Published:Updated:

`அப்பாவை ரொம்ப மிஸ்பண்றோம்...' - தந்தையின் நினைவுகள் பகிரும் பிரபலங்கள் #Father'sDaySpecial

தந்தையர் தினம்- சித்திரிப்பு படம்

``என் பொண்ணு இத்தனை மணிக்கு டிவில வர்றா பாருங்க...”ன்னு பெருமையா சொல்லுவார். செய்தி வாசிக்கிறதுக்கு, அப்ப நான் வாங்கின சம்பளமே 300 ரூபாய்தான். ஆனால், போன் பில் 650 ரூபாய்க்கு மேல வந்தது.

`அப்பாவை ரொம்ப மிஸ்பண்றோம்...' - தந்தையின் நினைவுகள் பகிரும் பிரபலங்கள் #Father'sDaySpecial

``என் பொண்ணு இத்தனை மணிக்கு டிவில வர்றா பாருங்க...”ன்னு பெருமையா சொல்லுவார். செய்தி வாசிக்கிறதுக்கு, அப்ப நான் வாங்கின சம்பளமே 300 ரூபாய்தான். ஆனால், போன் பில் 650 ரூபாய்க்கு மேல வந்தது.

Published:Updated:
தந்தையர் தினம்- சித்திரிப்பு படம்

இன்று தந்தையர் தினம். தங்கள் வாழ்வில் என்றைக்குமான முன்னுதாரணமாக விளங்கும் தங்கள் தந்தையின் நினைவுகளை பிரபலங்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அர்ச்சனா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்:

அப்பாவை பத்தி எப்ப நினைச்சாலும், எமோஷனாகி அழுதிடுவேன். அவர், வங்கியில் வேலை செஞ்சார். அதிக நாள் விடுமுறை கிடைக்காத வேலை அது. அதனால, அவர் எங்களோட செலவழிச்ச நேரம் குறைவு. 2 ஹாலிடேஸ் மட்டும்தான் அப்பா கூட கொண்டாடியிருக்கேன். மாமல்லபுரத்துல இருக்கிற ரிசார்ச்க்குக் கூட்டிட்டுப் போயிருக்கார்.

அந்த நாள்களில் எங்களோட விளையாடி, எங்களுக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கார். என் மகள் ஸாரா, அவளோட அப்பாவை மிஸ் பண்றப்பவெல்லாம் நான் சொல்வேன். அப்பா கூட நிறைய நேரத்தை செலவழிக்கணும். பின்னாடி அதைப் பண்ண முடியாம போச்சேன்னு வருத்தப்படுற மாதிரி ஆகிடக்கூடாதுன்னு சொல்வேன்.

 அர்ச்சனா
அர்ச்சனா

அப்பா, எப்பவுமே ``ராஜா மாதிரி வாழணும்”னு சொல்வார். வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்களைச் சாப்பிட வைக்காம அனுப்பக் கூடாதுன்னு சொல்வார். சாப்பாடு விஷயத்துல அவர் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவார். இன்னைக்கும் நான் அதைப் பண்ணுவேன்.

2000-ம் வருஷம் ஆகஸ்ட் முதல் வாரத்துல, நான் செய்தி வாசிப்பாளரானேன். அதே வருஷம் செப்டம்பர் 21-ம் தேதி அப்பா இறந்துட்டார். இடைப்பட்ட ஒன்றரை மாசத்துல, நான் வாசிச்ச செய்தி ஒளிபரப்பாகுற நேரமெல்லாம் நண்பர்கள், உறவினர்கள்னு எல்லோருக்கும் போன் பண்ணி, ``என் பொண்ணு இத்தனை மணிக்கு டிவில வர்றா… பாருங்க”ன்னு பெருமையா சொல்வார். செய்தி வாசிக்கிறதுக்கு அப்ப நான் வாங்கின சம்பளமே 300 ரூபாய்தான். ஆனால், போன் பில் 650-க்கு ரூபாய்க்கு மேல வந்தது. அவருக்குப் பெருமையைக் கொடுத்திருக்கேன்னு நினைக்குறப்போ மகிழ்ச்சியா இருக்கும். எப்பவும் அவரை மிஸ் பண்ணிட்டுதான் இருக்கேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரதி பாஸ்கர், பேச்சாளர்:

நான் 2-ம் வகுப்புப் படிக்கும்போது, பேச்சுப்போட்டியில எனக்கு மூன்றாம் பரிசு கிடைச்சது. பள்ளி முடிஞ்சதும் அப்பா என்னை சைக்கிள்ல வந்து கூட்டிட்டுப் போனார். என்ன பரிசு வாங்கினேன்னு அவர் எதுவுமே கேட்கலை. என்னாலயே பொறுத்துக்க முடியாம, அப்பா நான் 3-ம் பரிசு வாங்கியிருக்கேன் நீங்க எதுவுமே கேட்கலையேன்னு கேட்டேன். பரிசு முக்கியம் இல்லை, போட்டியில நீ கலந்துக்கிறதுதான் முக்கியம்னு சொன்னார். அவரைப் பொறுத்தவரைக்கும் வெற்றி தோல்வி பத்தின கவலை கிடையாது. ஆனால், போட்டியில் கலந்துக்கணும். சில போட்டிகளில் கலந்துக்க மாட்டேன்னு சொல்வேன். அது அவருக்குப் பிடிக்காது. தோற்றாலும் பரவாயில்லை கலந்துக்கோன்னு சொல்வார்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

அவர் கொடுத்த தைரியத்துல, வெற்றி தோல்வி பத்தின பதற்றம் இல்லாம, நான் பல போட்டிகளில் கலந்துகிட்டு பரிசு வாங்காம கூட வந்திருக்கேன். அப்படி பதற்றம் இல்லாம பேசிப்பேசித்தான் நிறைய கத்துக்கிட்டு பேச்சாளரானேன்.

நான் பேச்சாளரானதுல அவருக்கு அளவில்லாத பெருமை. பட்டிமன்றங்களில் பேசுறது டிவியில ஒளிபரப்பாகுறப்போ, நான் பேசி முடிச்ச அடுத்த விநாடியே எனக்கு போன் பண்ணி நான் எப்படிப் பேசுனேன்னு சொல்வார். எப்பவும் என்னை ஊக்கப்படுத்துவார்.

அவர் இறந்து 8 ஆண்டுகள் ஆகிடுச்சு. இப்ப பட்டிமன்றங்களில் பேசி முடிச்சதும் கூப்பிட அவர் இல்லைங்குறது நிரப்ப முடியாத வருத்தமா இருக்கு. எல்லாக் கட்டங்களிலும் மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்திருக்கார். அவர் பள்ளித் தலைமையாசிரியராக இருந்தவர். இப்பகூட திடீர்னு அவருடைய மாணவர்னு பலர் கால் பண்ணுவாங்க. வசதியில்லாத குடும்பத்தில் இருந்து வந்தேன் அவர்தான் படிக்க ஊக்கப்படுத்தினார்னு சொல்வாங்க. நல்ல தந்தை மட்டுமல்ல நல்ல மனிதராகவும் அவர் இருந்திருக்கார்னு நினைச்சு பெருமைப்பட்டுக்குவேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism