Published:Updated:

`வெறும் தொட்டில்தான் இருந்தது... என்ன குழந்தைனுகூட தெரியாது!’ - ஒரு வாடகைத் தாயின் ஏக்கம்

சுமதி

``திரவங்களின் கதகதப்பில்… நடக்கையில் புலப்படும் மெல்லிய அதிர்வுகளில்… உடலை நனைக்கும் சிவப்பு நதியில்… பனிக்குடத் திடலின் பாசப் பிடியில்... உன் முதல் தரிசனம் எனக்கு உள்முகத் தரிசனமாகத்தான் இருந்தது. ஆனால், அம்மா… அப்போது என் பார்வை தொப்புள் கொடியில் இருந்தது” – நா. முத்துகுமார்

`வெறும் தொட்டில்தான் இருந்தது... என்ன குழந்தைனுகூட தெரியாது!’ - ஒரு வாடகைத் தாயின் ஏக்கம்

``திரவங்களின் கதகதப்பில்… நடக்கையில் புலப்படும் மெல்லிய அதிர்வுகளில்… உடலை நனைக்கும் சிவப்பு நதியில்… பனிக்குடத் திடலின் பாசப் பிடியில்... உன் முதல் தரிசனம் எனக்கு உள்முகத் தரிசனமாகத்தான் இருந்தது. ஆனால், அம்மா… அப்போது என் பார்வை தொப்புள் கொடியில் இருந்தது” – நா. முத்துகுமார்

Published:Updated:
சுமதி

அன்பெனும் உலகம் உறவுகளால் நிரம்பியது. வாழ்க்கை குளிரில் உரையும்போதெல்லாம், கதகதப்பு தந்து சீர்நிலைக்குக் கொண்டுவருவது உறவுகள்தான். எல்லா உறவுகளிடமும் சொல்ல முடியாத முரண் ஒன்று சுழன்றுகொண்டே இருக்கும். முரண் துளியும் இன்றி எல்லா தியாகங்களையும் பிள்ளைகளுக்காகச் செய்துவிட்டு தினமும் அன்பை மட்டுமே மீண்டும் மீண்டும் தரும் அன்பின் முழுமை அம்மா. தொப்புள்கொடி பிணைப்பில் தொடங்கி ஆயுள் நிறைய தீராத முத்தங்களும், திகட்டாத தாலாட்டுகளும் நிறைந்த அம்மா-பிள்ளைப் பாசங்களை உலகமே அறியும். தொப்புள்கொடி வெட்டியதோடு முடிந்துபோன பாசக்கதைகளை உலகம் இன்னும் அறியாது. அன்பின் கனத்தை அடியோடு அசைத்துப் பார்க்கும் உலகம் அறிய வேண்டிய கதைதான் இது.

சுமதி
சுமதி

நவீன உலகில் குழந்தையின்மை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதிகளுக்காக, குழந்தை பெற்றெடுக்க தகுதியான வறுமையில் உள்ள பெண்கள் வாடகைத் தாயாக மாறி குழந்தையை சுமக்கிறார்கள். அப்படியொரு வாடகைத் தாய்தான் சுமதி. வயிற்றில் சுமந்த பிள்ளையைப் பார்க்க முடியலயே என்ற வருத்தத்தோடும், ஒரு முறையாவது பார்க்க முடியாதா என்ற ஏக்கத்தோடும் இருக்கும் சுமதியிடம் பேசினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஒரு குடும்பத்துக்கு குழந்தை ரொம்ப முக்கியம். அம்மா அப்பானு கூப்பிட குழந்தை இல்லையேனு வருத்தப்பட்டு தற்கொலை பண்றவங்களை நான் பார்த்திருக்கேன். குழந்தையைக் கொஞ்சணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல. நான், வாடகைத் தாயாக இருக்கச் சம்மதிக்க இதுவும் ஒரு காரணம். பத்து மாதமும் மருத்துவமனையில்தான் இருந்தேன். கருத்தரித்தது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பது வரை நல்லா கவனிச்சாங்க. யாருக்குக் குழந்தையைப் பெற்று கொடுக்கப்போறேன்னு எதுவும் எனக்குத் தெரியாது.

child
child

குழந்தையைப் பெற்றெடுத்த கொஞ்ச நேரம் கழிச்சு முழிச்சுப் பாக்குறேன். வெறும் தொட்டில் மட்டும்தான் இருந்துச்சு. பொண்ணா, பையனானு கூட எனக்குத் தெரியாது. டாக்டர்கிட்ட குழந்தை எங்கனு கேட்டேன். ஒரு தடவ பாக்கணும்னு சொன்னேன். குழந்தையைப் பாத்தா பாசம் வரும். பிரிய மனசு வராது. குழந்தை உன்னோடதும் இல்லனு டாக்டர் சொல்லிட்டாரு. குழந்தை என்னோடது இல்ல. ரத்தமும் என்னோடது இல்ல. ஆனால், குழந்தையாச்சே... அதை ஒருதடவைகூட பார்க்கல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் ஒருமாதிரி இருந்துச்சு. இன்னைக்கு வரைக்கும் என் நாலு பசங்களும் அந்தக் குழந்தைக்குப் பிறந்தநாள் கொண்டாடுவாங்க. என் பசங்களுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கு. பதினோராவது மாசம் வந்ததும் அம்மா இன்னிக்கு குழந்தைக்குப் பிறந்தநாள்னு சொல்லி எல்லாரும் வீட்டுக்கு வந்துருவாங்க. பிரியாணிலாம் சமைச்சு சாப்பிட்டுக் கொண்டாடுவாங்க. அந்தக் குழந்தைக்கு ஆறு வயசு இருக்கும்லம்மா. இப்போ என்ன பண்ணிட்டு இருக்கும். அப்டிலாம் யோசிச்சு பேசிட்டு கிளம்பிப் போவாங்க. என் பேரக்குழந்தைகளைப் பார்க்கும்போது அந்தக் குழந்தை நியாபகம்தான் வரும். என்னதான் இருந்தாலும் என் வயித்துல இருந்து பிறந்த குழந்தை. அம்மான்ற உணர்வு இருக்கதான செய்யும் எனக்கு” என்று மெலிதான புன்னகையுடன் பேசினார்.

சுமதி
சுமதி

அகத்தில் அறிமுகமாகி புறத்தில் அறிமுகமாகாமல் சென்ற அந்தக் குழந்தைக்குக் கொடுக்கப்பட வேண்டிய முத்தம், பாடப்பட வேண்டிய தாலாட்டு, வைக்கப்பட வேண்டிய பெயர் எல்லாமே மனதின் ஆழத்தில் அன்போடு என்றும் புதைந்துதான் கிடக்கும். அன்பின் முன்பு தோற்று நிற்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழும் அந்தக் குழந்தையின் மிச்சம் இன்னும் அவரின் உடலோடு ஒட்டிக்கிடக்கிறது. சுமதியைப்போல ஒவ்வொரு வாடகைத் தாயும் அந்த மிச்சத்தின் சாரலில் நனைந்துகொண்டுதான் வாழ்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism