Published:Updated:

பணியில் ஈடுபாடு... ரொமான்ஸ் தட்டுப்பாடு... பேலன்ஸ் செய்வது எப்படி? - `டேட்டிங் குரு' வருண்

Office work Vs Romance
Office work Vs Romance

ரொமான்ஸ் லைஃப் தொய்வடையாம இருக்கிறதுக்கு ஆண், பெண் அடிப்படை இயல்புகளைத் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

இன்றைக்குப் பலரிடமும், தாங்கள் பார்க்கும் வேலையின் மீது அதீத ஈடுபாடு இருக்கிறது. இதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று டார்கெட்களின் விரட்டல். இவற்றைப் பூர்த்தி செய்வதில்தான் தன்னுடைய மற்றும் தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் இருக்கிறது என்கிற பதற்றத்தால் வருகிற ஈடுபாடு. இன்னொன்று வேலைகாரணமாகக் கிடைக்கிற வெற்றிகள் தருகிற போதை... விளைவு, ஆபீஸில் டெஸ்க் டாப்பில் ஆரம்பமாகிற வேலை, வீட்டில் லேட் டாப்பில் தொடரும்.

Office work Vs Romance
Office work Vs Romance

மேலே சொன்ன விஷயங்களெல்லாம் கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் பொருந்தும். இதனால், அடிபட்டுப் போவது கணவன் - மனைவிக்குள் இருக்கிற, இருக்க வேண்டிய ரொமான்ஸ் வாழ்க்கைதான். இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்வது? வழிகாட்டுகிறார் டேட்டிங் குரு வருண் மன்னவா.

உங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா லைஃப் பார்ட்னர்கிட்ட உடனே சொல்லிடுங்க. அப்போதான், சிகிச்சை, தெரபின்னு அடுத்தகட்ட தீர்வுகளை நோக்கி நகர முடியும்.
Office work Vs Romance
Office work Vs Romance

நாம வேலைக்குக் கிளம்பற நேரமும் திரும்பவும் வீட்டுக்கு வர நேரமும் நம்ம இணையருக்கும் தெரியும். அதுல அரைமணி நேரம், ஒரு மணி நேரம் காலதாமதம் ஆகும்னா, அது ஓரளவுக்கு முன்கூட்டியே நமக்குத் தெரியும். அப்படித் தெரிஞ்சதை உங்க இணையருக்குத் தெரிவிக்காதபட்சத்துல, காலப்போக்குல உங்க மேல தேவையில்லாத சந்தேகம்தான் வரும். இந்தச் சந்தேகம்தான் ரொமான்ஸ் லைஃபை குழிதோண்டி புதைக்கிற விஷயம். இதைத் தவிர்க்க, வீட்டுக்கு வர தாமதமாகும்னு ஒரேயொரு வாட்ஸ் அப் மெசெஜ் செஞ்சுடுங்க.

வேலையோட அழுத்தம் காரணமா இன்னிக்கு நிறையபேரோட செக்ஸ் லைஃப் பாதிக்கப்படுது. நேத்திக்கு வரைக்கும் நல்லா இருந்த இணையருக்குத் திடீர்னு என்னாச்சு. நம்ம மேலே இன்ட்ரஸ்ட் இல்லையோ அப்படிங்கிற எண்ணம் வந்துடும். இந்தப் பிரச்னை நிறைய ஆண்களுக்கு வர்றதை என் அனுபவத்துல பார்க்கிறேன். உங்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா லைஃப் பார்ட்னர்கிட்ட உடனே சொல்லிடுங்க. அப்போதான், சிகிச்சை, தெரபின்னு அடுத்தகட்ட தீர்வுகளை நோக்கி நகர முடியும்.

Office work Vs Romance
Office work Vs Romance

`வேலையை வீட்டுக்கு வெளியே விட்டுட்டு வந்துடுங்க.' எல்லா சைக்காலஜிஸ்ட்டும் எப்பவும் சொல்ற கருத்துதான். ஆனா, நாம யாருமே இதை ஃபாலோ பண்றதில்ல. சமீபமா, வேலையை பெட்ரூம்ல வைச்சும் செய்ய ஆரம்பிச்சுட்டோம். விளைவு பெட்ரூம்ல நிகழ வேண்டிய ரொமான்ஸ் குறைஞ்சுபோச்சு. வேலை மட்டுமல்ல, ரொமான்ஸும் தினமும் நிகழ வேண்டிய ஒரு விஷயம்தான்.

ரொமான்ஸ் லைஃப் தொய்வடையாம இருக்கிறதுக்கு ஆண், பெண் அடிப்படை இயல்புகளைத் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். பெண்களுக்கு, கணவர்கள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுத்தா ரொம்பப் பிடிக்கும். மனைவியோட பிறந்த நாள், அவங்களை முதன்முதலா சந்திச்ச நாள்னு ஞாபகம் வைச்சு, ஒரு பொக்கே அனுப்பிப்பாருங்க. உங்க ரொமான்ஸ் லைஃப் அந்தப் பூக்கள் மாதிரியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

Varun Mannava
Varun Mannava

ஆண்களுக்கு, மனைவி அழகா டிரெஸ் செஞ்சுக்கிட்டிருந்தா... மெல்லிய வாசனையோட இருந்தா... ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆபீசுக்குப் போறப்போ அழகா டிரெஸ் பண்ணிட்டுப் போற பெண்கள்கூட, வீட்ல ஏனோதானோன்னு ஒரு பழைய நைட் டிரெஸ்ல இருப்பாங்க. முடிஞ்ச வரைக்கும் வீட்லேயும் உங்க வெளித்தோற்றத்துல கொஞ்சம் கவனம் வெச்சீங்கன்னா, ரொமான்ஸ் வாழ்க்கை நல்லாவே இருக்கும்.

பெண்களுக்கு, கணவர்கள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுத்தா ரொம்பப்பிடிக்கும். ஆண்களுக்கு, மனைவி அழகா டிரெஸ் செஞ்சுக்கிட்டிருந்தா... மெல்லிய வாசனையோட இருந்தா... ரொம்ப ரொம்பப் பிடிக்கும்..''
டேட்டிங் குரு வருண் மன்னவா
Office work Vs Romance
Office work Vs Romance

வீட்டுக்கு வெளியே, ஆபீஸ்லேன்னு நிறைய பேரை சந்திக்கிறோம். இதுல யார்மேலேயாவது நம்ம மனசுக்கு விருப்பம் வரலாம். ரொமான்ஸ் லைஃபை பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயம் இதுதான். இந்த மாதிரி நேரங்கள்ல, உங்களோட இணையரை எந்தக் காரணத்துக்காக லவ் பண்ணீங்கன்னு யோசிச்சுப் பாருங்க. உங்க லைஃப் பார்ட்னரை மறுபடியும் லவ் பண்ண ஆரம்பிக்கிறதோட, திருமணத்தைத் தாண்டி வெளியே வந்த அந்த ஈடுபாடும் போய்விடும்.

`இந்த உறவு நட்பா, காதலா?' மினி டெஸ்ட்! #Quiz #RelationshipGoals

'தீயாய் வேலைச் செய்யணும் குமாரு' படத்தின் சந்தானம் கேரக்டரின் ரியல் வெர்ஷன் இவர். - 'டேட்டிங் குரு' வருண் மன்னவா ஆலோசனை! | #Relationship

Posted by Vikatan EMagazine on Thursday, October 3, 2019
பின் செல்ல