Published:Updated:

உறவில் இணையை மகிழ்விக்க சிறந்த வழி எது தெரியுமா? - பெட்ரூம்... கற்க, கசடற - 20

Couple (Representational Image)
News
Couple (Representational Image) ( Photo by Jonathan Borba from Pexels )

நிபுணர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பரிந்துரைக்கும் நான்கு குறிப்பிட்ட நுட்பங்கள் தரும் இன்பத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. `ஒரே பொசிஷன்; என்றென்றும் அதே பொசிஷன்' என்கிற மெஷின் வேலையை விட்டுவிட்டு இதுபோன்ற நுட்பங்களை முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு ரகசியம் தெரியுமா? நல்ல உடலுறவுக்கு நல்ல தகவல்தொடர்பு அவசியம். நீங்களும் இணையும் உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் எவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு இன்பமும் பன்மடங்காகும். ஆனால், நிஜத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? பெரும்பாலான பெண்கள் தங்கள் இணையிடம் தாம்பத்யம் பற்றி வாயே திறப்பதில்லை. செக்ஸ் என்பதே தீண்டத்தகாத ஒரு வார்த்தையாக நம் சமூகத்தில் பதிவாகியிருப்பதுதான் காரணம். அதனால், பெண்கள் தாங்கள் விரும்புவதை விவரிக்கும் வார்த்தைகள் இதுவரை இல்லை. அது மட்டுமல்ல... பிற நுட்பங்களைப் பரிந்துரைக்க போதுமான அனுபவமும் இல்லை.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Thomas AE on Unsplash

ஒருவேளை தோழிகள் மூலமாகவோ, புத்தகங்கள், இணையம், வீடியோக்கள் வாயிலாகவோ அறிந்துகொண்டாலும்கூட, `உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’ என்கிற கேள்வி எதிர்த்தரப்பில் பிறக்கும். அப்புறம் எப்படிப் பேசுவார்கள் பெண்கள்? இருதரப்பிலும் தயக்கமற்ற உரையாடல் நிகழ்ந்தால், அதுவே பாலியல் நெருக்கத்துக்கு வழிவகுத்து பிரமாதப்படுத்திவிடும். இதை ஆண்கள் உணர்ந்துகொண்டால் அடுத்தடுத்து அமர்க்களம்தான். ஆகவே, பெண்கள் தங்களுக்கு வேண்டியதை கேட்டுப் பெற வேண்டும். அதற்கான சூழல் உருவாக வேண்டும்.

சரி... சமூகச் சிக்கல்களைக் கடந்து சமாசாரத்துக்கு வருவோம். செக்ஸ் தனக்குள் ஏராளமான சாகசங்களையும் ஆச்சர்யங்களையும் ஒளித்து வைத்திருக்கிறது. உதாரணமாக ஒரு விஷயம் பாருங்கள். யோனி ஊடுருவல்தான் இங்கு அதிக அளவில் இயந்திரம்போல நடக்கிற விஷயம். புதிதாக வேறொன்றும் வேண்டாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பழைய முறையிலேயே சிறிய மாற்றம் செய்தாலே போதும்... அதென்ன மாற்றம்? அது ஆண் இயங்கும்போது செய்கிற இன்னபிற விஷயமாக இருக்கலாம். பொசிஷனில் லேசான மாற்றமாக இருக்கலாம். பெண்ணுக்கு அதுவேகூட பெருமகிழ்ச்சி அளித்துவிடும்.

பெண் அருமையான பரவசத்தை அடைய ஆண் என்ன செய்ய வேண்டும்?

நிபுணர்கள் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பரிந்துரைக்கும் நான்கு குறிப்பிட்ட நுட்பங்கள் தரும் இன்பத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரே பொசிஷன்; என்றென்றும் அதே பொசிஷன் என்கிற மெஷின் வேலையை விட்டுவிட்டு இதுபோன்ற நுட்பங்களை முயற்சி செய்து பாருங்கள். `சதி லீலாவதி’ ரமேஷ் அரவிந்துக்கு ஏற்பட்டதுபோல முதுகு பிடித்துக்கொள்ளுமோ என்றெல்லாம் மிரள வேண்டாம். இன்பத்துக்காக இந்த ரிஸ்க் கூட எடுக்கக்கூடாதா, என்ன?

Couple
Couple
Photo by Womanizer Toys on Unsplash

முறை 1: யோனிக்குள் ஆணுறுப்பின் செயல்பாட்டைச் சரிசெய்ய, இடுப்பைச் சுழற்றுவது, உயர்த்துவது அல்லது குறைப்பது. Angling என்கிற இந்த முறையை முயற்சி செய்தவர்களில் 87 சதவிகிதம் பேருக்கு இது நல்ல பலன் அளித்தது.

முறை 2: ஆண்குறி ஊடுருவலின்போது... பெண்ணோ, இணையோ அவளது வெஜினாவை ஒரு விரல் அல்லது பாலியல் பொம்மை மூலம் ஊடுருவி ஒரே நேரத்தில் இரட்டைத் தூண்டுதலை அளிப்பது. Pairing என்கிற இந்த இணைத்தல் முறை 69 சதவிகிதத்தினருக்கு வெற்றியைத் தந்திருக்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முறை 3: ஊடுருவலின்போது ஆணுறுப்பு பெண்குறிக்குள் (குறிப்பாக கிளிட்டோரிஸ் பகுதி) தொடர்ந்து உராய்ந்துகொண்டே இருக்கும். அது பிஸ்டன் போல ஒவ்வொரு முறையும் வெளித்தள்ளப்படாமல் உள்ளேயே கிளிட்டோரிஸின் மீது காதல் கொண்டிருக்கும். பொதுவாக பெண் மேலே இருக்கும் நிலையில் இது சிறப்பாக அமையும். Rocking என்றழைக்கப்படும் இந்த முறைக்கு 76 சதவிகிதத்தினரின் வோட்டு இருக்கிறது.

முறை 4: அடியாழம் வரையெல்லாம் போக வேண்டியதில்லை. ஓர் இன்ச் அளவுக்குள்ளேயே அகில உலக இன்பத்தையும் துய்க்க முடியும் என்கிறார்கள் இதில் ஆழம் கண்டவர்கள். அதாவது... யோனியின் நுழைவாயில் அருகிலேயே ஆழமற்ற ஊடுருவல் மூலம் இன்பத்தை அளிக்கும் முறை இது. உண்மையில் இந்தப் பகுதி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. ஓர் அங்குல ஊடுருவலிலேயே - அதற்கு மேல் செல்லாமலே மிகவும் அற்புதமாக உடலுறவு கொள்ள முடியும். Shallowing என்கிற இந்த லேசா லேசா நுட்பத்தை 84 சதவிதத்தினர் விருப்பத்தோடு பயன்படுத்துகின்றனர்.

மொழி மிகவும் முக்கியம்!

மனித வாழ்வில் தகவல்தொடர்புக்கும் இலக்கிய இன்பத்துக்கும் மட்டுமல்ல... பாலியல் நுட்பங்களுக்கும் மொழியைப் பயன்படுத்துவது சக்தி வாய்ந்தது. அதாவது... இன்பம் மற்றும் இன்ப நுட்பங்களுக்குப் பெயரிடுவது மிக நல்லது. உடலுறவின் ஒவ்வொரு செய்கைக்கும் நீங்கள் இருவரும் சேர்ந்து இன்பப் பெயர்களைச் சூட்டுங்கள். அப்படிச் செய்தால், இணையுடன் அந்தப் பெயர்களைப் பகிர்வதில் பெண்களால் வசதியாகவும் நம்பிக்கையுடனும் உணர முடியும். தேவைகளை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்த இந்த வார்த்தைகள் இன்பக் கதவைத் திறக்கும். இருபது ஆண்டுகள் ஒன்றாக இருந்தாலும்கூட, புதிதாக இன்ப வார்த்தைகளை உருவாக்கி, நுட்பங்களை முயற்சி செய்ததன் மூலம் புதிய உலகைக் கண்டிருக்கிறார்கள்!

Couple (Representational Image
Couple (Representational Image
Image by Free-Photos from Pixabay

பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றி தோழிகளுடன் விவாதிக்கும்போதும் இந்தப் பெயர்கள் உதவும். தாம்பத்ய வாழ்க்கைக்குள் பெண்களின் குரல்கள் கேட்கத் தொடங்கும்போது இனிய மாற்றங்கள் நிகழும். பாலியல் விருப்பங்கள் பல பெண்களால் பகிர்ந்து கொள்ளப்படும்போது செக்ஸ் விழிப்புணர்வுக்கான வாய்ப்பு உருவாகும். செக்ஸ் என்பது இயல்பான அவசியமான விஷயம் என்பதும் தெளிவாகும். மொத்தத்தில் பெண்களுக்கான பாலியல் இன்பக் கல்வியில் இது ஒரு படி முன்னேற்றமாக அமையும்.

இணையை மகிழ்விப்பதும் அவசியமே!

செக்ஸ் என்பது ஒருவழிப் பாதை அல்ல... ஒருவர் மட்டுமே அனுபவிப்பதல்ல... இணைக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் எவை எவை என அறிந்தோ, உணர்ந்தோ, கேட்டோ செய்ய வேண்டும். அவருக்கு எந்த நிலை, எந்தவிதத் தூண்டுதல் பிடிக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக அதை மட்டுமே லூப் மூடில் செய்து போரடித்துவிடக் கூடாது!

மேற்சொன்ன நான்கு நுட்பங்களும் ஊடுருவலின்போதே - அதே நேரத்திலேயே கிளிட்டோரிஸைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன.

ஆண்கள் கவனத்துக்கு...

ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது... பொதுவாக சமூகத்தில் இருந்து வெளிப்படும் தவறான தகவல்கள் மற்றும் உண்மையற்ற போர்னோ வீடியோக்களிலிருந்தே ஊடுருவல் மட்டும்தான் செக்ஸ் என்கிற எண்ணம் கற்பிக்கப்படுகிறது. ஊடுருவலுக்கு முன்பும், ஊடுருவலின்போதும், அதன் பின்பும் ஆண் செய்கிற காரியங்களில் இருந்தே பெரும்பாலான பெண்கள் மிகுந்த பரவசம் அடைகிறார்கள்.

இந்த உலகில் மட்டுமல்ல... நம் உடலிலும் ஆராய்வதற்கு எப்பொழுதும் புதிய விஷயங்கள் உள்ளன. இணைக்கு எது நன்றாக இருக்கிறது என்பதையும், அதை எப்படி அவருக்கு சிறப்பாக அளிக்க முடியும் என்பதையும் அறிந்துகொண்டால் இனி எல்லாம் சுகமே!

- சஹானா