Published:Updated:

மசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்... லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்!

happy couple
happy couple

''தம்பதியர் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும்போதும் முத்தமிட்டுக்கொள்ளும்போதும் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிற கார்ட்டிசால் ஹார்மோனின் சுரப்பு குறையும். ஸ்ட்ரெஸ் இல்லாதபோது ஆயுள் அதிகரிக்கத்தானே செய்யும்...''

மனைவியை நேசிக்கிற கணவர்கள், மற்றவர்களைவிட நீண்டகாலம் வாழ்வார்கள் என்கிறது ஜெர்மனியின் ஆய்வு ஒன்று. கெயில் (kiel) யுனிவர்சிட்டியின் சைக்காலஜி புரொஃபசர் டாக்டர் ஆர்தர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

நேசிப்பு விஷயத்தில், உடல் அருகாமை மட்டுமே முக்கியம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உணர்வுரீதியான நெருக்கமும் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. அதுமட்டுமல்லாமல், மனைவிமீது காதலாக இருக்கிற கணவர்கள், அலுவலக வேலைகளில் மற்றவர்களைவிட சிறந்த பர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறார்கள் என்றும் சொல்கிறது அந்த ஆய்வு. இதற்காக, ஜெர்மனியிலுள்ள 110 இண்டஸ்ட்ரியல் மேனேஜர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மனைவி மீதான காதலுக்கும் ஆயுள் அதிகரிப்பு மற்றும் அலுவலகத்தில் பெஸ்ட் பர்ஃபாமன்ஸுக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா?

உளவியல் ஆலோசகர் சிந்து மேனகாவிடம் கேட்டோம்.

happy couple
happy couple

" ஹார்மோன்கள் சரியாக இருந்தால் நம் மனநிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை உளவியல் மொழியில் நாங்கள் நியூரோ டிரான்ஸ்மிட்டர் என்போம். தம்பதிகள் அணைத்துக்கொள்ளும்போதும் முத்தமிட்டுக்கொள்ளும்போதும், காதல் ஹார்மோனான ஆக்ஸிடோசின் அதிகமாகச் சுரக்கும். மற்றவர்களை நேசிக்கும்போதும் சந்தோஷமாக இருக்கும்போதும் ஒரு வெற்றியை அனுபவிக்கும்போதும் நமக்கெல்லாம் ஆக்ஸிடோசின், செரட்டோனின், டோபமைன் என மூன்று விதமான ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் சுரக்கிற நேரத்தில் தன் துணையின்மீது காதல் அதிகரிப்பது, பரவசமாக உணர்வது, தன் துணையிடம் பாதுகாப்பு உணர்வு ஏற்படுவதெல்லாம் நிகழும்.

கணவர்களுக்கு எந்த அளவுக்கு ஆக்ஸிடோசின் சுரக்கிறதோ அந்த அளவுக்கு தன் மனைவிமீது காதலும் அதிகரிக்கும் என்பதை இப்படியும் சொல்லலாம். மனைவியை நேசிக்கும்போது, ஹேப்பி ஹார்மோன்கள் சுரக்கும். ஹேப்பி ஹார்மோன்கள் சுரக்கும்போது மனைவியை நேசிப்பது அதிகமாகும்.

உளவியல் ஆலோசகர் சிந்து மேனகா
உளவியல் ஆலோசகர் சிந்து மேனகா

தவிர, தம்பதியர் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ளும் போதும் முத்தமிட்டுக்கொள்ளும்போதும் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்துகிற கார்ட்டிசால் ஹார்மோனின் சுரப்பும் குறையும். ஸ்ட்ரெஸ் இல்லாதபோது ஆயுள் அதிகரிக்கத்தானே செய்யும்.

'என் மனைவிக்கு என் மேல செம்ம லவ்வு' என்று உணரும் கணவர்கள், சுயமரியாதையாக ஃபீல் செய்வார்கள். அதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகமாகும். இந்த தன்னம்பிக்கை அவர்களுடைய வேலையிலும் பிரதிபலிக்கும். 'என்னால் இந்த வேலைகளை சரியாகச் செய்ய முடியும்' என்ற தன்னம்பிக்கை வந்துவிடுவதால், அவர்கள் செய்கிற வேலைகள் எல்லாம் தெளிவாகவும் இருக்கும். பெஸ்ட் பர்ஃபாமர் என்ற பாராட்டும் கிடைக்கும்.

happy couple
happy couple

லவ் ஹார்மோனான ஆக்ஸிடோசின் சுரக்கும்போது . படபடப்பு குறையும். இந்த ஹார்மோன் உடல், மனப் பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிடும்.

ரோல் சேஞ்ச் முதல் சாப்பிடும் முறைவரை... லாக்டவுணில் குடும்பத்தில் சந்தோஷம் பெருக 5 டாஸ்க்குகள்!

இந்த லாக்டெளன் நேரத்தில், கணவனும் மனைவியும் 24 மணி நேரமும் இணைந்தே இருக்கிறார்கள். சேர்ந்து வேலை செய்வது, சேர்த்து பிரச்னைகளைச் சந்திப்பது என்று இருக்கையில், லவ் ஹார்மோன் நிச்சயம் அதிகரிக்கும்.

happy couple
happy couple

மேலே சொன்னதெல்லாம், தம்பதியர் அவர்களையறியாமல் காதல் உணர்வில் திளைத்திருக்கும்போது நிகழ்வன. லவ் ஹார்மோனை திட்டம்போட்டும் சுரக்கவைக்கலாம். ஒருவருக்கொருவர் மசாஜ் செய்துகொள்வது, ஏதாவது கேம் விளையாடுவது, ஒன்றாக நடனமாடுவது, படம் பார்ப்பது, கல்யாண ஆல்பத்தைப் புரட்டுவது என்று முயற்சி செய்துபாருங்கள். அந்த ஆய்வு உங்கள் வாழ்க்கையிலும் உண்மையாகும். "

நிலாச்சோறு, ஃபேமிலி ட்ரீ, கறுப்பு வெள்ளை ஆல்பம்... உறவுகளைக் கொண்டாடுவோம் ஊரடங்கில்!
அடுத்த கட்டுரைக்கு