென்றால் நல்லது. ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. ஒருவர் மீது ஒருவருக்கு கோபம், வெறுப்பு, பகை, ஏன் சிலருடைய மனதில் போட்டி மனப்பான்மைகூட வந்துவிடுகிறது. இந்த உணர்வுகளோடு தாம்பத்திய உறவுக்கு முயன்றால், பதற்றத்தில் விந்து முந்துதலில் ஆரம்பித்து ஆண்மைக்குறைபாடு வரைக்கும் ஏற்படலாம். கணவருக்கு விந்து முந்தினால், மனைவிக்கும் உறவில் உச்சக்கட்டம் கிடைக்காது என்பது நினைவில் கொள்ளுங்கள். இதுவே நல்ல மனநிலையிலிருக்கும்போது தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், கூடுதலாக மகிழ்ச்சி ஹார்மோன்களும் சுரந்து உங்கள் படுக்கையறையைச் சொர்க்கமாக்கும்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels

இரண்டாவது காரணி பால்வினை நோய்கள். பிறப்புறுப்பில் புண், வலி, சீழ்ப்பிடித்தல் என்று வந்து தாம்பத்திய உறவையே நாசம் செய்துவிடும். திருமண உறவில் இருந்தாலும் சரி, லிவ்வின் உறவில் இருந்தாலும் சரி, ஒருவருக்கு ஒருவர் என்கிற விதியை ஃபாலோ செய்தாலே பால்வினை நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைத் தடுத்துவிடலாம்.

மூன்றாவது காரணி பாலியல் பிரச்னைகள். இதில் முக்கியமான பிரச்னை விந்து முந்துதல். உறவு ஆரம்பித்த ஒரு நிமிடத்திலேயே விந்து வெளியேறிவிடும். கணவனுக்கு தன்னால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்கிற விரக்தியில் கோபம், இயலாமை ஆகிய உணர்வுகள் வந்துவிடும். மனைவிக்கோ, `பிடித்த உணவை ஆசையாய் ஒரு வாய் எடுத்துச் சாப்பிட்டவுடன் தட்டை எடுத்துச்சென்றுவிட்டது' போன்ற ஏக்கம் வந்துவிடும். விறைப்புத்தன்மை இன்மையும் கணவனும் மனைவியும் முழுமையாக உறவில் ஈடுபட முடியாதபடி செய்துவிடும். மொத்தத்தில், ஆண்மைக்குறைவு இருவரின் உணர்வுகளையும் ஆசைகளையும் கொன்றுவிடும்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

மேலே சொன்ன மூன்று பிரச்னைகளையுமே சரி செய்ய முடியும். ஒருவர் மீது ஒருவருக்கு வருகிற பகையுணர்ச்சியை உளவியல் ஆலோசனை மூலம் சரிசெய்யலாம். பால்வினை நோய் வராதபடிக்கு கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை வந்துவிட்டால், அது சரியாகும் வரை உறவில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். விறைப்பின்மை, விந்து முந்துதல் போன்ற ஆண்மைக்குறைபாடுகள் சரி செய்யக்கூடிய பிரச்னைகள்தான்... உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை நாசமாக்கும் காரணிகளில் ஒன்று உங்கள் வாழ்க்கையில் நுழைந்துவிட்டால், வாழ்க்கையே அவ்வளவுதான் என்கிற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அதன்பிறகும் வாழ்க்கையை இனிமையாக்க முடியும்'' என்று நம்பிக்கை கொடுக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தொடர்ந்து மரியாதை செய்வோம்!