Published:Updated:

சாக்லேட் பரிசளித்தால் காதலிக்கு மிகவும் பிடிக்கும்... ஏன் தெரியுமா? #ChocolateDay

சாக்லேட் டே
News
சாக்லேட் டே ( FnP )

பாசிட்டிவ் உணர்வு கொடுக்கக்கூடிய செரோடினின் ரசாயன சுரப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை சாக்லேட்டுக்கு உள்ளது.

`எந்த ஒரு நல்ல விஷயம் செய்றதுக்கு முன்னாடியும் `ஸ்வீட்' சாப்பிடணும்னு அம்மா சொல்லிருக்காங்க' என்ற விளம்பரம் வந்ததும் போதும்... காதலை வெளிப்படுத்துவதற்கு ரோஜா பூவோடு சாக்லேட்டும் இணைந்துவிட்டது.

சாக்லேட்
சாக்லேட்
Pixabay

டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், ஹோம் மேட் சாக்லேட், ஃபேமிலி பேக் சாக்லேட் எனத் தன் காதலன்/காதலிக்கு என்ன வகை சாக்லேட் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில் தொடங்குகிறது பிப்ரவரி மாத `சாக்லேட் டே' கொண்டாட்டம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முன்பெல்லாம் காதலர் தினம் என்பது ஒரேயொரு நாள் கொண்டாட்டம்தான். ஆனால், இப்போதோ ஏழு நாள் திருவிழாவாகிவிட்டது. அவற்றில் தித்திப்பான சாக்லேட் தினம், பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் எனலாம். `என்ன சாக்லேட் கொடுப்பாங்க?' என்ற சர்ப்ரைஸை உடைப்பதிலிருக்கும் த்ரில் வேற லெவல் அனுபவம். இதய வடிவ பாக்ஸில் விதவிதமான சாக்லேட்டுகளை நிரப்பி, சர்ப்ரைஸ் செய்யும் பழக்கம் தற்போது வந்ததல்ல. காதலுக்கும் சாக்லேட்டுக்குமான பந்தம் சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் முன்பே இருந்திருக்கிறது என்றால் நம்பமுடிறதா?

Valentines Day Chocolates
Valentines Day Chocolates
Pixabay

1,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் நாகரிகத்தில்தான் சாக்லேட்டுகளின் மேஜிக் முதன்முறையாகத் தொடங்கியது. கக்கவு (Cacao) கொட்டைகளை வறுத்து, நன்கு அரைத்து, கார்ன்மீல் (Cornmeal) மற்றும் தண்ணீரோடு கலக்கும்போது உருவாகும் சாக்லேட் பேஸ்ட்டை ஒவ்வொரு விருந்தின் இறுதியிலும் பரிமாறும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர் மாயன் வாசிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில மாயர்களின் திருமண நிகழ்வில் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் சாக்லேட் சாப்பிடுவதைச் சடங்கு போன்று பின்பற்றி வந்தனர். அன்பும் சாக்லேட்டும் இப்படித்தான் முதன்முதலில் இணைந்தது.

Cacao
Cacao
Pixabay

மாயர்களிடம் தொடங்கிய இந்த பந்தம், இன்று காதலர்களின் `ரூல் புக்கில்' முக்கியக் குறிப்பாக இருக்கிறது. நாளடைவில் சாக்லேட் நிறுவனங்களின் தந்திரத்தால் உலகம் முழுவதிலிருக்கும் காதலர்களின் கைகளில் தவறாமல் தவழும் குழந்தையாகிவிட்டது சாக்லேட். சாக்லேட் சாப்பிட்டால் `காதல் ஹார்மோன்' ஆக்டிவேட் மோடுக்கு சென்று உடனே உங்களின் காதல் `சக்சஸ்' ஆகிவிடும் என்கிற நம்பிக்கையையும் காதலர்கள் மத்தியில் விதைக்கத் தவறவில்லை இவர்கள்.

`ஆனால், அது உண்மைதானே!' என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. உண்மையில் சாக்லேட்டுக்கு அந்த சூப்பர் பவர் இருக்கிறதா என்பதைப் பற்றி பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று வெளியிட்ட ஆய்வு முடிவுகளைப் பார்ப்போம்.

Representational Image
Representational Image
Pixabay

`சாக்லேட்' - வேறு எந்தப் பொருளும் பிரதிபலிக்க முடியாத மகிழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான சேர்மங்களைக் கொண்ட பொருள். அளவாகச் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக இதயத்துக்கு. சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் `கோக்கோ' பொருளில், இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஆன்ட்டி-ஆக்சிடன்ட் பாலிஃபீனால்ஸ் (antioxidant polyphenols) இருக்கிறது.

சாக்லேட்டில் இருக்கும் கஃபைன் (Caffeine) மற்றும் தியோபுரோமைன் (Theobromine) ரசாயனங்கள், மத்திய நரம்பு மண்டலத்தையும் மூளையில் ரத்த ஓட்டத்தையும் தூண்டுகின்றன. மேலும், உடல் சோர்வைக் குறைத்து, புதிய சிந்தனை பிறப்பதற்கும் அடித்தளமாக அமைகின்றன. மொத்தத்தில் இவ்விரண்டும், ஒட்டுமொத்த மனநிலையையும் மேம்படுத்தி, சுவாசம் மற்றும் இருதய செயல்பாடுகளை சீராக்குகின்றன.

Yummy Chocolates
Yummy Chocolates
Pixabay

பாசிட்டிவ் உணர்வு கொடுக்கக்கூடிய செரோடினின் ரசாயன சுரப்பை அதிகரிக்கச் செய்யும் தன்மை சாக்லேட்டிற்கு உள்ளது. இது பாலியல் இன்பத்தைத் தூண்டும் ரசாயனமும்கூட. சரியான தூக்கம், சீரான பசி போன்றவற்றிற்கும் இந்த செரோட்டனின்தான் காரணம். இவற்றின் சுரப்புக் குறைவதால்தான், மன அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு தற்கொலை எண்ணமும் தோன்றும். இயற்கையிலேயே ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிக செரோட்டனின் சுரக்கும் அமைப்பு இருக்கிறது. மாதவிடாய் காலத்தில், இந்த செரோட்டனின் சுரப்பு குறையும் வேளைகளில், சாக்லேட் சிறந்த மருந்தாகவே செயல்படுகிறது.

Chocolates
Chocolates
Pixabay

இப்படி ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது சாக்லேட். இதனால்தான் காதலோடு சாக்லேட்டையும் அந்தக் காலத்திலே இணைத்திருக்கிறார்கள். அளவோடு சாப்பிட்டால் எல்லா உணவுப் பொருள்களும் மருந்தே. அதில் சாக்லேட்டின் பங்கும் இருக்கிறது.

இந்த 'சாக்லேட் டே'க்கு என்ன சாக்லேட் வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிடீர்களா! ஹ்ம்ம்... ஹேப்பி சாக்லேட் டே நண்பர்களே!