Published:Updated:

ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்! - காமத்துக்கு மரியாதை - 8

``இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`முந்தைய நாள் இரவு திருப்தியான தாம்பத்திய உறவுகொண்டால், மறுநாள் காலையில் எனர்ஜியாக அலுவலக வேலைகளைப் பார்க்கலாம்' என்கின்றன ஆய்வுகள். `டெட்லைனை முடிச்சு டிராஃபிக்ல வண்டியை ஓட்டி, வீட்டுக்கு வந்து கொரோனா போக தேய்ச்சுக் குளிச்சிட்டு பெட்ரூமுக்குள்ள நுழைஞ்சா, என்னை எப்ப பெட்ல போடப்போறேன்னு உடம்பு கெஞ்ச ஆரம்பிச்சிடுது. எனர்ஜியே இல்லாம எப்படிங்க செக்ஸ் வெச்சுக்கிறது. அதெல்லாம் வீக் எண்ட்ல பார்த்துக்கலாம்' அப்படிங்கிறதுதான் இன்னிக்கு இருக்கிற பெரும்பாலான தம்பதிகளோட தாம்பத்திய நிலைமை. கம்ப்யூட்டர்லேயே குடியிருக்கிற கணவனுக்கு `என் தலைவியோட ஷாம்பு கூந்தல் நறுமணத்தைவிட நீ தேன் குடிச்ச பூக்கள் வாசமா இருந்துச்சா வண்டே'ன்னு ரொமான்டிக்கா பேசுறதுக்கான மனநிலை வரணும். லேப்டாப்பைப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப்போன மனைவி, `செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் கலக்கலாமா'ன்னு கணவன்கிட்ட கேட்கிற அளவுக்குக் காதலாகி கசிந்துருகணும். தினசரி வாழ்க்கையின் ஸ்ட்ரெஸ் கணவன், மனைவிக்கிடையேயான தாம்பத்திய உறவைக் கொல்லாமல் இருக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாலியல் மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels
ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை - 5

``முழுமையான செக்ஸ் உடம்பு வலியைக் குறைக்கும், தலைவலியைப் போக்கும். ஆபீஸ்ல ஏதோவொரு பிரச்னைன்னா நம்ம மக்கள் `மூடு இல்ல'ன்னு செக்ஸை அடுத்த நாளுக்குத் தள்ளி வெச்சிடுறாங்க. ஆனா, அன்னிக்கு செக்ஸ் வெச்சுக்கிட்டீங்கன்னா மன அழுத்தம் குறையுறதை நீங்களே அனுபவபூர்வமா தெரிஞ்சுக்க முடியும்.

உடலுறவின் உச்சக்கட்டம் மனிதர்களுடைய உடலிலும் மனதிலும் செய்கிற மேஜிக்ஸைபத்தி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, ரொம்ப ஆச்சர்யப்படுவீங்க. உச்சக்கட்டம் அடையுறப்போ மூளையிலிருந்து `மார்பின்' (Morphine) வலிநிவாரணியின் குணத்தையொத்த திரவம் ஒன்று சுரக்கும். உடல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மார்பினைத்தான் பரிந்துரைப்போம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கும் இதையேதான் தருவோம். `அப்படின்னா உச்சக்கட்டம் வந்தாதான் மார்பின் சுரக்குமா டாக்டர்'னு கேட்கத் தோணலாம். ஆண்களைப் பொறுத்தவரை 99 சதவிகிதம் பேர் உச்சக்கட்டம் அடைந்துவிடுகிறார்கள். பெண்களில் சிலருக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், உறவு கொள்ளும்போது சுரக்கிற மற்ற ஹார்மோன்கள் வலி நிவாரணியாகவும் மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்பட்டுவிடும். இந்த எஃபெக்ட் அடுத்த ஒரு நாள் வரை இருக்கும்'' என்றவர், இதற்கு கணவன் மனைவி ஃபாலோ செய்ய வேண்டிய வழிகளையும் சொன்னார்.

பாலியல் மருத்துவர் காமராஜ்
பாலியல் மருத்துவர் காமராஜ்

``படுக்கையறையைப் பொறுத்தவரைக் கணவன் - மனைவி இருவரைத் தவிர வேறு ஒருவர் இருந்தால், அதைக் கூட்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சேர்த்தே சொல்கிறேன். `மகள் முழிச்சிப்பாளோ; மகன் பார்த்திடுவானோ' என்று பயந்து பயந்து வைத்துக்கொள்ளும் உறவில் உச்சக்கட்டம் அடைவது கடினம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த பாயின்ட் மிக மிக முக்கியமானது. இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இப்படிப் படுத்தால் இரவிலிருந்து காலைக்குள் ஏதோ ஒரு நேரத்தில் உறவு நிகழ்ந்துவிடும். இது வெரி வெரி பவர்ஃபுல் டெக்னிக். இதில் சிரிப்பதற்கோ, ச்சீய்... என்பதற்கோ ஒன்றுமே இல்லை. ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழிமுறை இது. நம் நாட்டில் பெரும்பாலானோர் குழந்தைகளுடன் படுப்பதால் இந்த முறையை முயற்சி செய்து பார்ப்பதே இல்லை.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

அடிக்கடி உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜலதோஷம், காய்ச்சல் வராது. உறவுகொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பதால் தற்கொலை எண்ணம் வராது. வந்தாலும் தடுக்கப்படும். ஸ்ட்ரெஸ் குறையும். ரத்த அழுத்தம் சீராகும். இதனால் 10 வருடம் கூடுதலாக வாழலாம். அதிலும் இளமையாக வாழலாம். ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒரு பங்காகக் குறையும். பெண்களுக்கு செர்விகல் கேன்சர் ஆபத்து குறையும். ஆண்களுக்கு புராஸ்ட்டேட் கேன்சர் ஆபத்து குறையும். ஸோ, காமத்தை அடிக்கடி கொண்டாடுங்க. மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்க...'' என்கிறார் டாக்டர் காமராஜ்.

வாசகர் கேள்வி:

நான் 29 வயது நிரம்பிய ஆண். எனக்கு சிறு வயதிலிருந்தே சுய இன்பத்தில் அதீத ஆர்வம். வேலை மற்றும் குடும்ப சூழ்நிலைகளால் ஸ்டிரெஸ் வந்தால் ஸ்ட்ரெஸ் பஸ்டராக சுய இன்பம் அனுபவிப்பேன். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சுய இன்பத்தில் ஈடுபட்டு விடுவேன். சமீபத்தில், ஆண்குறி முன்தோலை பின்னிழுத்து நீரில் தூய்மைப்படுத்தும்போது, மொட்டின் முடிவுப்பகுதி கருநீல நிறத்தில் இருப்பதைப் பார்த்தேன். ஆனால், வலியோ வீக்கமோ இல்லை. இருந்தாலும் பயமாக உள்ளது. இப்போது எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், தாம்பத்திய வாழ்வில் இதன் காரணமாக ஏதேனும் பிரச்னை வருமோ என்று பயமாக உள்ளது.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை
கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4

டாக்டர் பதில்: ``சுய இன்பத்துக்கும் இந்த நிற மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆணுறுப்பில் இப்படி நிறமாற்றம் ஏற்படுவது இயல்பானதுதான். அங்கு நிகழ்கிற சின்னச் சின்ன மாற்றங்களை உற்றுப்பார்த்து பயப்படுவது தேவையில்லாதது. இதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் வராது. ரொம்பவும் பயமாக உணர்ந்தீர்களென்றால், பாலியல் நிபுணரைச் சந்தியுங்கள்.''

இந்தத் தொடரில், தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்கள் தீர்வு வழங்கவிருக்கிறார்கள். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள்கூட நிச்சயம் கிடைக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு