Published:Updated:

`கிராண்ட்ஃபாதர் எக்ஸ்பிரஸ்' - பேரக்குழந்தைகளுக்குத் தாத்தா தந்த சர்ப்ரைஸ்!

தாத்தா தந்த சர்ப்ரைஸ்!
தாத்தா தந்த சர்ப்ரைஸ்! ( Facebook )

``நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆசை ஏதேனும் இருக்கிறதா?" என்று ஏமி ஹெய்ஸிடம் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியின் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தவருக்கு விடையாய் வந்ததுதான், தினமும் காலையில் பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆசை. அந்த அழகிய ஆசையின் வெளிப்பாடே.

பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது, `முழுசா சாப்பிடலைனா அப்பா அடிச்சிடுவாரு' என்று பொய் சொல்லி அவர்களுக்கு உணவு ஊட்டி விடுவது, கடைகளுக்குக் கூட்டிச் சென்று பெற்றோர்களுக்குத் தெரியாமல் மிட்டாய் வாங்கிக் கொடுப்பது, தங்களின் அனுபவங்களை அழகிய கதையாய்க் கோத்துக் கூறி அவர்களை உறங்கவைப்பது... நமக்குத் தெரிந்த தாத்தா-பாட்டிகள் இப்படித்தான் இருப்பார்கள்.

Doug Hayes and Amy
Doug Hayes and Amy
Facebook

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த டக் ஹெய்ஸ் என்ற முதியவர் ஒருவர் தன் பத்துப் பேரக்குழந்தைகளுக்காக ஒரு பள்ளி வாகனத்தை வாங்கி, தன் குடும்பத்தினர் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதற்கான காரணம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள ஓரிகான் மாகாணத்தில் வசித்து வரும் வயதான தம்பதி டக் ஹெய்ஸ் மற்றும் அவரின் மனைவி ஏமி. இவர்களுக்கு பத்துப் பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஐந்து குழந்தைகள் வீட்டின் அருகே உள்ள சிறிய பள்ளியில் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் வாகன வசதிகள் ஏதும் இல்லாததால், தினமும் அவர்களின் பெற்றோர்களே குழந்தைகளைப் பள்ளியில் விட்டு, திரும்ப அழைத்து வந்துள்ளனர்.

Doug Hayes with his grand daughters
Doug Hayes with his grand daughters
Facebook

இந்நிலையில், குழந்தைகள் எப்போதும் அவர்களின் தாத்தாவிடம், ``எங்களுக்கு இந்தப் பள்ளி மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், பள்ளி வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும்" என்று கூறி வந்துள்ளனர். மற்ற ஐந்து குழந்தைகளுக்குப் பள்ளியில் சேரும் வயது இல்லை. ஆனால், அடுத்த இரண்டு வருடங்களில் அனைவரும் பள்ளிக்குச் சென்றுவிடுவார்களாம்!

இதற்கிடையில், ``நீங்கள் நிறைவேற்ற விரும்பும் ஆசை ஏதேனும் இருக்கிறதா?" என்று ஏமி ஹெய்ஸிடம் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியின் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தவருக்கு விடையாய் வந்ததுதான், தினமும் காலையில் பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆசை. அந்த அழகிய ஆசையின் வெளிப்பாடே குழந்தைகளுக்கான பள்ளி வாகனம்.

Short Bus
Short Bus
Facebook

ஹெய்ஸ்ஸின் ஆசையை நிறைவேற்றும்வரை ஏமிக்குச் சரியான உறக்கம் இல்லை. சிற்றுந்து வாங்க முடிவு செய்தபிறகு, சரியான வாகனத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு ஒரு மாதமானது. இறுதியாக அவர்கள் தேர்வு செய்தது அழகிய மஞ்சள் நிறச் சிற்றுந்து. அதன் மேல்பாகத்தில் `ஷார்ட் பஸ்' என்றும், இடப்பக்கத்தில் 'கிராண்ட்ஃபாதர் எக்ஸ்பிரஸ்' என்றும் எழுதப்பட்டது. மேலும், தன் பேரக்குழந்தைகளுக்காக சீட் பெல்ட்டுகளை இணைத்தார் ஹெய்ஸ்.

``20 நிமிடப் பயணத் தொலைவில் இருக்கிறது என் பேரக்குழந்தைகளின் இருப்பிடம். அவர்களின் பள்ளியோ வீட்டிலிருந்து 3 மைல் தூரம். ஒவ்வொரு நாளும் காலை என் பேரக்குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பியதும் கிளம்பி என்னுடைய காரில் நான் வேலைக்குச் செல்வேன்" என்று அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் கூறி சிறு குழந்தைபோல் பூரித்திருக்கிறார் ஹெய்ஸ்.

Doug Hayes with his grand children
Doug Hayes with his grand children
Facebook
Vikatan

மேலும், முழுமையாகத் தயார் செய்யப்பட்ட இந்தச் சிற்றுந்தை தன் பேரக்குழந்தைகளிடம் காட்டியபோது அவர்கள் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கியதும் அவர்களை இந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்போவதாகவும் கூறினார். இதற்கான முதன்மைக் காரணம், தன்னுடைய பேரக்குழந்தைகளோடு சிறிது நேரம் காலையில் நேரம் செலவழிக்க முடியும் என்பது மட்டுமே!

அடுத்த கட்டுரைக்கு