Published:Updated:

பெற்றோரை விரோதிகளாகப் பார்க்கும் பிள்ளைகள்; எப்படிக் கையாள்வது? பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 12

பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

பெற்றோரை விரோதிகளாகப் பார்க்கும் பிள்ளைகள்; எப்படிக் கையாள்வது? பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 12

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள்.

Published:Updated:
பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ்

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச் சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி
டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் ஷர்மிளா

``குழந்தையா இருந்தவரைக்கும் என்னையே சுத்திச்சுத்தி வந்தது, டீன்ஏஜுக்கு வந்ததும் என்னையே எதிரி மாதிரி பார்க்குது. எது சொன்னாலும் மதிக்கிறதில்லை... என்ன சொன்னாலும் கேட்கறதில்லை... எதுக்கெடுத்தாலும் கோபம், ஆத்திரம்...'' இப்படிப் புலம்பும் பெற்றோரில் நீங்களும் ஒருவரா? அப்போது உங்கள் வீட்டு பதின்பருவத்தினர் நிச்சயம் அடங்க மறுக்கும் குணத்துடன் இருப்பது உறுதி.

பிள்ளைகளின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்து ரசித்து மகிழ்ந்த அதே பெற்றோர்தான், அவர்கள் டீன்ஏஜில் அடியெடுத்து வைத்ததும் அவர்களது மாறுபட்ட நடத்தையைப் பார்த்து மிரண்டுபோகிறார்கள், கவலைப்படுகிறார்கள். அந்த வயதுக்கே உரிய மாற்றம் அது... சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட கோபப்படுவது, சட்டென ரியாக்ட் செய்வது, விதிகளை மீறி நடக்க நினைப்பது, மரியாதையில்லாமல் பேசுவது என எல்லாமே அந்த வயதில் நடக்கும்.

திடீரென ஏன் மாறுகிறார்கள்?

மற்ற யாரையும்விட பெற்றோருக்குத்தான் தங்கள் பிள்ளைகளைப் பற்றி அதிகம் தெரியும். குழந்தையாக இருந்ததற்கும் டீன்ஏஜில் இருப்பதற்குமான பிள்ளையின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறீர்களா? அது உங்கள் பிள்ளையின் இயல்பே இல்லையே என்று நினைக்கிறீர்களா? ஏதோ தவறாக நடப்பதாக சந்தேகிக்கிறீர்களா? `வயசுக் கோளாறு' என்ற அலட்சியத்துடன் அதைக் கடந்துபோகாமல், அதன் பின்னணியில் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள். அந்த மாற்றத்துக்கான காரணம், அவளுக்கோ, அவனுக்கோ பள்ளிக்கூடத்திலோ, கல்லூரியிலோ எதிர்ப்பாலினம் மீது ஏற்பட்ட எதிர்பாராத ஈர்ப்பு, வகுப்பறையில் சக மாணவர்களால் கிண்டல் செய்யப்பட்டது என எதுவாகவும் இருக்கலாம். இதுபோன்ற சூழல்கள் உங்கள் குழந்தையின் இயல்பான நடத்தையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலான டீன் ஏஜ் பிள்ளைகள் இந்தச் சூழலை எதிர்கொள்வதுண்டு. அவர்களுக்கு அந்த வயதில் சுதந்திரம் தேவைப்படும். தனக்கென தனி அடையாளம் தேவைப்படும். தன்னை யாரும் கேள்விகேட்பதை விரும்ப மாட்டார்கள். இது அந்த வயதில் மூளையில் ஏற்படும் வளர்ச்சி மாற்றத்துடன் தொடர்புடையதும்கூட.

காரணங்கள்:

- இப்படி நடந்துகொள்வதன் மூலம் தன் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தனக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்த நினைப்பது.

- தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்த முயல்வது.

- சக டீன் ஏஜர்கள் ஏற்படுத்தும் தாக்கம்.

- பிறரது கவனத்தை ஈர்க்க நினைப்பது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தகைய நடவடிக்கையிலிருந்து அவர்களை விலக்கி வைக்க முடியுமா?

1. உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைக் கண்காணியுங்கள். எப்போதும் அவர்களுடன் தொடர்பிலிருங்கள். அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள், அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள், அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.

2. சர்வாதிகார வளர்ப்புமுறையைக் கைவிட்டு அதிகாரபூர்வ வளர்ப்புமுறைக்கு மாறுங்கள். (விதம் விதமான பேரன்ட்டிங் ஸ்டைல் பற்றி முந்தைய இதழ்களில் விரிவாகப் பேசியிருக்கிறோம்).

3. பெற்றோராக உங்கள் பொறுப்புகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகள் வளர, வளர அவர்களுக்கான சுதந்திரத்தை, பொறுப்புகளைக் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

4. குடும்பத்துக்கான விதிகளையும் எல்லைகளையும் அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.

5. நீங்களோ, உங்கள் பதின்பருவ பிள்ளைகளோ உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும்போது வாக்குவாதங்கள் செய்வதைத் தவிருங்கள்.

6. உங்கள் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் திசைத்திருப்பாதீர்கள்.

7. எப்போதும் பாசிட்டிவ்வாக அணுகுங்கள்.

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

பிள்ளைகளை எப்படி மோட்டிவேட் செய்யலாம்?

1. அவர்களின் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். பலன்கள் குறித்து கவலைப்படாதீர்கள்.

2. உங்கள் பிள்ளைகளின் சுயசார்புத் தன்மைக்கு மதிப்பளியுங்கள்.

3. பிள்ளைகளின் இடத்திலிருந்து அவர்களது பிரச்னைகளை அணுகுங்கள்.

4. பிள்ளைகளின் ஆர்வங்களை ஊக்கப்படுத்துங்கள்.

5. பிள்ளைகளுக்கு சிறந்த உதாரணமாக நீங்கள் இருங்கள்.

6. உங்கள் டீன் ஏஜ் பிள்ளையைப் பற்றி எப்போதும் பாசிட்டிவ்வாகவே பேசுங்கள்.

7. ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை ஏற்படுத்துங்கள்.

8. பரிசுகள் கொடுப்பதும் வேண்டாம், தண்டனைகள் கொடுப்பதும் வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டேக்அவே மெசேஜ்

உங்களுக்கு உங்கள் பிள்ளை ஆகச் சிறந்தவர், அதே மாதிரி அவர்களுக்கும் நீங்கள் ஆகச்சிறந்த பெற்றோராக இருப்பீர்கள். பிள்ளை வளர்ப்பின் அடிப்படையே பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமிடையிலான இணக்கத்தை பலப்படுத்துவதுதபான். அவர்கள் எந்த விஷயம் குறித்தும் உங்களிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திவிடுங்கள். பிள்ளைகளைக் கண்காணித்து வளர்ப்பதற்கும் கட்டுப்படுத்தி வளர்ப்பதற்கும் இடையில் இருப்பது மெல்லிய கோடுதான். கட்டுப்படுத்தாத கண்காணிப்பு தான் ஆரோக்கியமான வளர்ப்புமுறை.

ஆஷ்லி

``டீன் ஏஜ் பிள்ளைகள் எல்லோருமே இப்படித்தான்... பெற்றோர் சொல்பேச்சு கேட்க மாட்டார்கள்... அவர்கள் சொல்வதற்கு நேர்மாறாக நடந்துகொள்வார்கள் என்று எங்களைப் பற்றி பலருக்கும் இப்படி ஒரு பொதுக்கருத்து இருக்கிறது. அது முழுக்க உண்மை இல்லை என்றாலும், ஓரளவு உண்மை இருப்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். டீன் ஏஜில் நாங்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறோம் என்று பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. என் அனுபவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்கிறேன். டீன் ஏஜில் அடியெடுத்து வைத்த பிறகு, நான் எல்லா விஷயங்களுக்கும் விவாதிக்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை முகத்துக்கு நேராகச் சொல்ல ஆரம்பித்தேன். அம்மா என்னிடம் அடிக்கடி, ``நான் பழைய ஆஷ்லி பாப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன்... அவ நான் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாம சமத்தா கேட்டுப்பா' எனச் சொல்வார். அம்மா சொல்லும்போது எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். குழந்தையாக இருந்தபோது எனக்கு அம்மா மற்றும் குடும்பத்தாரின் பேச்சைக் கேட்டு அப்படியே நடப்பதுதான் ஒரே வழி. வளர்ந்த பிறகு இன்டர்நெட் மூலமாகவும் ஃபிரெண்ட்ஸ் மூலமாகவும் எனக்கு வெளியுலகம் அதிகம் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய நண்பர்களைப் பார்க்கும்போது அவர்களைப் போல ஏன் நான் இருக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுகிறது...

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்

ஆனாலும், அது பற்றி அம்மாவிடம் வெளிப்படையாகப் பேச முடியாமல் கோபமாக குரலை உயர்த்தி அதை வெளிப்படுத்தி விடுகிறேன். டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் புதிய உலகத்துக்குள் பயணிக்கவும் புதிய அனுபவங்களை எதிர் கொள்ளவும் தயாராகிறோம்.
ஹேர் கலரிங் செய்வது, எனக்கென தனி அறை... அதைப் பூட்டி வைத்துக்கொள்வது, காஸ்ட்லியான போன், இரவில் தாமதமாக உறங்குவது... என டீன் ஏஜில் நான் செய்ய ஆரம்பித்த பல விஷயங்களில் எனக்கும் அம்மாவுக்கும் வாக்குவாதம் வந்திருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் அம்மா அதற்கெல்லாம் ஏன் நோ சொல்கிறார் என்பதை உணர ஆரம்பித்தேன். எந்த விஷயமாக இருந்தாலும் அதுகுறித்து குரலை உயர்த்தாமல், கோபப்படாமல் அம்மாவிடம் பொறுமையாக என் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும்போது அவர் அதைப் புரிந்து கொள்வதையும் சூழலுக்கேற்ப ஓகே சொல்வதையும் புரிந்துகொண்டேன்... எளிமையான, அமைதியான உரையாடல்களின் மூலமே சாத்தியமாகக் கூடிய பல விஷயங்களை வாக்குவாதமாக்கி, பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். இப்போதெல்லாம் எங்களுக்குள் அனல் பறக்கும் அத்தகைய வாக்குவாதங்கள் வருவதில்லை.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism