Published:Updated:

WFH: குடும்பத்தலைவியின் பறிபோன மீ டைம்... நிபுணரின் தீர்வுகள்! #LetsSpeakRelationship

Let'sSpeakRelationship
Let'sSpeakRelationship

WFH: ''மூன்று பேரும் அலுவலகம் சென்றதும், டி.வி.யில் எனக்குப் பிடித்த சேனலில் ரிலாக்ஸாகப் பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே சோபாவில் படுத்திருப்பேன். ஆனால், இப்போது...''

விகடன் வாசகர்கள் தங்கள் குடும்பங்களில், தங்கள் உறவுகளுக்கிடையே வருகிற பிரச்னைகளை நம்மிடம் பகிர்வதற்கும், நாம் அவர்களுக்கு நிபுணர்களிடமிருந்து தீர்வு பெற்றுத் தருவதற்கும் உருவாக்கப்பட்டதுதான் uravugal@vikatan.com என்ற மெயில் ஐ.டி. இதன் மூலம் ஆண், பெண் பலரும் வயது வித்தியாசமில்லாமல் தங்கள் பிரச்னைகளை விகடனுக்குத் தனிப்பட்ட முறையில் மெயில் செய்கிறார்கள்.

விகடனும் அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அவர்களுடைய பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளைப் பெற்றுத் தந்து வருகிறது. இப்போது வழக்கமான உறவுச் சிக்கல்களுடன் கொரோனாவையொட்டி நிகழ்ந்திருக்கிற நம் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகவும் வீடுகளுக்குள் பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. அப்படியொரு பிரச்னையைதான் இப்போது நீங்கள் படிக்கப் போகிறீர்கள். தீர்வையும் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.

Let'sSpeakRelationship
Let'sSpeakRelationship

என் வயது 54. குடும்பத்தலைவி. கொரோனா, ஊரடங்கு, என் கணவருக்கும் இரண்டு மகன்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் ஆகிய பிரச்னைகள் வரும் வரை நான் சந்தோஷமான பெண்மணியாக வாழ்ந்துகொண்டிருந்தேன். பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்கிற கடமைகள் ஏதும் இல்லை. ரெகுலரான வீட்டு வேலைகள் மட்டும்தான். மூன்று பேரும் அலுவலகம் சென்றதும், டி.வி.யில் எனக்குப் பிடித்த சேனலில் பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே சோபாவில் படுத்திருப்பேன். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அடுத்த வேலை செய்ய எழுந்திருப்பேன். ஆனால், இப்போது நிலைமையே வேறு. வேலைகளை முடித்துவிட்டு நான் ரிமோட்டைக் கையில் எடுக்கும்போதுதான், மூன்று பேரில் யாராவது ஒருவர் 'டீ போட்டுக் கொடும்மா' என்கிறார்கள்.

நான் பழைய பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் 'ஐ நீட் எ பிரேக்' என்று சொல்லியபடி ரிமோட்டை வாங்கிக்கொள்கிறார்கள். அந்த மாதிரி நேரத்தில் எனக்கு பயங்கர கோபம் வருகிறது. அதை வெளிக்காட்டினால் 'வீட்ல சும்மாதானே இருக்கே. பல வருஷமா இப்படித்தானே என்ஜாய் பண்ணிக்கிட்டிருந்தே' என்று கேலி செய்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனக்கென்று இருந்த ஒரே ஸ்ட்ரெஸ் பஸ்ட்டரும் இல்லாமல், இவர்கள் மூவரும் வீட்டிலிருப்பதால் உண்டான அதிகப்படியான உடலுழைப்பும் சேர்ந்துகொண்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மனநிலையை என் குடும்பத்துக்கு எப்படிப் புரிய வைப்பது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்...

- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி

இசை
இசை

தீர்வு வழங்குபவர் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

''வழக்கமாக இளம் தலைமுறையினர்தான் 'டாக்டர் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு' என்று கவுன்சலிங்க்காக வந்துகொண்டிருந்தார்கள். தற்போது வயதானவர்களும் 'மனசெல்லாம் சோர்வா இருக்கு' என்று என்னிடம் பேசுகிறார்கள். இந்த வாசகியின் பிரச்னையைப் படித்தபோது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. வருத்தப்படாதீர்கள் மேடம். கிட்டத்தட்ட இதே பிரச்னையைத்தான் உங்கள் வயதினர் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக குடும்பத்தலைவிகள். உங்கள் வயதிலிருக்கிற வேலைபார்க்கும் பெண்களிடம் தனியாக செல்போன் இருக்கும். அதன் மூலம் அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை, கிடைக்கிற ஓய்வு நேரத்தில் பார்த்துக்கொள்வார்கள்.

`என்னால் ஒரு குடும்பம் சிதைந்துவிடுமோ'- வாசகி பிரச்னை, உளவியல் நிபுணர் தீர்வு!#LetsSpeakRelationship

ஆனால், நம் ஊரில் குடும்பத்தலைவிகளிடம் பெரும்பாலும் செல்போன் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது பிள்ளைகள் பயன்படுத்திய பழைய மாடலாகத்தான் இருக்கும். இதில் போன்கால் மட்டும்தான் செய்ய முடியும். இதோடு, வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் குடும்பத்தினர், அவர்கள் கேட்ட தின்பண்டங்களைச் செய்துகொடுக்க வேண்டிய நிலைமை, தொலைக்காட்சியில் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியாத சூழல், டி.வி.ரிமோட் உங்கள் கையைவிட்டுப் போனது என்று 'ஓய்வு'ம் உங்கள் 'மீ டைமு'ம் மறுக்கப்பட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் மீது கோபம் வருகிறது.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

உங்கள் விருப்பங்களைத் தொடர்ந்து கன்ட்ரோல் செய்துகொண்டே வந்தால், அது பதற்றமாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அது உங்கள் அன்பான குடும்பத்துக்காகவே என்றாலும்கூட... அதனால், 'நான் இத்தனை வருடங்களாக வழக்கமாகச் செய்துகொண்டிருந்த ஒரு விஷயத்தை நீங்கள் மூன்று பேரும் மாற்றுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது' என்று எடுத்துச்சொல்லுங்கள். கேலி செய்வார்கள் என்று தயங்க வேண்டியதில்லை. 'ஐ நீட் எ பிரேக்' என்பது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் மட்டுமே உரியது கிடையாது அல்லவா..? அதனால், அவர்கள் புரிந்துகொள்ளலாம்.

அல்லது சின்னதாக ரேடியோ ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு எஃப்.எம்.மில் பழைய பாடல்கள் கேட்கலாம். குடும்பத்தினர் அடிக்கடி டீ, காபி கேட்கிறார்கள் என்றால், காலையிலேயே ஃபிளாஸ்க் நிறைய போட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாற்றத்துக்காக குடும்பத்தினரை மாலை வேளைகளில் டீ போடச் சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தினர் அலுவலக வேலைக்கு நடுவே கொஞ்ச நேரம் பிரேக் எடுத்துக்கொள்வதைப் போல, நீங்களும் வீட்டு வேலைகளுக்கு நடுவே பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்தான். உங்கள் மீ டைமை நீங்கள்தான் மீட்டெடுக்க வேண்டும்.''

``கணவரைவிட நான் மூத்தவள்; இதனால் பிரச்னை வருமா?'' இளம்பெண்ணுக்கு நிபுணரின் பதில் #LetsSpeakRelationship
Woman
Woman
#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship
அடுத்த கட்டுரைக்கு