சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.
பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச் சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் இனி வாரம்தோறும் புதன்கிழமை விகடன்.காமில் தொடர்ந்து பேச இருக்கிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
அப்படி இந்த வாரம் பேசவிருப்பது டைம் மேனேஜ்மென்ட் பற்றி.
உங்கள் பிள்ளைகளுக்கு டைம் மேனேஜ்மென்ட் தெரியுமா?
குழந்தைகளுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் பெற்றோர் ஒரு விஷயத்தைக் கோட்டை விடுகிறார்கள்... அது, நேர நிர்வாகம். பதின்பருவ பிள்ளைகளுக்கு நேர நிர்வாகம் என்பது அவசியம் போதிக்கப்பட வேண்டிய விஷயம். இன்றைய சூழலில் படிப்பு, ஆன்லைன் வகுப்பு, இதர நடவடிக்கைகள், இதற்கிடையில் நண்பர்களுக்கான நேரம், குடும்பத்துக்கான நேரம் என டீன்-ஏஜ் பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏராளமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தனை விஷயங்களையும் அவர்கள் பதற்றம் இல்லாமலும் ஸ்ட்ரெஸ் ஆகாமலும் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டீன் ஏஜில் நேர நிர்வாகத்தைப் பழகுவது வேறுசில நன்மைகளையும் கொடுக்கிறது. அவை...
- பிள்ளைகள் பொறுப்புள்ளவர்களாகவும் சுயமாக இயங்கும் திறன் பெறுபவர்களாகவும் வளர்வார்கள்.
- நேர நிர்வாகம் அவர்களுக்கு கைவந்து விட்டால் குடும்பத்துக்கும் நட்பு வட்டத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கவும் கற்றுக்கொள்வார்கள்.
- நேர நிர்வாகம் பழகப்பழக அவர்களுக்கு நேரத்தைக் கையாள்வதில் பதற்றமோ ஸ்ட்ரெஸ்ஸோ இருக்காது. டெட்லைன் குறித்து கவலை கொள்ள மாட்டார்கள்.
- பள்ளிக்கூடத்தில் படிப்பு மற்றும் இதர நடவடிக்கைகளில் அவர்களின் திறன் மேம்படுவதைப் பார்க்க முடியும்.
- முடிவுகளை எடுப்பதில் அவர்கள் நிபுணர்களாக உருவெடுப்பார்கள்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபிள்ளைகளுக்கு நேர நிர்வாகத்தை பழக்குவதில் பெற்றோர் எப்படி எல்லாம் உதவ முடியும்?
ஆஷ்லி:
முதல் வேலையாக நேர நிர்வாகத்தை பிள்ளைகள் பழக ஆரம்பிக்கும்போது உங்களுடைய சப்போர்ட் அவர்களுக்கு மிக முக்கியம். அவர்களுடைய நேரத்தை நீங்கள் நிர்வாகம் செய்ய முடியாது. அதே போல ஆரம்பத்திலேயே அவர்களால் தனியாக நேர நிர்வாகத்தைக் கையாளவும் முடியாது. நான் டீன் ஏஜில் அடியெடுத்து வைத்தபோது நேர நிர்வாகம் என்பது எனக்குப் பெரும் சுமையாக இருந்தது. என்னால் நேர நிர்வாகத்தை தனியே கையாள முடியவில்லை. அதனால் அம்மாவிடம் உதவி கேட்டேன்.
நேர நிர்வாகத்தில் எனக்குப் பெரிய சவால்.... எந்த வேலையை முதலில் செய்வது, எதைத் தள்ளிப்போடுவது என்பது. அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் அம்மா எனக்கு வழிகாட்டினார். டீன் ஏஜில் எங்களுக்கு எல்லா வேலைகளுமே முக்கியமாகத் தெரியலாம் அல்லது எல்லாவற்றையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றலாம். அவற்றைப் பகுத்துப் பார்த்து, எவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், எவற்றையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கற்றுக்கொடுத்தார் அம்மா. இன்றுவரை அந்தப் பாடம் எனக்கு உதவுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டாக்டர் ஷர்மிளா:
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமே பெரும்பாலும் நேர நிர்வாகம் என்பது எளிதில் சாத்தியமாவதில்லை. படிப்பு, இதர நடவடிக்கைகள், ஸ்போர்ட்ஸ், தன்னார்வ வேலைகள், குடும்பம், நட்பு என பிள்ளைகளைச் சுற்றியுள்ள உலகத்தில் ஏராளமான விஷயங்கள்... எதற்கு, எப்போது, எவ்வளவு நேரத்தை ஒதுக்குவது என்பது அவர்களுக்கு பெரும்குழப்பத்தை ஏற்படுத்துகிற விஷயம்.
இந்த இடத்தில் தான் பெற்றோரின் சப்போர்ட் அவர்களுக்கு அவசியமாகிறது. டீன்-ஏஜ் பிள்ளைகளின் வாழ்க்கையில் அவர்களின் முன் நிற்கும் பல விஷயங்களில் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், எதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதே நேர நிர்வாகத்தின் பாலபாடம்.

நான் ஆஷ்லிக்கு அப்படித்தான் நேர நிர்வாகத்தைப் பழகினேன். முதல் வேலையாக அவள் செய்ய ஆசைப்படுகிற விஷயங்கள் என்னென்ன, அவள் செய்து முடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை லிஸ்ட் போடச் சொன்னேன். அவற்றில் மாதாந்தர ரீதியாக, வார ரீதியாக, தினப்படி என அந்தந்த வேலைகளின் தன்மைக்கேற்ப எப்படி நேர நிர்வாகத்தைத் திட்டமிடலாம் என பழக்கினேன்.
இப்போதெல்லாம் எந்த வேலைக்கும் அவள் ஸ்ட்ரெஸ் ஆவதே இல்லை... எந்த வேலையை, எத்தனை மணிக்குள், எவ்வளவு அவசரமாக முடிக்க வேண்டும், எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை முதலிலேயே திட்டமிட்டு அதற்கேற்றபடி அவளது நேரத்தை நிர்வாகம் செய்யக் கற்றுக்கொண்டாள். குடும்பம், நட்பு, படிப்பு, விருப்பங்கள் என எல்லாவற்றுக்கும் ஆஷ்லிக்கு நேரமிருக்கிறது இன்று.
- ஹேப்பி பேரன்ட்டீனிங்