Published:Updated:

``மினிமலிசம்; வெளிநாட்டு வேலை மோகம்"- நிபுணர்களின் `லாக்டௌனுக்குப் பின்' கணிப்புகள்#VikatanSpecial

லாக்டௌனுக்குப் பின் நேரக்கூடிய வாழ்க்கைமுறை மாற்றங்கள்
லாக்டௌனுக்குப் பின் நேரக்கூடிய வாழ்க்கைமுறை மாற்றங்கள்

கொரோனாவுக்கு முன்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு படிநிலையில் இருந்திருப்போம். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு முதல் நிலையிலிருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் இரண்டாம் நிலைக்கு வந்துவிட்டோம்.

கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் என்று பிரித்துச் சொல்கிற அளவுக்குக் கண்ணுக்குத் தெரியாத கிருமியொன்று நமக்கெல்லாம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது. வீட்டுச் சாப்பாடு, ஆரோக்கியம், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது என்று நம் வாழ்க்கையை பாசிட்டிவ்வாகத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது.

இந்த மாற்றங்கள், லாக்டௌனுக்குப் பிறகும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

corona
corona

அந்த வகையில் உணவு, உறவு, மனநிலை, வாழ்க்கைமுறை என இந்த லாக்டௌனில் நிகழ்ந்த என்னென்ன நல்மாற்றங்களை எல்லாம், லாக்டௌனுக்குப் பிறகும் மக்கள் தொடர்ந்து எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பது பற்றிப் பேசுகிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.

கணவன் - மனைவி உறவில் மாற்றங்கள்:

லாக்டௌனுக்குப் பின்னர் கணவன் மனைவி உறவில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழலாம் என்பது பற்றிச் சொல்கிறார் உளவியல் நிபுணர் சிந்து மேனகா.

1. 'காலையில் நம்மை ஆபீஸ் அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் சும்மாதானே இருக்கிறாள்' என்கிற கணவர்களின் தவறான பார்வை மாறியிருக்கும். வீட்டு வேலைகள் என்பவை நாள் முழுக்க இருப்பவை என்பதும் கணவர்களுக்குப் புரிந்திருக்கும். விளைவு, வீீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிசெய்கிற கணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

love
love

2. அதேபோல, வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கிற கணவர்களின் வேலைப்பளு, ஹவுஸ் வொய்ஃப் மனைவிகளுக்குப் புரிந்திருக்கும். 'இவ்வளவு கஷ்டங்களும் நமக்காகத்தானே' என்கிற புரிந்துணர்வில் அன்பு அதிகரிக்கும்.

3. ஆபீஸ் கிளம்புகிற காலை பரபரப்பிலும், சோர்ந்து போன இரவுகளிலும் சந்தித்துக்கொண்டிருந்த தம்பதிகள், லாக்டெளன் நாள்களில் இரவும் பகலும் ஒன்றாகவே இருக்கிறார்கள். அதனால் பரஸ்பரம் ஒருவருடைய ப்ளஸ் இன்னொருவருக்குத் தெரிய ஆரம்பிக்கும். இது உறவைக் கொஞ்சம் இறுக்கமாக்கும்.

ஊரடங்கால் தனியாக சிக்கிய இளைஞர் வெட்டிக் கொலை! - ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய கும்பல் #Lockdown

4. 'நான் ரொம்ப பிஸி. குடும்பத்தோட நேரம் செலவழிக்கவே முடியல' என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கு, வொர்க் ஃப்ரம் ஹோமில் வேலையும் செய்துகொண்டு, குடும்பத்துக்கு க்வாலிட்டி டைமும் கொடுக்க முடிகிறது என்கிற உண்மை புலப்பட்டிருக்கும். இது கொரோனாவுக்குப் பிறகும் பல குடும்பங்களில் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

5. ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் மொபைல் போனில் மூழ்கிக் கிடந்த கணவர்கள், தற்போது கண்களும் கைகளும் சோர்ந்துபோய் மனைவி, குழந்தையுடன் நேரம் செலவழிக்க முன்வருகிறார்கள். இது நபர்களைப் பொறுத்து லாக்டெளனுக்குப் பிறகும் தொடர வாய்ப்பிருக்கிறது.

உளவியல் நிபுணர் சிந்து மேனகா
உளவியல் நிபுணர் சிந்து மேனகா

6. சோஷியல் ட்ரிங்கர்ஸ் அந்தப் பழக்கத்திலிருந்து தற்போது வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். லாக்டெளனுக்குப் பிறகும் இது தொடர்ந்தால், இதனால் பிரச்னைகளைச் சந்தித்து வந்த தாம்பத்தியங்கள் ஹேப்பி மனநிலைக்கு மாறும்.

7. லாக்டெளனுக்குப் பிறகு வரவிருக்கிற பொருளாதார நெருக்கடிகளை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எதிர்கொள்கிறபோது சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும், சேர்ந்துதான் சமாளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

8. லாக்டெளன், வேலையில்லை, சம்பளம் குறைப்பு என்று பிரச்னைகள் சூழ்ந்த காலத்திலும் குடும்பத்தைக் காப்பாற்றிய கணவன் மீது மனைவிக்கும் மனைவி மீது கணவருக்கும் பரஸ்பரம் பிரியம் ஏற்படும்.

Love
Love

9. பொதுவான ஒரு பிரச்னையைச் சந்தித்த பிறகு, தம்பதிகளிடையே வருகிற கருத்து வேறுபாடுகளை, லாக்டெளன் காலத்து காதல் வெல்லும். அந்தரங்கம் அதிகரிக்கும்.

10. மைனஸ் என்று பார்த்தால், ஒரு சில தம்பதிகள், 'போதும் அட்ஜஸ்ட் செய்தது' என்கிற முடிவுக்கு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

தனிமனித உளவியல் மாற்றங்கள்!

கொரோனா லாக்டௌனால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், லாக்டௌன், கொரோனா அச்சுறுத்தல் இரண்டும் விலகினாலும் தொடரும் என்று கூறப்படுகிறது."இந்தக் கொரோனா சந்தர்ப்பத்தை வைத்து மனிதனின் உளவியல் மாற்றங்களைக் குறுகியகால மாற்றங்கள், நீண்டகால மாற்றங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்" என்கிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

Psychology
Psychology

"குறுகியகால மாற்றங்கள் என்பது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை ஏற்படும் மாற்றங்கள். இவற்றில் சில, பிரச்னை தீர்ந்ததும் மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடும். மாஸ்லோவின் மனிதனின் படிநிலை கோட்பாடின்படி, மனிதனின் தேவைகள் உடலியல் தேவை, பாதுகாப்புத் தேவை, சமூகத் தேவை, கௌரவத் தேவை, தன்னலத் தேவை என்று பிரிக்கப்படுகின்றன.

உடலியல் தேவை என்பது அத்யாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம். உடலியல் தேவைகள் பூர்த்தியானதும் அடுத்த நிலையான பாதுகாப்புத் தேவைக்கு மனிதன் செல்வான். அதாவது தொழில் பாதுகாப்பு, உயிருக்குப் பாதுகாப்பு, உடமைக்குப் பாதுகாப்பு, அமைதியான வாழ்க்கை போன்றவை இந்த நிலையில் இருக்கும்.

உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.
உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

அடுத்த படிநிலை, கௌரவத் தேவை. உளவியல் சார்ந்த தேவைகளாக அவை இருக்கும். அதாவது பிறரால் மதிக்கப்படுதல், உயர் பதவியை விரும்புதல், சொத்துகள், ஆடம்பத் தேவைகளை விரும்புதல் போன்றவை. இறுதிநிலை, தன்னலம். திறமையை வெளிப்படுத்த வேண்டும், சாதித்துக்காட்ட வேண்டும் போன்றவை.

`நானும் இங்கு விளையாடத்தான் வந்திருக்கிறேன்!’-கைஃப் பதிலடியால் அமைதியான கங்குலி.. #Natwest நினைவுகள்

கொரோனாவுக்கு முன்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு படிநிலையில் இருந்திருப்போம். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு முதல் நிலையிலிருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் இரண்டாம் நிலைக்கு வந்துவிட்டோம். பணம் முக்கியமில்லை, பாதுகாப்புதான் முக்கியம் என்ற நிலையில் இருக்கிறோம். ஆடம்பரம், சொத்து சேர்க்க வேண்டும் என்ற எந்த ஆசையும் ஏற்படாது. அரசியல்வாதிகள்கூட தேர்தலைப்பற்றி சிந்திக்கவில்லை. முன்னேற்றத்தைப் பற்றி யாரும் சிந்திக்கவேயில்லை. உயிருடன் இருப்பதற்கும், நோயில்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றுதான் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

happy
happy

இந்த நிலை மாறியவுடன் திடீரென்று மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். உண்மை நிலைக்கு வந்துவிடுவார்கள். அப்போது வேலை, பணம், சொத்து சேர்க்க வேண்டிய நிலை என்ற அனைத்துத் தேவைகளும் முன்னிலையில் நிற்கும். அவையெல்லாம் பூர்த்தியாகாதபட்சத்தில் தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இளைஞர்கள் மத்தியில், அதிகம் சொத்து சேர்க்க வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் மாற வாய்ப்புள்ளது. தனக்கான அத்யாவசியத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்துகொண்டு அதில் சந்தோஷமாக வாழ நினைப்பார்கள்.

"கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.... இந்தியாவில் குறைவு என்பது சரியா?" - மருத்துவர் விளக்கம்

மனிதன் என்பவன் ஒரு சமுதாய விலங்குதான் என்றாலும், இனி சமூகமயமாக்கலை விரும்பமாட்டார்கள். அடிக்கடி கெட் டு கெதர், பார்ட்டி கலாசாரங்கள் போன்றவை மாறும். ஆனால், இவை அனைத்தும் குறுகிய காலத்துக்குத்தான். இந்த பயம் நீண்ட காலம் நீடிக்காது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டால் மக்கள் இந்த நோயைப்பற்றி மறந்துவிடுவார்கள்.

food style
food style

உணவுப் பழக்கம்:

வீட்டில் சமைக்காமல் ஹோட்டல்களில் வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தையுடையவர்களில் பலர் இந்த நாள்களில் வீட்டிலேயே சாப்பிடுவது பிடித்துப் போயிருக்கும். ஆரோக்கியமான பழக்கத்துக்கு மாறுவதற்காக இனி ஹோட்டல் சாப்பாட்டைத் தவிர்ப்பார்கள். அதனால் உணவு டெலிவரி வழங்கும் சேவைகளும் பாதிக்கப்படும். தற்போது அசைவ உணவைத் தவிர்க்கும் சூழல் ஏற்படுவதால் அதுவே பழகி சிலர் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாற வாய்ப்புள்ளது. குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது குடிப்பவர்கள் இதை நிறுத்த வாய்ப்புள்ளது. ஆனால், குடி நோயாளிகளுக்கு இந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. அவர்கள் டாஸ்மாக் திறந்ததும் மீண்டும் குடிக்கப் போய்விடுவார்கள்.

``ஆஸ்திரேலியான்னா பயந்துடுவோம்னு நினைச்சியா... பொளந்துடுவேன்டா!'' - சென்சுரிகள் கடந்தும் மறக்காத சச்சினின் சென்சூரி

வெளிநாட்டு மோகம்:

வெளிநாடுகளில் படிக்கச் செல்வது, வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையும். முன்பெல்லாம் எந்த நாட்டிலுள்ள எந்தக் கல்லூரியில் அதிக வசதிகள் உள்ளன என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து அனுப்புவார்கள். இனி அப்படி வெளிநாட்டுக்குச் சென்றாலும் எந்த நாடு பாதுகாப்பானது, எந்த நாடு குடிமகன்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது போன்ற விஷயங்களில் தெளிவுபெற்றுச் செல்வார்கள். பெற்றோர்களும் வெளிநாட்டு மோகத்தைக் காட்டிலும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம் என்று நினைப்பார்கள்.

Flight
Flight

வெளிநாட்டுக்கு, வெளியூர்களுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். குறைந்தது ஓராண்டுக்கு சுற்றுலா பற்றி யாரும் யோசிக்க மாட்டார்கள்.

பொதுவாக,21 நாள்கள் ஒரு செயலைச் செய்வதால் அதுவே பழக்கமாகிவிடும் என்பார்கள். தற்போது வீட்டிலேயே இருப்பதால் உடற்பயிற்சிக்கு சிலர் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். இத்தனை நாள்கள் பணம் செலவழித்து ஜிம்முக்குச் சென்றவர்கள் தற்போது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.

Gym
Gym

எதற்கு அத்தனை பணம் செலவழித்து ஜிம்முக்குச் செல்ல வேண்டும் என்று ஜிம்முக்குச் செல்வதைப் பலர் குறைக்கக்கூடும். இன்னொரு புறம் வீட்டிலேயே இருந்ததால் உடல் எடை அதிகரித்து ஜிம்முக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்."

உணவுமுறையில் மாற்றம்!

நம் பாரம்பர்ய உணவு முறைக்கு லொக்டௌன் நம்மை திருப்பியிருப்பது பற்றிச் சொல்கிறார், சித்த மருத்துவர் கு.சிவராமன்.

சித்த மருத்துவர் கு. சிவராமன்.
சித்த மருத்துவர் கு. சிவராமன்.

"இந்தக் கொரோனா லாக்டௌன், நம் கைகால்களுடன் சேர்த்து நாக்கையும் கட்டிப்போட்டுவிட்டது. 'உணவகங்கள் திறக்கப்படாது. ஆன்லைனிலும் ஃபுட் டெலிவரி இல்லை. மளிகைக் கடைகளும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும்.' - இது போன்றதோர் இக்கட்டான நிலையில் வேறு வழியே இல்லாமல், மாதம் முழுக்க வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டோம்.

"மூச்சுத்திணறல் ஏற்பட்டாலே கொரோனா என்று அர்த்தமில்லை!" - மருத்துவமனையில் 'சரி' (SARI) வார்டுகள் ஏன்?

இந்த லாக்டௌனால் நம் உணவு முறையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் 'மிஸ் யூ பரோட்டா', 'ஐ நீட் யூ பிரியாணி' என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் அளவுக்கு நம்மைக் கொண்டு சென்றதுடன் மட்டுமல்லாமல் மற்றொரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீட்சா, கிரில்டு சிக்கன், ஷவர்மா போன்ற துரித உணவுகளுக்கெல்லாம் அடிமையாகி, 'இதெல்லாம் இல்லாமல் என் நாளே முழுமைபெறாது' என்ற ரேஞ்சில் உணவகங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்த நாம், இப்போது மூன்று வேளைகளும் வீட்டில் சமைத்த சுத்தமான, சத்தான உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே அந்த நல்ல மாற்றம்!

fast food
fast food

இந்த மாற்றம் லாக்டௌனை கடந்தும் தொடர்கையில் நிச்சயம் நம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், நமக்குத் துரித உணவுகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளும் முடிவுக்குவர வாய்ப்பிருக்கிறது.

லாக்டௌனால் மக்களின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. லாக்டௌன் ஏற்படுவதற்கு முன்புவரை பெரும்பாலானோர் துரித உணவுகள் இல்லாத தங்கள் உணவுமுறையை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். சிலர் தங்கள் உடலின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இனிமேல் பீட்சா, பர்கர் எதையும் சாப்பிடக்கூடாது என்று முடிவெடுத்தாலும் அவர்களின் நாக்கு அந்த முடிவுக்கு ஒத்துழைக்காது.

healthy foods
healthy foods

இதுபோன்ற துரித உணவுகளை நாம் சாப்பிடுவதுடன் மட்டுமல்லாமல், நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தியிருந்தோம். துரித உணவு உட்கொள்ளும் பலர் உடல் எடை அதிகரிப்பு, செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதியுற்றுவந்தார்கள். அவர்கள் எல்லாம் துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட இந்த லாக் டௌன் ஒரு வரப்பிரசாதம்தான்.

`எனக்குப் பிரியாணி வேண்டாம்; துடைச்சுவிட்டா மண்ணு போயிடும்!’ - மக்களின் உணர்வுகளைப் பகிரும் நடிகர்

தற்போது நாம் மூன்று வேளையும் சுகாதாரமான முறையில் வீட்டில் சமைத்த, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இந்த உணவுகள் நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கக்கூடியவை. இதனால் நமக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படாது. குழந்தைகளும் தற்போது துரித உணவுகளை மறந்து வீட்டு உணவு முறைக்கே பழகிக்கொண்டு வருகிறார்கள். லாக் டௌனுக்கு பிறகான நாள்களிலும் இதே உணவு முறை நம்மிடையே தொடர்ந்தால் நிச்சயமாக அது நம் ஆரோக்கியத்தில் ஒரு நல்ல மேம்பாட்டைக் கொண்டுவரும்.

health
health

சிலர் லாக்டௌன் முடிந்தவுடன் உணவகங்கள் திறந்தபிறகு மீண்டும் துரித உணவுப் பழக்கத்திற்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. 'எப்போதாவது சாப்பிட்டால் ஒன்றும் இல்லை' என்று தொடங்கும் இந்தப் பழக்கம்தான், இதை எப்போதுமே சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தி அதற்கு அடிமையாக்கிவிடும்.

மீண்டும் இந்த உணவு முறைக்குள் செல்வதால் நமக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை நினைத்துப் பார்த்தோம் என்றால், நிச்சயமாக துரித உணவுப் பழக்கத்துக்குச் செல்ல மாட்டோம். எனவே, இதே ஆரோக்கியமான உணவு முறையை லாக்டௌனுக்குப் பிறகும் கடைப்பிடிக்க முயல்வதே சாலச் சிறந்தது.

மடியில் லேப்டாப், பாக்கெட்டில் மொபைல்... பாதிக்கப்படும் இனப்பெருக்கத் திறன்! -ஆண்களுக்கு ஓர் அலெர்ட்

வாழ்வியல் மாற்றம்:

கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள இந்த 'லாக்டௌன் நாள்கள்' நம் எல்லோருக்கும் 24 மணி நேரமும் தொடர்ந்து பாடம் நடத்தி நம்மை புதிய வாழ்க்கைக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறது. லாக்டௌன் வாழ்க்கையால் ஏற்படும் தொல்லைகள், துன்பங்கள் ஒரு புறம் இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. இந்தப் புதிய அனுபவம் நம் வாழ்க்கைமுறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரப்போகின்றது என உலக அளவில் உளவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் சொல்கிறார்கள்.

வாழ்வியல் மாற்றம்
வாழ்வியல் மாற்றம்

என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? சுயமுன்னேற்றப் பேச்சாளரும், `சக்ஸஸ் ஞான்' என்ற அமைப்பின் நிறுவனருமான சுரேந்திரன் ஜெயசேகரிடம் பேசினோம்.

சுயசுத்தம்... தலை முதல் வீட்டுத் தரை வரை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!
#SelfHygiene

''இந்த லாக்டௌனில் 30 நாள்களைக் கடந்துவிட்டோம். இந்த நாள்களில் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள் மக்கள். ஒரு குகை மனிதனைப்போல்தான் வாழ்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே சின்னச் சின்ன குறைகள், சண்டை, சச்சரவுகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டும் வாழப் பழகிவிட்டனர். லாக் டௌன் முடிந்த பிறகு மாறுபட்ட வாழ்க்கை முறையை நாம் தேர்வுசெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மக்களின் மனநிலை மினிமலிசம் என்று சொல்லக்கூடிய ஒரு வாழ்க்கை முறைக்குத் தயாராகிவிடும்.

சுரேந்திரன் ஜெயசேகர்
சுரேந்திரன் ஜெயசேகர்

'மினிமலிசம்' என்னும் வாழ்க்கை முறையில் மக்களின் வாழ்க்கைக்கு எது தேவையோ, அதை மட்டுமே மக்கள் தேடிப்போக ஆரம்பித்துவிடுவார்கள். இருப்பதை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கையை அவர்கள் வாழத் தொடங்கிவிடுவார்கள். தங்களின் ஆடம்பரங்களை விட்டுவிட்டு எவை தேவையோ அவற்றை மட்டுமே வாங்குவார்கள். புதிய புதிய பொருள்களை அவசரப்பட்டு வாங்க மாட்டார்கள். இந்த வாழ்க்கை முறை அவர்களுக்கு ஒரு நிதானத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

`கொரோனா பரவல்; ஆடைகளில் வேண்டும் அதிக கவனம்!' -மருத்துவர் பகிரும் 10 டிப்ஸ் #DoctorAdvise

இப்போது வீட்டில் உள்ள பெற்றோர்கள், குழந்தைகளுடன் மன மகிழ்ச்சியோடு நேரத்தைச் செலவிடத் தொடங்கிவிட்டார்கள். இதற்கு முன் அவரவர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு அவசரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். குழந்தைகளும் பள்ளிக்கூடம், டியூஷன், கோச்சிங் வகுப்புகள் என்று பிஸியாக இருந்தார்கள். இப்போது இருவரும் வீட்டினுள்ளேயே இருப்பதால், அவர்களுக்குள் ஒருவித அந்நியோன்னியம் ஏற்படத் தொடங்கி இருக்கிறது.

பெற்றோர்
பெற்றோர்

எல்லோரும் குடும்பத்தின் மீது ஒரு விசேஷ கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா முடிந்தபிறகு நாம் வீட்டைவிட்டு வெளியில் வந்தாலும், பார்க், நூலகம், பீச் என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் காத்திருந்துதான் செல்ல வேண்டி இருக்கும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கும். வாழ்க்கையில் நிறைய விஷயங்களை Taken for Granted என அநேக விஷயங்களை நாம் போகிற போக்கில் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இப்போதுதான் சக மனிதர்களின் மதிப்பீடு நேரத்தின் மதிப்பீடு, நாம் அனுபவித்து வரும் சந்தோஷங்களின் மதிப்பீடு ஆகியவற்றை உணரத் தொடங்கியிருக்கிறோம்.

`என் கணவரின் கடைசி ஆசையையாவது நிறைவேத்துங்க முதல்வரே..' -கொரோனாவால் இறந்த டாக்டரின் மனைவி கண்ணீர்

திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களையும் சிக்கனமான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் நடத்தக்கூடிய மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். லாக் டௌன் பணக்காரர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என அனைத்து தரப்பினரையும் ஒரே நேர்க்கோட்டில் நிற்க வைத்துவிட்டது. 'நாங்கள் எல்லோர் மாதிரியும் கிடையாது கொஞ்சம் வேற லெவல்' என்கிறவர்களின் நினைப்பையெல்லாம் லாக்டௌன் மாற்றிப் போட்டிருக்கிறது. வறட்டு கௌரவம், வீண் பந்தா, வெற்று ஆடம்பரம் ஆகியவற்றையெல்லாம் முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவு ஒழித்திருக்கிறது.

love
love

எல்லாம் முடிந்து நாமெல்லாம் வெளியில் வந்து ஒன்றாகக் கூடும் போது, சக மனிதர்களை வழக்கத்தைவிடக் கூடுதலாக நேசிக்கக் கூடியவர்களாக இருப்போம்''என்கிறார் சுரேந்திரன் ஜெயசேகர்.

அடுத்த கட்டுரைக்கு