Published:Updated:

`படுக்கையறை என்பதே ஒரு பரிசோதனைக் கூடம்தான்!' - பெட்ரூம் - கற்க கசடற - 22

Couple (Representational Image) ( Photo by Emma Bauso from Pexels )

பாலியல் இன்பத்தை அனுபவிக்க `சரியான வழி' என்கிற ஒன்று இல்லை. உங்கள் மூளைக்குள் நீங்கள் எழுதிய அந்தக் கற்பனை வாழ்க்கையை நிஜமாக்க களத்தில் இறங்குங்கள். உங்கள் துணையும் உங்களோடு இணைந்து அந்த இன்பத்தை ஆசை தீர அனுபவிக்கலாமே. அதற்கு முன் உங்கள் துணையுடன் அது பற்றிப் பேசுங்கள்.

`படுக்கையறை என்பதே ஒரு பரிசோதனைக் கூடம்தான்!' - பெட்ரூம் - கற்க கசடற - 22

பாலியல் இன்பத்தை அனுபவிக்க `சரியான வழி' என்கிற ஒன்று இல்லை. உங்கள் மூளைக்குள் நீங்கள் எழுதிய அந்தக் கற்பனை வாழ்க்கையை நிஜமாக்க களத்தில் இறங்குங்கள். உங்கள் துணையும் உங்களோடு இணைந்து அந்த இன்பத்தை ஆசை தீர அனுபவிக்கலாமே. அதற்கு முன் உங்கள் துணையுடன் அது பற்றிப் பேசுங்கள்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Emma Bauso from Pexels )

ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்

மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி

மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்

கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.

- நாலடியார்

(ஓலையிலே எழுதும் கணக்காளன் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள் - தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப நிலையைத் தோழி கூறியது.)

பாலியல் உயிரினம்தானே நாம்?

ஈர்ப்பில் தொடங்கினாலும்கூட, இருவரும் இணைந்து ஈடுபட்டாலும்கூட, ஒவ்வொருவருக்கும் சொந்த பாலியல் ஆசைகள் உண்டு என்பதே உண்மை. பெரும்பாலும் பலர் அதுபற்றி இணையுடன் பேசாமலே காலங்கள் கழிந்து போகின்றன. உடைகளோடு சேர்த்து தயக்கங்களையும் களைந்து இணையின் பாலியல் விருப்பங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், தன் ஆசைகளை மனம் விட்டுப் பகிர்வதன் மூலமும்தான் முழுமையான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியும். இல்லையெனில், இந்த அவசர யுகத்தில் உறவும் ஒரு சம்பிரதாயமே!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Marcelo Chagas from Pexels

நாம் அனைவரும் பாலியல் உயிரினங்கள்தாம். பாலுறவுப் பிறவிகளாக நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறோமா? குறிப்பிட்ட பாலியல் நடத்தைகள் அல்லது அது சார்ந்த பழக்கவழக்கங்களை நாம் அனுபவிப்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும். நமது தனிப்பட்ட பாலியல் ஆசைகளைத் தூண்டுவது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இணையின் பரிபூரண ஒத்துழைப்பு அவசியம்தானே? அப்புறமும் ஏன் அதுபற்றிப் பேசத் தயங்குகிறோம்? சரி... பிடித்ததைத்தான் சொல்லவில்லை... பிடிக்காததையாவது இணையிடம் சொல்லி அதைத் தவிர்த்திருக்கிறீர்களா? அல்லது வேண்டாவெறுப்புடன் முகத்தில் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் அதையும் பொறுத்துக்கொள்கிறீர்களா?

பாலியல் இன்பத்தை எப்படி அனுபவிப்பீர்கள்?

பாலியல் இன்பத்தை அனுபவிக்க `சரியான வழி' என்கிற ஒன்று இல்லை. உங்கள் மூளைக்குள் நீங்கள் எழுதிய அந்தக் கற்பனை வாழ்க்கையை நிஜமாக்க களத்தில் இறங்குங்கள். உங்கள் துணையும் உங்களோடு இணைந்து அந்த இன்பத்தை ஆசை தீர அனுபவிக்கலாமே. அதற்கு முன் உங்கள் துணையுடன் அது பற்றிப் பேசுங்கள். பாலுறவு இன்பம் என்பது பரஸ்பர நலன் சார்ந்த விஷயம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதனால், உங்களைப் போலவே உங்கள் இணைக்கும் முற்றிலும் மாறுபட்ட விருப்பமான தூண்டுதல்கள் இருக்கக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால் அதையும் காது கொடுத்துக் கேளுங்கள்... அப்புறம் செய்யுங்கள், எந்தத் தடுமாற்றமும் இன்றி!

செக்ஸ் என்பது செக்ஸ் மட்டுமே அல்ல... சிறந்த உறக்கம், குறைவான மன அழுத்தம், அதிக மகிழ்ச்சி போன்றவற்றை செக்ஸ் மேம்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் என்பது ஓர் ஆரோக்கியமான உடல் செயல்பாடு. புணர்ச்சியின்போது வெளியிடப்படும் ரசாயனங்களால் நமது உடல்கள் செழித்து வளர்கின்றன. புணர்ச்சி மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்ல; அது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. சொல்லத் தேவையில்லை... அது கலோரிகளை எரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான உடலுறவு வாழ்க்கை என்பது ஆரோக்கியமான உடலின் ஒரு பகுதியே. அதனால் அதை மிஸ் பண்ணாதீர்கள்!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

தொடர்பு முக்கியம்

பாலியல் இன்பத்தைக் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உங்கள் இணையுடன் வெளிப்படையான தொடர்பு அவசியம். வெற்றிகரமான, நீண்டகால உறவுகள் இதுபோன்ற தொடர்பை அடிப்படையாகக் கொண்டவை. நோயிலிருந்து பாதுகாப்பாக உணர்வதும், நமது இணையை நம்புவதும்தான் வசதியான, நிதானமான, ஆரோக்கியமான உடலுறவுக்கான அடித்தளமாகத் திகழும். பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் நம்பிக்கை ஆகியவையே பாலியல் தேவைகள் மற்றும் புதிய முயற்சிகளை இணையுடன் சுதந்திரமாக விவாதிக்க அனுமதிக்கின்றன. ஆகவே, இதுபற்றி நேரடியாகவே பேசலாம். செய்யலாம். கொண்டாடலாம்!

`நீ தொடும்போது எனக்கு ரொம்பப் பிடிக்கும்...'

`உன்னை நான் மிகவும் ரசிக்கிறேன்...'

`என்னோடு செய்ய விரும்புகிறாயா?'

படுக்கையறை என்பது பொது சபை அல்ல என்றாலும்கூட, இப்படி நாகரிகமாகப் பேசினால்தான் சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கோ `ச்சீய்' ரக பேச்சுகள்தாம் படுக்கறையில் ஒலிக்க வேண்டும் என விரும்புவார்கள். படுக்கையறையில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். இருவருக்கும் அது வசதியாக இருக்கும்பட்சத்தில் வேறெந்தத் தடையும் இல்லை. ஒரே ஒரு ரூல்தான்... பேச வேண்டும். பேசாமலே மெஷின் போல இயங்கிவிட்டு திரும்பிப் படுக்கக் கூடாது!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by cottonbro from Pexels

சுய இன்பத்திலும் தவறில்லை!

இங்கு எல்லோருக்கும் இணை இல்லை. அதேபோல சிலர் துணையை விரும்புவதில்லை. உண்மை என்னவென்றால்: சிறந்த உடலுறவை அனுபவிக்க உங்களுக்கு இணை தேவையில்லை!

அதற்கான எளிய வழி... சுயஇன்பம்தான். இதை நாள் தவறாமல் செய்வதும் தவறில்லை. உண்மையில் இது ஆரோக்கியமானதும்கூட.

எது பிடிக்குமோ அதை நிகழ்த்தலாம்!

எந்த விதமான பாலியல் நடத்தை அதிக இன்பத்தைத் தருகிறதோ, அதில் ஈடுபடுங்கள். நீங்கள் எப்படி உச்சக்கட்டத்தை அடைகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்வது உங்களுடையது. உங்களுக்கோ, வேறு எவருக்கோ எந்த ஆபத்தும் இல்லாதவரை பாலியல் இன்பத்தை அடைய எந்த விதிகளும் இல்லை, `சரியான வழி'களும் இல்லை.

திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை என்பது இருவருக்குமான சொந்த பாலியல் தேவைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலமே நிறைவடைகிறது. படுக்கையில், உங்கள் பாலியல் இன்பத்துக்கு நீங்களே பொறுப்பு. எனவே அந்த பரிசோதனைக் கூடத்தில் நிறைய புதுமைகள் பிறக்கட்டும்!

- சஹானா