Published:Updated:

முதல் மணம் தோல்வி... மறுமணம் செய்ய பயம்... கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன? #LetsSpeakRelationship

Wedding - Representational image
Wedding - Representational image ( pixabay )

’’அவர் விருப்பப்பட்டு விவாகரத்து பெற்றாரா அல்லது அவருடைய பெற்றோரால் பலவந்தப்படுத்தப்பட்டாரா என்பதும் தெரியவில்லை.’’ #LetsSpeakRelationship

என்னுடைய பெயர் ராஜ். எனக்குத் திருமணம் முடிந்து ஒரு வருடம்தான் ஆகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அதற்குள் விவாகரத்தும் ஆகிவிட்டது. காரணம், நான் திருமணம் செய்துகொண்ட பெண்ணும் அவள் பெற்றோரும், ’என் பெற்றோரையும் உடன்பிறந்தவர்களையும் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும்’ என்று வற்புறுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் கொடுமை தாங்க முடியாமல் நான் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கே சென்றுவிட்டேன். முடிவில் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டேன்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
freepik

தற்போது என் பெற்றோர் எனக்கு வேறு திருமணம் செய்துவைக்க விரும்புகிறார்கள். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால், தம்பி, தங்கை இருப்பதால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. மீண்டும் திருமணம் செய்துகொண்டால் முன்போலவே வாழ்க்கைத்துணையும் குடும்பமும் அமைந்துவிட்டால் நான் என்ன செய்வது... இதை நினைத்தாலே கவலையாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

சமீபத்தில் விகடனின் uravugal@vikatan.com மெயிலுக்கு, தன் பிரச்னைக்கான தீர்வு கேட்டு வந்திருந்த வாசகரின் மெயில் இது. இவருடைய பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார் உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

’’நீங்கள் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறீர்கள். உங்கள் கேள்வியில் முழுமையான தகவல்கள் இல்லை. உங்கள் திருமண வாழ்வில் தாம்பத்ய உறவு இருந்ததா என்பது தெரியவில்லை. நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப்பார்க்கும்போது உங்கள் கடந்தகால மனைவி, அவருடைய பெற்றோர் பேச்சைக் கேட்டுதான், உங்களை குடும்பத்தைவிட்டுப் பிரிக்க முயற்சி செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அதனால், அவர் விருப்பப்பட்டு விவாகரத்து பெற்றாரா அல்லது அவருடைய பெற்றோரால் பலவந்தப்படுத்தப்பட்டாரா என்பதும் தெரியவில்லை. தவிர, உங்கள் முதல் திருமண வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என்பது உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே நன்கு தெரியும். நடந்த சம்பவங்களை மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். உங்கள் தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்துவிட்டு மறுமணம் குறித்து சிந்தியுங்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

இனி உங்கள் மறுமணம் குறித்த பயத்துக்கு வருகிறேன். ஒரு பெண் அறியாமையுடன் நடந்துகொண்டாள் என்பதற்காக எல்லாப் பெண்களுமே அப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவு செய்ய வேண்டாம். வரப்போகும் வாழ்க்கைத்துணையிடம் ’சுயசிந்தனை உள்ள பெண்ணாக இருப்பது’, ’தன் பெற்றோரைப் போலவே கணவருடைய பெற்றோரை மதிப்பது’, ’குடும்பமாகச் சேர்ந்து வாழ்வது’ போன்ற இயல்புகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ளுங்கள். கணவன் - மனைவி உறவு உருவாவதற்கும், அது நிலைத்து நிற்பதற்கும் சில தேவைகளே முக்கிய காரணமாகின்றன. உங்களின் தேவைகளை உங்கள் துணையிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தெளிவு கிடைத்தபிறகு திருமணம் செய்துகொள்ளுங்கள். தவிர, கணவன் மனைவி உறவு வலுவாக இருக்கும் என்பதைத் திருமணத்துக்கு முன்னரே சில இயல்புகளை வைத்துக் கண்டறிய முடியும். அவை என்னென்ன என்று சொல்கிறேன்.

`Work From Home' - தம்பதிகள் சமாளிக்க வேண்டிய 10 சவால்கள்!
#WFH #CoupleGoals

1. ’இவரைத் திருமணம் முடித்தால் நான் இவரை மனமார விரும்புவேன்’ என்பது அந்தப் பெண்ணின் பேச்சில் தெரிகிறதா என்று கவனியுங்கள்.

2. இவர் எனக்கு முக்கியம் என்று அந்தப் பெண் நினைக்க வேண்டும்.

3. உங்களுடன் வெளிப்படையாகப் பேசுகிறாரா என்பதை கவனியுங்கள். திருமண பந்தம் வலுப்பெற வெளிப்படைத்தன்மை அவசியம்.

4. பிரச்னைகள் வரும்போது கோபத்துடன் முடிவெடுக்கிறாரா அல்லது நிதானமாக உள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

5. பிரச்னைகளைக் கடந்து செல்ல முயல்பவரா அல்லது அதற்குத் தீர்வு காண்பவரா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
freepik
#Let'sSpeakRelationship
#Let'sSpeakRelationship
WFH: குடும்பத்தலைவியின் பறிபோன மீ டைம்... நிபுணரின் தீர்வுகள்! #LetsSpeakRelationship

6. பரஸ்பர நம்பிக்கை திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அது உங்கள் இருவரிடையே ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள்.

7. பொருளாதாரரீதியாக அவர் உங்களுக்குப் பொருத்தமானவரா எனக் கவனியுங்கள். அதாவது அதிகம் செலவு செய்கிறாரா அல்லது சிக்கனமாக உள்ளாரா என்று பாருங்கள்.

8. சிலர் எனக்கு நண்பர்களே இல்லை என்று கூறுவதுண்டு. அப்படிப்பட்டவர் புதிதாக ஒரு வீட்டிற்கு வரும்போது, அவ்வளவு சீக்கிரம் கலந்து பழக மாட்டார்கள். அதனால், அவரின் இயல்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

9. அன்பு, நம்பிக்கை, மரியாதை இந்த மூன்றும்தான் தம்பதியர் பரஸ்பரம் எதிர்பார்க்கும் விஷயங்கள். இவை உங்கள் வருங்கால மனைவியிடம் இருக்கின்றனவா என்று பாருங்கள்.

10. மேலே சொன்ன அத்தனை விஷயங்களைவிடவும் முக்கியமானது இது. நீங்கள் உங்கள் வருங்காலத் துணையிடம் எதிர்பார்க்கிற அத்தனை தகுதிகளும் உங்களிடமும் இருக்கின்றனவா என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏதேனும் குறையும்பட்சத்தில் அதைச் சரி செய்யவும் தயாராக இருங்கள். உங்களின் புதிய திருமண வாழ்வு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.’’

அடுத்த கட்டுரைக்கு