Published:Updated:

ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் முதல் ஃப்ளிங் வரை... காதலில்லா உறவுகள் என்னென்ன?

`நோ கமிட்மென்ட்; ஒன்லி செக்ஸ்' என்பது 'ஃப்ளிங்' என்கிற ஒரு ரிலேஷன்ஷிப். இதைப் பற்றி டீன் ஏஜ், இருபதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்கள், 30, 40 வயதினர் என அனைத்து வயதினரிடமும் பேசினோம்.

காலத்தைப்போலவே காதலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இரு உயிர்கள் இணைய அன்பு, காதலெல்லாம் தேவையில்லை என்ற ரீதியிலான ரிலேஷன்ஷிப் வகைகள் உருவாகி வருகின்றன. சில நாள்களாக முகநூலில் 'நோ கமிட்மென்ட்; ஒன்லி செக்ஸ்' என்ற நிலையையொட்டிய வாத, பிரதிவாதங்கள் விருப்பக் குறியீடுகள், கருத்துகள், பகிர்தல்கள் என்று டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கின்றன.

'நோ கமிட்மென்ட்; ஒன்லி செக்ஸ்' என்பது 'ஃப்ளிங்' என்ற ஒரு ரிலேஷன்ஷிப். இதைப் பற்றி டீன் ஏஜ், இருபதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்கள், 30, 40 வயதினர் என அனைத்து வயதினரிடமும் பேசினோம். க்ரஷ்ஷில் ஆரம்பித்து ஃப்ளிங், ஃபிரெண்டு வித் பெனிஃபிட், ஒன் நைட் ஸ்டாண்ட், அன்மேரிட் கப்புள் என்று பல உறவு நிலைகளையும் அடுக்கினார்கள். அவை அவர்களின் வார்த்தைகளிலேயே..!

2
Crush

க்ரஷ்

ஒருவரைப் பார்க்குறோம். பிடிச்சிருக்கு. காதல்னு எல்லாம் கமிட் ஆகிற அளவுக்கு அந்த உறவு இல்லை. ஆனாலும், அவரைப் பிடிச்சிருக்கு. அவர்தான் க்ரஷ். காதலர்/காதலிகிட்ட நமக்கு அக்கறை இருக்கும், எதிர்பார்ப்பு இருக்கும், தவறு செஞ்சா சுட்டிக்காட்டுற உரிமை இருக்கும். ஆனா, இவையெல்லாம் இல்லாம, க்ரஷ்ஷை அவரோட ப்ளஸ், மைனஸ்னு எல்லாம் எடைபோடாம 'பிடிச்சிருக்கு'னு மட்டும் மனசு டிக் பண்ணும். 'இவரை மாதிரி ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சா நல்லாயிருக்கும்'னு தோணும். ஒருவேளை அவர் பிரிஞ்சுபோனாலும் மனசு ரொம்ப வலிக்காம 'ஓகே பை'னு சொல்லிடும்.

3
Bestie

பெஸ்ட்டி

பாய் பெஸ்ட்டி, கேர்ள் பெஸ்ட்டினு ரெண்டு வகை இருக்காங்க. இவங்களை குளோஸ் ஃபிரெண்டுக்குக் கொஞ்சம் மேலே, லவ்வருக்குக் கொஞ்சம் கீழேன்னு சொல்லலாம். லவ்வர்கிட்ட சொல்ல முடியாததைக்கூட இவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னா பார்த்துக்கோங்க.

அந்தளவுக்கு ஒரு பையனுக்கோ, பெண்ணுக்கோ நெருக்கமா இருப்பாங்க. காதலிக்கு பொக்கே வாங்கித் தர்றதுல இருந்து காதலனுக்கு ஷர்ட் வாங்கித் தர்றது வரைக்கும் இவங்களுக்குத் தெரியாம, இவங்க பர்மிஷன் இல்லாம எதுவுமே நடக்காது. பெஸ்ட்டீஸால, பிரிஞ்ச காதலர்கள் சேர்ந்ததும் நடந்திருக்கு; சேர்ந்திருந்த காதலர்களுக்கு நடுவே பனிப்போர், பொசஸிவ்னெஸ், வாய்ச்சண்டை, வாட்ஸ்அப் சண்டை எல்லாம் வந்து, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும் நடந்திருக்கு. பை த பை, பெஸ்ட்டி என்பது, காதலனாகவோ, காதலியாகவோ புரொமோஷனாகிற அத்தனை வாய்ப்புகளும் இருக்கிற ஒரு ரிலேஷன்ஷிப்.

4
Relationship

ஃபிரெண்டு வித் பெனிஃபிட்

ஃபிரெண்டு வித் பெனிஃபிட் ரிலேஷன்ஷிப்புல ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நண்பர்களாகத்தான் இருப்பாங்க. வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்துல இவங்களுக்குள்ள உடல் ரீதியான உறவு நிகழலாம். அப்படி நடந்தாகூட பெரும்பாலானோர் நண்பர்களாகத்தான் தங்களோட உறவைத் தொடர்வாங்களே தவிர காதல், கல்யாணம்னு எந்த கமிட்மென்ட்டுக்குள்ளேயும் போகமாட்டாங்க. அதனாலதான், இதுக்குப் பேரு ஃபிரெண்டு வித் பெனிஃபிட். இவங்களோட நெருக்கம் வெறும் உடலளவுல மட்டும்தான் இருக்குமே தவிர, மனசைப்பத்தி டோன்ட் கேர் நிலைதான். எங்கோ ஒரு சிலர் காதல், கல்யாணம்னு இதையொரு லைஃப் லாங் பந்தமாக மாத்திக்கிறாங்க.

5
Fling Relationship

ஃப்ளிங் ரிலேஷன்ஷிப்

பெரும்பாலும் சமூக வலைதளங்கள், டேட்டிங் ஆஃப் வழியா அறிமுகமாகிறவங்கதான் ஃப்ளிங் ரிலேஷன்ஷிப்புல இருக்காங்க. இரண்டு பேரும் ஒரே கருத்தோட இருக்கிறது தெரிஞ்சாலோ, ஒருவர் மேலே ஒருவருக்கு ஈர்ப்பு வந்தாலோ, ஒண்ணா வெளியிடங்களுக்குப் போறது, உடல் இணைவுனு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திடுறாங்க. இரண்டு பேருக்கும் இடையில கருத்து வேறுபாடுகள் வந்துட்டாலோ, உறவுல சலிப்பு வந்துட்டாலோ அவரவர் வழியைப் பார்த்துக்கிட்டுப் போயிடுவாங்க. உடல்ரீதியான தேவைகளுக்காக மட்டுமே இந்த உறவுனு இதைத் தேர்ந்தெடுக்கிறாங்க. நோக்கம் நிறைவேறியதும் அந்த ரிலேஷன்ஷிப்பை அப்படியே கத்தரிச்சுட்டுப் போயிடுறாங்க.

6
One Night Stand

ஒன் நைட் ஸ்டாண்ட்

ஒரு பார்ட்டியில மீட் பண்ணிக்கிற ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் பிடிச்சிருந்தா அன்னிக்கு நைட் சேர்ந்திருப்பாங்க. மறுநாள் காலையில அந்த உறவு மனசுக்குள்ள போய் காதல், கல்யாணம்னு கமிட்டாகிறவங்களும் இருக்காங்க. நீ யாரோ, நான் யாரோன்னு போறவங்களும் இருக்காங்க. சில படங்களில் இந்த மாதிரி காட்சிகளைப் பார்த்திருக்கலாம்.

7
Unmarried Couple

அன்மேரிட் கப்புள்

`என்னால் திருமணம் செய்துகொள்ளமுடியுமா?'- இளைஞரின் மனப்போராட்டத்துக்கு நிபுணர் பதில் #LetsSpeakRelationship

முன்னாடியெல்லாம் கல்யாணமாகாதவங்க ஹோட்டல்ல ரூம் போட கஷ்டப்படுவாங்க. இப்போ குறிப்பிட்ட ஒரு ஹோட்டலோட நிறுவன விளம்பரத்திலேயே, 'வெல்கம் டு அன்மேரிட் கப்புள்'னு வரவேற்கிறாங்க. இங்கே தங்கிறதுக்கு, தங்களோட அடையாள அட்டையைக் காட்டி ரூம் புக் பண்ணிக்கலாம். சம்பந்தப்பட்டவங்களைப்பத்தி எந்தத் தகவலும் வெளியே போகாது. இப்போ, இந்த சர்வீஸ்ல தனி வீடுகள்கூட கிடைக்குது. 'காக்க காக்க' படத்துல வர்ற மாதிரி மர வீடுகள்தான் இதில் இப்போ டிரெண்டு.

காதல்ல, ரிலேஷன்ஷிப்ல, காதலே இல்லாத ரிலேஷன்ஷிப்ல உலகம் இப்போ இப்படித்தான் அப்டேட்டாகிட்டிருக்கு. பீரியட்.''

அடுத்த கட்டுரைக்கு