Published:Updated:

`அன்பான கணவர் மாறிவிட்டார்!' -வாசகியின் பிரச்னைக்கு உளவியல் நிபுணர் தீர்வு #LetsSpeakRelationship

மனித இயல்பின்படி, நம்மை வருத்தப்பட வைக்கிறவர்களுக்கான வேலைகளைச் செய்யும்போது, கொஞ்சம் எரிச்சல் உடல்மொழியுடன்தான் அவற்றைச் செய்வோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எனக்குத் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. முதல் மூன்று வருடங்கள் நான், என் கணவர், எங்கள் மகன் என வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து ரசித்து வாழ்ந்தோம். யார் கண்பட்டதோ, கடந்த மூன்று வருடங்களாக என் கணவர் தன் அம்மா மற்றும் சகோதரியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என் மீது வெறுப்பைக் காட்டுகிறார். நான் ஏதாவது நல்லவிதமாகச் சொன்னால்கூட அதைத் தவறாகப் புரிந்துகொள்கிறார். ஒருகட்டத்தில் என் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விஷயங்களிலிருந்து நான் தள்ளி நிற்க ஆரம்பித்துவிட்டேன். என்றாலும், என் கணவர் மீதான அன்பிலும் அவரை கவனித்துக்கொள்வதிலும் எந்தக் குறையையும் நான் வைப்பதில்லை. மற்றபடி, நானுண்டு என் மகனுண்டு என்று இருந்துவருகிறேன். இருந்தாலும் மனதுக்குள் தனிமையாக உணர்கிறேன். நிம்மதியாக என் குடும்பத்தை நடத்த நான் என்ன செய்ய வேண்டும்?

- பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி

கணவன், மனைவி
கணவன், மனைவி

உளவியல் நிபுணர் வசந்தி பாபு பதில் சொல்கிறார்...

``உங்கள் மெயிலைப் படித்ததும் ஒன்று தெளிவாகப் புரிந்தது. அதாவது, உங்கள் மேல் உங்கள் கணவர் மிகுந்த அன்புடன் இருந்திருக்கிறார். அவர் இடையில்தான் மாறிப்போயிருக்கிறார் என்றாலும் நீங்கள் தொடர்ந்து அவர் மேல் பிரியமாகவே இருக்கிறீர்கள் என்பதால், அவர் பழையபடி அன்பான கணவராக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் பதற்றம் வேண்டாம்.

உங்கள் கணவரின் அம்மாவும் சகோதரியும் வந்த பிறகுதான், அவரின் பாசம் பகிரப்பட்டிருக்கிறது அல்லது பகிரப்பட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஒன்றை யோசித்துப் பாருங்கள்... உங்கள் கணவர், தன் அம்மா மீதும் சகோதரி மீதும்தானே பாசமாக இருக்கிறார்... வேறெந்தப் பெண்கள் மீதும் இல்லையே! உங்கள் பிரச்னையை நீங்கள் இப்படி பாசிட்டிவாக யோசித்தால் மட்டுமே இந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கான வழிகளைத் தேட முடியும்.

உளவியல் நிபுணர் வசந்தி பாபு
உளவியல் நிபுணர் வசந்தி பாபு

`கணவர் என் மீது வெறுப்பைக் காட்டினாலும் அவரை நான் நன்றாகக் கவனித்துக்கொள்கிறேன்' என்று எழுதியிருக்கிறீர்கள். அந்த கவனிப்பை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்துபாருங்களேன். மனித இயல்புபடி, நம்மை வருத்தப்படவைக்கிறவர்களுக்கான வேலைகளைச் செய்யும்போது, கொஞ்சம் எரிச்சல் உடல்மொழியுடன்தான் அவற்றைச் செய்வோம். உதாரணத்துக்கு, காபி டம்ளரை சத்தம் எழும்பும்படி டேபிளில் `டொக்'கென்று வைப்பது. நீங்களும் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்றால், அதை மாற்றிக்கொள்வது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாமியார், நாத்தனார் விஷயத்தைச் சமாளிக்க ஒரு ட்ரிக் சொல்லித்தருகிறேன். குறைந்தபட்சம் அவர்கள் மேல் பிரியமாக இருக்க முயலுங்கள். அதிகபட்சமாக, அவர்களுக்குத் தேவையானதை, உங்கள் கணவரை முந்திக்கொண்டு நீங்கள் செய்து தரப் பாருங்கள்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி
`பள்ளித் தோழியைச் சந்தித்தால் தற்போதைய காதல் என்னவாகும்?'  -இளைஞரின் குழப்பம் #LetsSpeakRelationship

தனிமையைப் போக்குவதற்கு மகன் இருக்கிறான். அவன் பள்ளிக்கூடம் செல்கிற நேரங்களில் தனிமையை உணர்ந்தீர்கள் என்றால், யோகா, கிராஃப்ட் என உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பயிற்சி வகுப்புக்குச் செல்வது நல்ல தீர்வாக அமையும்.

என்னைப் பொறுத்தவரை, உங்கள் குடும்பத்தில் இருக்கிற சிக்கலை இன்னும் அதிகப்படுத்திக்கொள்ளாமல், 'என் கணவர் என்னிடம் பாசமாக இருந்தவர்தான். அதனால் அவர் மறுபடியும் மனம் மாறுவார். என் தனிமைக்குத் துணையாக மகன் இருக்கிறான்' என்று பாசிட்டிவ்வாக நினைப்பது மட்டுமே இப்போதைக்கான தீர்வு.

uravugal@vikatan.com
uravugal@vikatan.com
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு