Published:Updated:

`இவங்க மாதிரி வேணும்னா கிரஷ்... இவங்கதான் வேணும்னா லவ்!' - லவ், கிரஷ் கைடு

காதல்
காதல்

அவர் எதைச் செய்தாலும் அது சரியென்றே நினைக்கிறோம் எனில், அது சத்தியமா கிரஷ்தாங்க.

பெண்ணோ, ஆணோ தன்னுள் துளிர்விட்டிருக்கின்ற உணர்வு ஈர்ப்பா, காதலா என்பதைத் தீர்மானிப்பதிலேயே பாதி வாழ்க்கையைக் கழித்துவிடுகின்றனர். இந்தக் குழப்பமான உளவியல் பலருக்கும் இங்கே சிக்கல்தான். இது எது என்று இனம்கண்டுகொள்ள, அதன் அறிகுறிகள் கொஞ்சம் கைகொடுக்கும். அதை உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் விளக்குகிறார்.

கிரஷ், காதல்
கிரஷ், காதல்

``வீட்டருகில், வேலையிடத்தில், வெளியிடத்தில், தினசரிப் பயணங்களில் ஒருவரைப் பார்க்கிறோம். நம் உறவினருள் எவரையேனும் அச்சடித்தாற்போல குணமும் நடவடிக்கையும் அவரிடம் இருக்கின்றன. இரண்டு நாள்கள் ஓரக்கண்களால் பார்க்கிறோம். அடுத்தடுத்து அவருக்குத் தெரியாமல் ரகசியமாய், தெளிவாய்ப் பார்க்கிறோம்.

இதில் காதல் உண்டா? காதலுக்கும் பின்னாளில் வாய்ப்பு இருக்கலாம். ஆனால் இந்த ஸ்டேஜ், கிரஷ்தான். நமது சூழலை உணர்ந்து, இதை முன்னெடுக்கலாமா வேண்டாமா என்ற பெரிய முடிவை எடுக்கலாம்.

அவர் எதைச் செய்தாலும் அது சரியென்றே நினைக்கிறோம் எனில், அது சத்தியமா கிரஷ்தாங்க.

ஒருவரை நாம் புகழ்ந்துகொண்டே இருக்கிறோம். அவரைப் பார்த்து நம்மை மறக்கிறோம். அவரிடம் உள்ள தவற்றைப் பற்றிச் சிந்திக்கவோ, அவரிடம் எடுத்துச் சொல்லவோ நமக்குத் தோன்றுவதில்லை. அவர் எதைச் செய்தாலும் அது சரியென்றே நினைக்கிறோம் எனில், அது சத்தியமா கிரஷ்தாங்க. கிரஷ்ஷின் படிநிலைகளில் இது கொஞ்சம் சிரமமான கட்டம். பக்குவ நிலைக்கு நாம் இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து, நம்மை நாமே புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், முடிவு தவறாகப் போய்விடாமல் இருக்கும்.

கிரஷ்ஷில், சம்பந்தப்பட்ட நபரின் நெகட்டிவிட்டியை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அவர் செய்கிற எல்லாவற்றையும் அழகாய் ரசிக்கத் தோன்றும். காதலில் அது நடக்காது. ஆரம்பத்தில், பிடித்ததையெல்லாம் ரசிக்கத் தொடங்கிய மனம், பிறகு தப்பானவற்றை சுட்டிக்காட்டித் திருத்தவைக்கும். இதற்குக் காரணம், அவர் மேல் உள்ள அக்கறை, உரிமை.

காதலில் நாள்கள் செல்லச் செல்ல பார்வை ஈர்ப்பு குறையத் தொடங்கும். நெருக்கமும் பழக்கமும் கூடக் கூட வாழ்வின் எதார்த்தம் மட்டுமே முழுமையாய் நிரம்பும். இருவரும் தங்களை வெவ்வேறு உயிராய் எண்ணிக்கொள்ள மாட்டார்கள்" என்கிறார்.

காதலில் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியும், துயரத்தில் வயிற்றைச் சுழற்றும் பட்டாம்பூச்சியும் ஒன்றே... எப்படி?!
கிரஷ், காதல்
கிரஷ், காதல்

காதல், கிரஷ்... இந்த உணர்வுகள் குறித்த தெளிவை நாம் பெற இயலாது போவது ஏன்? உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் விளக்குகிறார்.

``நம் உணர்வுகளை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதானே மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். ஈர்ப்புகள் எதார்த்தமானவை. உணர்வு பற்றிய தெளிவு வேண்டும் என்றால், சக மனிதர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மைப்போல சக உயிர்தான் அவர் என்று புரிந்துகொள்ள வேண்டும்'' என்றவர், கிரஷ், காதல் வேறுபாடுகள் பற்றிப் பேசினார்.

``அதிகம் பழகாத நபரிடம் ஏற்படுவது கிரஷ். ஒருவரைப் பற்றி அறிந்த பின்பு ஏற்படும் ப்ரியம், காதல். `அப்போ லவ் அட் ஃபர்ட்ஸ்ட் சைட்?' என்று கேட்டால், அந்த ஃபர்ஸ்ட் சைட்டில் அது கிரஷ்ஷாகத்தான் இருந்திருக்கும். அதைக் காதலாக வளர்த்தவை, அடுத்தடுத்து வந்த நாள்களாகவே இருக்கும். இன்னொரு பக்கம், முதல் பார்வையிலேயே `இவன்/இவள்தான் நம் இணை' என்று முடிவெடுத்துவிடுபவர்களின் உள்ளுணர்வும் பொய் இல்லை.

உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்
உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்

நிறம், அழகு, ஆடைகளின் நேர்த்தி, ஸ்டைல் என இவையெல்லாம் கிரஷ் ஏற்படக் காரணங்களாக இருக்கலாம். ஆனால், காதல் பிறக்க நம் மனசு, சம்பந்தப்பட்டவரின் மனசை உழுதுபார்க்கத் துடிக்கும். அது புறக்காரணிகள் தாண்டி, அகத்துக்குள் சென்று அலைபாயும். கிரஷ்ஷில் வேவ் லெங்த், கெமிஸ்ட்ரி எல்லாம் இருக்காது. ஆனால் காதலில், இரு மனங்களும் ஒரு புள்ளியில் சிந்திக்கும் தருணங்கள் அடிக்கடி நிகழும். கருத்து வேறுபாடுகளையும் தாண்டி, ஓர் உள்ளுணர்வு இருவரையும் ஒட்டவைக்கும்.

சரிப்பட்டு வராத தருணங்களில் `சரிதான் போ' என்று கிரஷ்ஷிடமிருந்து சென்றுவிடலாம். அடுத்தடுத்த வேலைகளில் மனதைச் செலுத்தி ரிலாக்ஸ் ஆகிக்கொள்ளலாம். ஆனால், காதலில் இதுபோன்ற தருணங்களில் ஒரு வலி உணரப்படும். துளி கண்ணீர் சிந்தும். அது காதலுக்கு மட்டுமே வாய்க்கும்'' என்று விளக்கினார் சித்ரா அரவிந்த்.

காதல்
காதல்
``சிங்கிளாகவே இருப்பது சந்தோஷம்தான்... ஆனா?'' - முரட்டு சிங்கிள்களுக்கு `டேட்டிங் குரு' வார்னிங்

என்ன, நினைவுகள் நிறைந்து தளும்புகின்றனவா..? உணர்வை வெளிப்படுத்துவோரின் கண்ணியமும் அந்த உணர்வின் உண்மைத் தன்மையும்தான் சேரிடத்தைச் சென்றடைகிறது.

ஒரு 90's கேர்ள் பேச்சுவாக்கில் சாதாரணமாகச் சொல்லிப்போனார். ``இவனை மாதிரி வேணும்னு நினைச்சா க்ரஷ். இவன்தான் வேணும்னு நினைச்சா லவ்!"

அடுத்த கட்டுரைக்கு