Published:Updated:

40 வயதுக்குப் பிறகான செக்ஸ்; யெஸ், வித்யா பாலன் சொன்ன அந்த விஷயம் உண்மைதான்! - 9

Couple (Representational Image) ( Photo by Thomas AE on Unsplash )

80 வயதுக்குப் பிறகும்கூட உடலுறவில் உச்சம் தொடும் பெண்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள். இது கிண்டலுக்கான விஷயம் அல்ல!

40 வயதுக்குப் பிறகான செக்ஸ்; யெஸ், வித்யா பாலன் சொன்ன அந்த விஷயம் உண்மைதான்! - 9

80 வயதுக்குப் பிறகும்கூட உடலுறவில் உச்சம் தொடும் பெண்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள். இது கிண்டலுக்கான விஷயம் அல்ல!

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Thomas AE on Unsplash )

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப் படுவார்.

- குறள்

(காமம் மலரைவிட மென்மை உடையது. அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே)

``பொதுவாகவே, பெண்கள் கூச்ச சுபாவத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கப்படுகிறார்கள். இதனால், அவர்களால் செக்ஸை என்ஜாய் செய்ய முடிவதில்லை. ஆனால், 40 வயது நெருங்கும் பெண்களுக்கும், 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கும் அவர்களுடைய வெட்கம், கூச்சம் எல்லாம் குறைந்துவிடும். அதனால்தான் பெண்கள் வயதுகூட கூட அந்த விஷயத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். உண்மையில் ஒரு பெண் தன்னுடைய 40 வயதுக்குப் பிறகுதான் செக்ஸை முழுமையாக என்ஜாய் செய்கிறாள்'' என்று ஒரு பேட்டியின்போது குறிப்பிடுள்ளார் நடிகை வித்யா பாலன்.

இந்தச் செய்தியை பரபரப்புக்காகப் பல செய்தித்தளங்கள் வெளியிட்டன. அவர்கள் இந்தச் செய்தியை வெளியிட்ட பாணியில் இதிலுள்ள முக்கியமான விஷயம் மறைந்து, சிருங்கார ரசம் மட்டுமே வெளிப்பட்டது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Rodrigo Souza from Pexels

இந்தச் செய்தி எப்படி வேண்டுமானாலும் வெளியிடப்பட்டிருக்கலாம். ஆனால், வித்யா பாலன் பகிர்ந்துகொண்ட விஷயம் முழுக்க முழுக்க உண்மை. இதையே மருத்துவர்களும் உளவியலாளர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் 40 வயது என்பது பெண்களின் பாலியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் பருவமாகவே இருந்தது. அறியாமை, கூட்டுக் குடித்தனம், குழந்தை வளர்ப்பு, குடும்ப நிர்வாகம், ஆணாதிக்கம், குடும்ப பிரச்னைகள் என அதன் பின்னணியில் எண்ணற்ற காரணங்கள் இருந்தன. நல்லவேளையாக இப்போது இவற்றில் பலவும் பலருக்குச் சிக்கலாக இல்லை.

இருப்பினும், இன்னமும்கூட நம் சமூகத்தில் 40 வயதைத் தாண்டிய பிறகு, வெறுமனே கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற இயல்பான ஸ்பரிசங்களைக்கூட இழந்துவிட்ட மனைவிகள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு ஒருவேளை அவர்களே காரணமாக இருப்பின், உடனடியாக அந்த எண்ணத்தை அகற்றிவிட்டு இல்வாழ்க்கை இன்பத்தைத் தொடர வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண்களை எடுத்துக் கொள்ளுங்கள்... அவர்களால் ஒரு கைப்பிடி மண்ணை - வேண்டாம் வேண்டாம் - ஒரு கைப்பிடி உமியை அள்ளும் அளவுக்கு சக்தி இருந்தால் போதுமாம்... அவர்களுக்குப் பாலியல் ஆசை பொங்குமாம்... இயங்கவும் முடியுமாம். இதைப் பெருமையாகவே சொல்லும் ஆண்கள் பலர் உண்டு. அப்படியானால், பெண்கள் மட்டும் ஏன் நாற்பதுகளிலேயே பாலியலைப் பறிகொடுக்க வேண்டும்?

அறிவியல் அணைக்கவே சொல்கிறது!

பெண்கள் வயதாகும்போது பாலியல் வாழ்க்கையில் அதிக திருப்தி அடைகிறார்கள் என்கிற புதிய கண்டுபிடிப்புக்கு சாத்தியமான விளக்கம் என்ன? உறவின்போது தொடுதல் மற்றும் பிற நெருக்கங்கள் மூலமும் அவர்கள் அதிக அளவு பாலியல் திருப்தியை உணர்ந்திருக்கலாம். செயல்பாடு நீளும்போது, நடுத்தர வயதுப் பெண்கள் அடுக்குப் பரவசங்களை (மல்ட்டிபிள் ஆர்கஸம்) அடைவதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels

ஆம்... பெண்கள் 40 வயதை அடைந்த பிறகு, தங்கள் பாலியல் வாழ்க்கையில் திருப்தி அடைகிறார்கள். நடுத்தர வயதில் செக்ஸ், வயதான தம்பதிகளில் காதல், பாலியல் வாழ்க்கை ஆகிய அம்சங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வெளியான உண்மை இதுதான்!

சிலருக்கு, சிறப்பான செக்ஸ் செயல்பாடு மூலம் இந்த உயர்ந்த திருப்தி வருகிறது. மற்றவர்களுக்கு, அவர்களின் பாலியல் செயல்பாடு குறைந்துவிட்டாலும்கூட, எப்போதாவது அது அமையும்போது இன்பம் பொங்குகிறது என்று ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது. பெரும்பாலான பெண்கள் நல்ல தூண்டுதல், அதைத் தொடர்ந்து இணையின் விறைப்புத்தன்மை காரணமாக உடலுறவு நன்றாக அமையும்போது பரவசத்தை அடைவது அருமையாக இருந்தது என்கின்றனர்.

67 வயதானாலும்கூட பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதற்கான உடல் அம்சங்கள் பெண்ணின் உடலில் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்கிறது உடற்கூறியல். 80 வயதுக்குப் பிறகும்கூட உடலுறவில் உச்சம் தொடும் பெண்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள். இது கிண்டலுக்கான விஷயம் அல்ல!

நம்பிக்கையின் நன்மை இது!

உலக அளவில் நடத்தப்பட்ட பாலியல் கணக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் மிகவும் அல்லது மிதமாக திருப்தி அடைவதாகக் கூறினர். பாலியல் திருப்தியில் தங்களை இணைக்கும் பெண்களின் சதவிகிதம் வயதுக்கு ஏற்ப அதிகரித்தது. 80 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பாதி பேர் தாங்கள் எப்போதுமே பாலியல் திருப்தியடைவதாகக் கூறினர். காரணம் அவர்களால் செக்ஸில் தயக்கங்களைக் களைந்து மகிழ்ச்சியோடு ஈடுபட்டு பரவசத்தை அடைய முடியும் என்று முழுக்க முழுக்க நம்பியதுதான்!

மிகவும் நெருக்கமான புரிந்துணர்வை நோக்கி!

இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, பெண்கள் உடலுறவைக் குறைவாக விரும்புவதாகவும், அவர்களின் பாலியல் செயல்பாடுகளைக் குறைப்பதாகவும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. வயதான பெண்களில் பாலியல் செயல்பாடு குறைகிறது என்ற போதிலும், இது பலரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. நம் சமூகம் செக்ஸ் விஷயத்தில் மிகவும் நெருக்கமான புரிந்துணர்வை நோக்கி நகர வேண்டிய காலகட்டம் இது. அதற்கான சூழல் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

உறவில் கவனம் செலுத்த நல்ல பருவம் இது!

40 வயது என்பது குழந்தைகளை வளர்க்கும் கட்டத்தை கடந்துவிட்ட பருவம். அதனால் குழந்தைகளிடமிருந்து சற்றே விடுபட்டு, இணையுடன் செலவிட அதிக நேரம் கிடைக்கும். பாலியல் உறவின் பக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த சில நேரங்களில் உங்களுக்கு ஒரு சிறிய உந்துதல்தான் தேவை, அதை இணையோ, நீங்களோ யார் வேண்டுமானாலும் ஏற்படுத்தலாம். வழக்கம்போலவே தயக்கம் வேண்டாம்!

பெண்களுக்கு உச்சக்கட்டம் அதிகமாகும்!

வயதான பெண்கள் புணர்ச்சியின் திறனை இழக்கிறார்கள் என்று கூறும் கட்டுக்கதைகளை நீங்கள் காலங்காலமாகக் கேட்டு வந்திருக்கலாம். ஆனால், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அவர்கள் முன்பு இருந்ததைவிட உடலுறவில் அதிக மகிழ்ச்சியைக் காணலாம். உண்மையில், பல பெண்கள் தங்கள் பாலியல் அனுபவத்தின் இரண்டாம் கட்டத்தை இந்த வயதில்தான் கண்டுபிடிப்பார்கள்: அங்கு செல்வதற்கு என்ன தேவை என்று அவர்களுக்குத் தெரியும், அதைச் செய்வதில் வெட்கப்பட வேண்டியதில்லை!

ஆண்களாலும் அதிக நேரம் இயங்க முடியும்!

40 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான ஆண்களால் தங்கள் விறைப்புத் தன்மையையும், இயங்கும் கால அளவையும் கடந்த காலத்தைவிட நீடிக்க முடியும். தங்களால் முடியும் என்கிற நம்பிக்கை இருந்தாலே போதும். இதுவரை பெற்ற அனுபவத்தை உரிய வழியில் பயன்படுத்தி, பதற்றமின்றி மெதுவாகச் செய்யும் போது அவர்களாலும் இந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். என்ன செய்கிறோம் என்று தெரியாத 25 வயதில் செய்த சிறிய பாலியல் தவறுகளை 40+ வயதில் செய்வதில்லை. அனுபவமே சிறந்த ஆசான்!

மற்ற வகையான நெருக்கங்களிலும் கவனம் செலுத்துங்கள்!

உடலுறவு சிறந்தது... மிகச் சிறந்தது. அதோடு, மகிழ்ச்சிக்கான மற்ற வழிகளையும் ஆராயலாம். நீங்கள் விரும்புவதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள். இணைக்கு என்ன தேவை என்பதையும் அறிந்து நடந்து கொள்ளுங்கள்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Image by StockSnap from Pixabay

இப்போது உங்களுக்கு அவசர உணர்வு குறைவாகவே இருக்கும். இளமையாக இருக்கும்போது செய்த அவசரகதி செக்ஸோடு ஒப்பிடுகையில், மிட்லைஃப் செக்ஸ் என்பது ஒரு சுவையான உணவை ரசித்து ருசித்து அனுபவிப்பது போல இருக்கும். எது வேண்டும் உங்களுக்கு?

செக்ஸ் இப்போதும் உங்களுக்கு அவசியம்!

உலக அளவில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 85 சதவிகிதத்தினர் இன்னும் அந்தப் பரவசத்தைப் பெறுகிறார்கள். மேலும் அந்தப் பெண்களில் பெரும்பான்மையானவர்கள் இன்னமும் செக்ஸ் என்பதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். சிறந்த உடலுறவு என்பது வாஷிங் மெஷினில் துணி போடுவது போன்ற ஒரு வேலை அல்ல. அது ஓர் இன்பச் சுற்றுலா. அன்பான, அர்ப்பணிப்புள்ள தம்பதியினர் தங்கள் உறவுக்கு முனைப்பு காட்டும்போது, அதன் விளைவு நல்ல பரவசத்தை அளிக்கும். அதாவது காதல் உறவுகள் முதல் இன்றைய இரவுகள் வரை தினசரி முத்தங்கள் அவசியம். ஆகவே, முத்தத்தில் தொடங்கி மொத்தத்தில் முடிக்கவும்!

- சஹானா