Published:Updated:

அப்பாக்களின் ஆயுளை அதிகரிக்கும் பெண் குழந்தைகள்!

Representational Image
Representational Image

எத்தனை பெண்குழந்தைகள் பிறக்கிறார்களோ அந்தளவுக்கு அப்பாக்களின் வாழ்நாள் அதிகரிக்கிறதாம். அதாவது, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அப்பாவின் ஆயுள்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும் என்கிறது அந்த ஆய்வு.

பெண் குழந்தைகள் என்றாலே தகப்பன்களுக்கு தேவதைகள் பிறந்த சந்தோஷம்தான்! நிஜமாகவே அவர்கள் தேவதைகள்தாம் என்கிறது சமீபத்திய ஆய்வு. தங்கள் அப்பாக்களுடைய வாழ்நாள்களைப் பெண்குழந்தைகள் அதிகரிக்கிறார்கள் என்று இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறது அந்த ஆய்வு!

Representational Image
Representational Image

ஒரு குழந்தைப் பிறந்துவிட்டால், அம்மாக்களின் மனம் மற்றும் உடல்ரீதியான மாற்றங்களைத்தான் சமூகம் இன்றுவரை அதிகமாகப் பேசி வருகிறது. ஆனால், அப்பாக்களிடம் நிகழ்கிற மாற்றங்களை நாம் யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். போலந்தின் ஜாகிலோனியன் (Jagiellonian) பல்கலைக்கழகம் 2,147 அம்மாக்களையும் 2,163 அப்பாக்களையும் வைத்து, குழந்தை பிறந்த பிறகு, அம்மாவைப்போலவே அப்பாவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுமா என்கிற ஆய்வை நடத்தியது. அதன் முடிவில், பெண் குழந்தைகள் பிறந்ததும் அப்பாக்களின் ஆயுள்காலம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். எத்தனை பெண்குழந்தைகள் பிறக்கிறார்களோ அந்தளவுக்கு அப்பாக்களின் வாழ்நாள் அதிகரிக்கிறதாம். அதாவது, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அப்பாவின் ஆயுள்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும் என்கிறது அந்த ஆய்வு.

ஆனால், அம்மாக்களைப் பற்றிச் சொல்கையில், மகன்களாக இருந்தாலும் சரி மகள்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தாயின் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, வாழ்நாளைக் குறைக்கவே செய்கிறார்கள் என்கிறது 'ஹியூமன் பயாலஜி' என்கிற அமெரிக்க அறிவியல் பத்திரிகை நடத்திய ஆய்வொன்று.

இந்த ஆராய்ச்சியில் சிங்கிள் பெண்களுக்கு அருமையான செய்தியொன்று இருக்கிறது. அவர்கள்தான், உலகத்திலேயே ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது.

Representational Image
Representational Image

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பாலினப் பாகுபாடு இல்லாமல் குழந்தைகளின் சந்தோஷத்துக்காக வாழ்கிற பெற்றோர்கள்தாம் உலகின் அதிக சந்தோஷமானவர்கள் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் ஹைலைட்!

பின் செல்ல