Published:Updated:

`இப்படியும் புரொபோஸ் பண்ணலாம்!’ - வைர மோதிர `க்ளிக்’களால் முகநூலில் கவனம் ஈர்த்த காதல்

ராம் பிரசாத்

எல்லோரும் காதலைச் சொல்ல எதாவது திட்டமிடுவார்கள். நான் அப்படியில்லை தனித்துவமானவன்! - இணையத்தைக் கவர்ந்த Edi Okoro ஃபேஸ்புக் பதிவு.

lOVE
lOVE

காதல்... சிலருக்கு வலிகளை கொடுத்து இருக்கும். சிலருக்கு வாழ்க்கையைக் கொடுத்திருக்கும். காதலிக்கிறத விட காதல சொல்ல தைரியம் வேணும். சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை விட சொல்லாமல் கடந்து போன காதல்கள் நிறைய இருக்கும். இன்டர்நெட் யுகத்தில் எப்படி எல்லாமோ காதலை வெளிப்படுத்துகிறார்கள். நமக்கு பிடிச்ச பெண்ணின் கண்களை பார்த்து காதல் சொல்லுறது எல்லாம் வேற லெவல் த்ரில். கடந்த சில நாள்களாக ஃபேஸ்புக்கில் ஒரு காதல் ஜோடி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Edi Okoro
Edi Okoro

Edi Okoro தனது காதலியிடம் காதலைச் சொல்ல தயாராகிவிட்டார். காதலிக்காக பரிசளிக்க வைர மோதிரமும் வாங்கியாகிவிட்டது. காதலைச் சொல்லுவதற்கு ஒரு சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது காதலி Cally-யிடம் காதல் சொல்வதற்காக மோதிரத்தை கொண்டு செல்கிறார். அவர் நினைத்த அந்தத் தருணம் அமையாததால் மோதிரத்துடன் ஒரு புகைப்படம் எடுக்கிறார். இப்படியாக ஒரு மிகப்பெரிய ஆல்பத்தையே உருவாக்கிவிட்டார். சில தருணங்களில் cally-க்கு எட்டி தன்னை புகைப்படம் எடுப்பது தெரியும். ஆனால் எதற்காக எடுக்கிறார் எனத் தெரியவில்லை. அனைத்துப் புகைப்படத்திலும் மோதிரமும் இடம்பிடித்துள்ளது. ஆனால், அதை cally-யால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடற்கரை மணலில் இருவரும் ஓய்வு எடுக்கும் போது மோதிரத்துடன் ஒரு செல்பி, பைனாக்குலரில் Cally பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு க்ளிக், வீட்டில் இருக்கும் போது ஒரு கேஷ்யூவல் போட்டோ, Cally தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரது உள்ளங்கையில் வைத்து ஒரு த்ரில் போட்டோ என அந்த ஆல்பம் நீண்டுக்கொண்டே செல்கிறது.

`இப்படியும் புரொபோஸ் பண்ணலாம்!’ - வைர மோதிர `க்ளிக்’களால் முகநூலில் கவனம் ஈர்த்த காதல்

எடி ஃபேஸ்புக் பதிவில் “ எல்லோரும் காதலைச் சொல்ல எதாவது திட்டமிடுவார்கள், நான் அப்படியில்லை. நான் தனித்துவமானவன். மேலும் நான் இது போன்று எதாவது ஏற்பாடு செய்தால் என்ன செய்யப்போகிறேன் என்பதை அவள் உணர்ந்துவிடுவாள். கைகளில் மோதிரத்தோடு அந்த அழகான தருணத்திற்காக காத்திருக்கிறேன். ஒரு மாதம் இருக்கலாம் அல்லது இன்னும் அதிகமான நாள்களாகக் கூட இருக்கலாம். சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன். அந்த மோதிரத்தின் மீது எனக்கு இருந்த ஈர்ப்பில் அதை ரசித்துக்கொண்டிருந்தேன். Cally பார்த்துவிட்டாள் அவள் என்னை அடித்தாள். எனது நினைவுகள் எல்லாம் நான் தொலைந்த சந்தர்ப்பந்தை அசைப்போட்டுக்கொண்டிருந்தது. இந்தப் புகைப்படங்களை எல்லாம் எடுக்கும்போது அவளுக்கு தெரியாது என்னிடம் மோதிரம் இருக்கிறது என்று.

இப்படி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து நிறைய புகைப்படங்களை க்ளிக் செய்து விட்டேன். எனது யோசனை என்னவென்றால் நான் எனது காதலைச் சொல்ல சரியான தருணத்தைக் கண்டுபிடிக்கும் வரை, அல்லது நான் மாட்டிக்கொள்ளும் வரை இல்லை நான் எப்போது காதலைச் சொல்கிறேனோ அதுவரை புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டேன். நான் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ஃபேஸ்புக் பதிவு இணையத்தில் ஏராளமான லைக்ஸ் மற்றும் ஷேர்களை அள்ளியது. இந்நிலையில் மற்றொரு பதிவில், எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. நான் மாட்டிக்கொள்ளவில்லை. நான் காதல் சொன்ன கதையை மற்றொரு பதிவில் சொல்கிறேன் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.