Published:Updated:

குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை பெற்றோர் உறுதிப்படுத்துவது எப்படி? - பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 5

Parenteening

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை பெற்றோர் உறுதிப்படுத்துவது எப்படி? - பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 5

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

Published:Updated:
Parenteening

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றிப் பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் ஷர்மிளா

பிரச்னைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது பெற்றோரைப் பொறுத்தவரை மிக நீண்ட நெடும் போராட்டம். இன்றைய காலத்தில் பள்ளிக் குழந்தைகள் ஆன்லைனில் சுதந்திரமாக இயங்கிப் பழகுகின்றனர். அவர்களைக் கண்காணிக்க யாரும் இருப்பதில்லை. ஆன்லைனில் குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக, சோஷியல் மீடியாவில் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும்போதும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் குழந்தைகளுக்கு ரிஸ்க்கும் ஆபத்துகளும் சற்று அதிகம். பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளை இணைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது அவர்கள் ஆபத்தான மற்றும் அநாவசியமான இணையதள செயல்பாடுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல பாதுகாப்பான இணையவழி பயன்பாட்டால் உங்கள் குழந்தைகள் ஆன்லைன் அனுபவத்தை ஆக்கபூர்வமாக அனுபவிக்க கற்றுக் கொள்கிறார்கள்... ஆபத்தின்றி மற்றவர்களுடன் இணைப்பில் இருக்கவும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் கிரியேட்டிவ்வாக யோசிக்கவும் அவர்களுக்கான ஸ்பேஸ் கிடைக்கவும் நீங்கள் உதவ முடியும்.

குழந்தைகளின் இணையதள நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது ஏன் அவசியம்?


சைபர் புல்லியிங்:
- தேவையற்ற அநாவசிய விஷயங்களை குழந்தைகள்கள் அறியாமல் இருக்க.
- அவர்களது நற்பெயர் பாதுகாக்கப்பட.
- குழந்தைகளின் பர்சனல் விஷயங்கள் பாதுகாக்கப்பட.

குழந்தைகளுக்கான ஆன்லைன் பாதுகாப்பை பெற்றோர் எப்படி உறுதிப்படுத்தலாம்?


1. குடும்பத்துக்கான மீடியா பிளானை உருவாக்குங்கள்...

இந்தத் திட்டத்தை நீங்கள் உங்கள் குழந்தையுடன் சேர்ந்து கலந்தாலோசித்து உருவாக்குவது அவசியம். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு அறிய வேண்டியது அவசியம்.
இந்தத் திட்டத்தில் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய புரொகிராம் மற்றும் ஆப்புகள் பற்றிய தெளிவு, எக்காரணம் கொண்டும் யாரிடமும் பர்சனல் விஷயங்களைப் பகிரக்கூடாது என்ற கட்டுப்பாடு ஆகியவை முக்கியமாக இடம் பெற வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2. Kiddle or Kidtopia போன்ற சைல்ட் ஃபிரெண்ட்லி சர்ச் இன்ஜின்களைப் பயன்படுத்த குழந்தைகளைப் பழக்கலாம். ABC Kids, CBeebies, YouTube Kids, KIDOZ, Messenger Kids என இதற்கான ஏராளமான ஆப்புகள் உள்ளன அவற்றில் இருந்து உங்களுக்கானதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. உங்கள் குழந்தைகளுக்கான கேம்ஸ் இணையதளங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டுங்கள்.

4. குழந்தைகள் இணையதளத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது முதலில் சில நாள்களுக்கு நீங்களும் அவர்களுடன் உடன் இருப்பது நல்லது அல்லது நீங்கள் எப்போதும் அவர்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். இணையதளத்தைப் பயன்படுத்தும்போது உங்கள் குழந்தைகளை முகம் சுளிக்க வைக்கிற மாதிரியோ, தர்மசங்கடம் தருகிற மாதிரியோ அவர்கள் ஏதேனும் தகவல்களையோ, காட்சிகளையோ பார்ப்பது உங்களுக்குத் தெரியவந்தால் உடனடியாக அவர்களுக்கு உதவி, வழிநடத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

ஷர்மிளா - ஆஷ்லி
ஷர்மிளா - ஆஷ்லி

5. பிரைவசி செட்டிங்ஸ் மற்றும் லொகேஷன் சர்வீஸ் ஆகியவற்றை செக் பண்ணுங்கள். Browsers, Apps, Search engines/ YouTube மற்றும் யூடியூப் போன்றவற்றில் பாதுகாப்பான தேடல் செட்டிங்ஸை உறுதிப்படுத்துங்கள். கேமரா மற்றும் வீடியோ செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க குழந்தைகளுக்குப் பழக்கங்கள். இது அவர்கள் தேவையில்லாமல் தங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களுக்குப் பகிர்வதை அல்லது மற்றவர்களுடைய படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெறுவதையும் தவிர்க்கும்

ஆஷ்லி

``ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு வருத்தப்படுவதைவிட அதைப் பாதுகாப்பாகச் செய்வது சிறந்தது என்று சொல்வதுண்டு. குழந்தைகளின் இணையதள பயன்பாட்டுக்கு இந்த வாசகம் மிகவும் பொருத்தமானது. மிக மிக நல்ல விஷயங்களும் அதே அளவுக்கு மோசமான விஷயங்களும் ஒருசேர கொட்டிக்கிடக்கும் இடம் இணையதளம். குழந்தைகள் கொஞ்சம் அசந்தாலும் தவறான நபர்களின் வழிகாட்டுதலால் தவறான பாதையில் திசை திரும்ப இணையதளத்தில் ஆபத்துகள் எக்கச்சக்கம். இணையதளத்தில் சிக்கிக்கொண்டு வருத்தப்பட்ட மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது எனக்கு அறியாத வயது... ஏதோ ஓர் ஆர்வத்தில் எனக்கான இன்ஸ்டாகிராம் அக்கவுன்டை யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் நானாகவே ஆரம்பித்துவிட்டேன். அதை பிரைவேட் அக்கவுன்ட்டாக வைத்துக்கொள்வது எப்படி என்ற தெளிவெல்லாம் இல்லாமல் ஆரம்பித்ததால் தேவையற்ற கமென்ட்டுகளை சந்திக்க வேண்டி வந்தது.

அந்த வயதில் அதெல்லாம் எனக்குப் புதிதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததால் உடனே அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். அதன்பிறகு, அம்மா எனக்கு ஆன்லைன் பாதுகாப்பு பற்றி விளக்கமாகப் புரிய வைத்தார். நம்முடைய படங்களையோ தகவல்களையோ பகிரும்போது எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அடுத்தவர்களின் கமென்ட்டுகளுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்றெல்லாம் எனக்குப் பாடம் எடுத்தார்.

Parenting (Representational Image)
Parenting (Representational Image)

குழந்தைகளுக்கு இணையதள பயன்பாடு என்பது இன்று தவிர்க்க முடியாத விஷயமாக மாறிவிட்டது இன்டர்நெட் என்ற வார்த்தையைக் கேட்டாலே பல பெற்றோரும் `இந்த வயசுல எதுக்கு அதெல்லாம் தேவை இல்லாத வேலை' என்று உடனே அதைக் கட்டுப்படுத்துவார்கள். இதனால்தான் பல பிள்ளைகளும் பெற்றோருக்குத் தெரியாமல் சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பித்து தவறான நபர்களிடம் மாட்டிக்கொள்வது அதிகம் நடக்கிறது. இதற்குப் பதிலாக என் அம்மா என்னை வழி நடத்தியது போல எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு இணையதள பாதுகாப்புப் பற்றி விளக்கிச் சொல்லி அதன் பிறகு அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் சமூக வலைதளங்களில் கணக்குத் தொடங்க அனுமதிப்பது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

ஒரு விஷயத்தைச் செய்யாதே என்று பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும்போதுதான் அதைச் செய்தால் என்ன என அவர்களுக்குத் தோன்றும். இதற்குப் பதிலாக ஒரு விஷயத்தைப் பாதுகாப்பாகச் செய்வது எப்படி, சரியான வழிகாட்டுதலுடன் சரியான நபர்களின் ஆலோசனையோடு செய்வது எப்படி எனப் புரியவைக்கும்போது அதில் உள்ள ஆபத்துகளை பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். தவிர, பெற்றோருக்குத் தெரியாமல் அவர்கள் கட்டுப்படுத்துகிற விஷயங்களைச் செய்யவும் துணிய மாட்டார்கள்.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism