Published:Updated:

`Work From Home' - தம்பதிகள் சமாளிக்க வேண்டிய 10 சவால்கள்! #WFH #CoupleGoals

'Work From Home'
'Work From Home'

இவர் 'Work From Home' என்பதால, அப்பப்போ ஸ்நாக்ஸ், காபி, டீன்னு ஏதாச்சும் ஒண்ணு பண்ணிட்டே இருக்குற மாதிரி இருக்கு.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தால், இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் 'Work From Home' கலாசாரம் மக்களுக்குச் சாதகமாக இருக்கிறதா அல்லது சவாலாக இருக்கிறதா? கருத்துகளும் விவாதங்களும் பறந்துகொண்டிருக்கின்றன.

வினு - ஜனனி
வினு - ஜனனி

இன்னொரு பக்கம், வீட்டிலிருந்து வேலைசெய்யும்போது தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, 'வீட்டிலிருந்து வேலை செய்வதன் அலப்பறைகள்' எனும் பெயரில் பல மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த வினு வர்ஷித் தன் மனைவி ஶ்ரீ ஜனனிக்காகவே, 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆப்ஷனை கடந்த ஏழு வருடங்களாகக் கடைப்பிடித்து வருகிறார். வொர்க் ஃப்ரம் ஹோமின் 'கபிள் கோல்ஸ்' குறித்த இவர்களின் ஷேரிங்ஸ் இங்கே.

1. பயண நேரம்

''ஆபீஸ் போறதுக்கான பயண நேரம் மிச்சமாகிறதால, ஆபீஸ் வேலை முடிஞ்சதும் எங்களைப் பத்தியும் குடும்ப விஷயங்களைப் பத்தியும் பேசறதுக்கு நிறைய டைம் கிடைக்குது.

வினு - ஜனனி
வினு - ஜனனி

'எங்களுக்கான நேரம்' அதிகமா கிடைக்கிறதால உறவு இன்னும் ஆரோக்கியமாக இந்த 'வொர்க் ஃப்ரம் ஹோம்' நிச்சயமா உதவியா இருக்கு!" - வினு

2.கிச்சன் கலாட்டா

''பொதுவா காலை, மதிய உணவை காலையிலேயே செஞ்சுடுவேன். அதுக்கப்புறம் இரவு உணவு வேலைதான். ஆனா இவர் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால, அப்பப்போ ஸ்நாக்ஸ், காபி, டீன்னு ஏதாச்சும் ஒண்ணு பண்ணிட்டே இருக்குற மாதிரி இருக்கு. அதேசமயம், முன்னாடியெல்லாம் கிச்சன் பக்கமே எட்டிப்பார்க்காம இருந்தவரு, வீட்ல இருக்கிறதால கிச்சன்ல வந்து கூடமாட உதவுறதெல்லாம் செம்ம ஃபீல்!" - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

"எல்லா கணவர்களையும் மாதிரி, 'பொண்டாட்டி வீட்டுல ஹாயா இருக்கா, ஆம்பளைங்கதான் கஷ்டப்படுறாங்க' மனநிலையில இருந்த எனக்கு, இப்போ மனைவிகூட இருந்து பார்க்கும்போதுதான் 'ஹோம்மேக்கர்' பொறுப்பு எவ்ளோ கஷ்டம்னு புரியுது. என்னோட வேலைக்கு அவங்க சப்போர்ட் பண்றமாதிரி, இப்போ அவங்களுக்கு நான் சப்போர்ட் பண்றேன். மொத்தத்துல 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி'! " - வினு

3. '24' ஹவர்ஸ் டாஸ்க்

"முன்னாடி, இவரு ஆபீஸ் போயிட்டு திரும்பிவரக் கொஞ்சம் லேட் ஆனாலும் டென்ஷனாயிடும். அந்தப் பதற்றம், எனக்கு ஏதாச்சும் எமர்ஜென்ஸினா இவருக்கும் இருக்கும். ஆனா இப்போ, எப்பவும் இவர் கூடவே இருக்கிறதால ரொம்ப செக்யூர்டா ஃபீல் பண்ண முடியுது.

வினு - ஜனனி
வினு - ஜனனி

ஆனா, கூடவே இருக்கிறதால மேக்ஸிமம் டைம் இவரைப் பத்தியும், எங்களைப் பத்தியும்தான் யோசிக்கிறேன். அதைத்தாண்டி, எனக்கான தனிப்பட்ட ஃப்ரெண்ட்ஸ், அவங்களோட ஒரு மீட், அவுட்டிங் இதெல்லாம் இயல்பாவே யோசிக்கத் தோணலை. இது கொஞ்சம் மைனஸ் மாதிரிதான் இருக்கு. ஸாரி ஃப்ரெண்ட்ஸ்!" - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

''இயல்பிலேயே நான் ஒரு வீட்டுப்பறவை. ஆனாலும் வீட்ல நடக்குற எதாச்சும் விஷயம் வேலையை டிஸ்டர்ப் பண்ணும்போது கொஞ்சம் கஷ்டம்தான். அவளை மாதிரி நானும், ஃப்ரெண்ட்ஸ் அவுட்டிங் எல்லாத்தையும் மிஸ் பண்றேன். ஆனா, அதுக்கு பதிலா குடும்ப நண்பர்கள் வட்டத்துல சேர்ந்து கெட்டுகெதர், அவுட்டிங்னு போயிட்டிருக்கோம். ஒண்ணாவே இருக்கிறதுல பெரிய மைனஸ்னு பார்த்தா, சர்ப்ரைஸ் பிளான், கிஃப்ட் மாதிரி எதையும் ரகசியமா பண்ண முடியுறதில்லை." - வினு

4. சண்டைக்கோழி டைம்

"அவரோட போன்ல பேசுறப்போ ஏதாச்சும் சண்டை வந்தா, அந்தச் சண்டை சமாதானமாக அவர் சாயங்காலம் ஆபீஸ் விட்டு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணணும். அதுவரைக்கும் வீட்ல எனக்கு ஒரு வேலையும் ஓடாது. ஸ்ட்ரெஸ் அதிகமாகும். போன்ல பேசுறப்ப தப்பா புரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கிற பல விஷயங்களை, இப்ப நேர்ல பேசிடறோம். முக்கியமான விஷயங்களை உடனே உடனே பேசிடறதால, தெளிவும் புரிந்துணர்வும் அதிகமாயிட்டே இருக்கு." - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

"சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் போன்ல சண்டை வரும். அப்போ, அவளுக்கு வீட்ல ஒரு வேலையும் ஓடாத நிலைமைதான் எனக்கு ஆபீஸ்லயும் இருக்கும். இப்போ அந்த அவஸ்தை எல்லாம் இல்ல.'' - வினு

5.முடிவுகள் எடுப்பது

"ஒரு பிரச்னையைக் கலந்துபேசி முடிவெடுக்கிறதுக்கு எல்லாம் நேரமே இருக்காது. யாராச்சும் ஒருத்தரோட முடிவை இன்னொருத்தர் அப்படியே ஏத்துக்கணும்... இல்லைன்னா சண்டைதான். இப்ப, எல்லா விஷயத்தையும் சேர்ந்தே யோசிச்சு, சேர்ந்தே முடிவு பண்ணின்னு, 'டெஸிஷன் மேக்கிங்' ரெண்டு பேரோட பொறுப்பா மாறிடுச்சு. இது ரொம்ப பாசிட்டிவ்வா இருக்கு.'' - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

"வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கும்போது, முக்கியமான விஷயத்துலகூட சரியா முடிவெடுக்க முடியாம எரிச்சலா இருக்கும். அந்த சமயத்துல எல்லாத்தையும் அவ தலையிலதான் கட்டிடுவேன். இப்ப ரெண்டு பேருமே கலந்து பேசி முடிவெடுக்கிறதால எல்லா முடிவும் நல்ல முடிவாவே அமையுது.''

6.அவுட்டிங்

"முன்னாடி, வார இறுதிகளில் மட்டும்தான் வெளியே போக முடியும். ஆனா இப்ப, ஒரு லேப்டாப், இன்டர்நெட் இருந்தாலே போதும் எங்க போனாலும் அவரால வேலைசெய்ய முடியுது. அதனால, சொந்தக்காரங்க வீடு, ரெசார்ட்ல ஒரு மினி ஸ்டே, வெளியூருக்கு லாங் ட்ரிப்னு எந்த நேரமும் அவுட்டிங் போக முடியுது!" - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

"வாரம் முழுக்க ஆபீஸ், வாரக்கடைசியில வீடுன்னா... சனி, ஞாயிறு முழுக்க வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கணும்னுதான் தோணும். இப்போ வீட்லதான் வேலைங்கிறதால, அவுட்டிங் போறது ரொம்ப சுவாரஸ்யமா மாறிடுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து பயணம், விதவிதமான உணவுகள்னு அனுபவிச்சிட்டிருக்கோம்!" - வினு

7. பர்சனல் ஸ்பேஸ்

"ரெண்டு பேருக்குமே 'மீ டைம்' மிஸ்ஸிங்தான். ஒரு ஜிம், ஷாப்பிங்னு எதுனாலும் ஒருத்தர விட்டுட்டு இன்னொருத்தர் போறதுக்குப் பெருசா வாய்ப்பில்லை. எல்லாத் திட்டங்களையுமே ரெண்டு பேரையும் வெச்சுத்தான் யோசிக்கவே ஆரம்பிக்கிறோம். அதனால, 'மீ டைம்(me time)' எங்களுக்கு 'அஸ் டைம்(us time) ஆயிடுச்சு." - வினு

வினு - ஜனனி
வினு - ஜனனி

"தினமும் ஆபீஸ் முடிஞ்சு நண்பர்கள்கூட கொஞ்சம் அரட்டை, அலுவலக கேமிங் ஏரியால விளையாட்டுன்னு எனக்கான நேரத்தை மிஸ் பண்ணாலும், எங்களோட பர்சனல் டைம், எங்க வாழ்க்கையை ரொம்ப பாசிட்டிவ்வா வெச்சிருக்குது."

8. ஒளிவு மறைவு

"இயல்பாவே நான் எல்லாத்தையும் அவர்கிட்ட ஒப்பிச்சுடுவேன். அதனால இது என்னோட டாபிக்லேயே இல்லை." - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

"ஆம்பளைங்க அப்படி இருக்கிறது கஷ்டம்தான். ஆனா, வீட்டிலேயே இருக்கிறதால ஒரு போன் வந்தாகூட, நாம யார்கிட்ட பேசுறோம், என்ன பேசுறோம்னு எல்லாத்தையும் அவங்க வாட்ச் பண்ணிட்டே இருக்கிறதால, மறைக்கணும்னு நினைச்சாகூட வாய்ப்பே இல்லை பாஸ்!" - வினு

9. மதிப்பு கூடுமா, குறையுமா?

"அவரு வேலைசெய்யுறது, அதுல இருக்கிற டென்ஷன் எல்லாத்தையும் நேரடியா பார்த்துட்டு இருக்கிறதால, எனக்காக, குடும்பத்துக்காக இவ்வளவு உழைக்கிறாரேனு அதிக மரியாதை ஏற்படுது!" - ஜனனி

வினு - ஜனனி
வினு - ஜனனி

"நிச்சயமா மதிப்பு கூடியிருக்கு. ஏன்னா, அவகூடவே இருக்கிறதால அவளோட நினைப்பு எல்லாமே என்னையும் வீட்டையும் சுத்திதான் இருக்குனு புரியுது. அதை நான் இப்போ ரொம்ப மதிக்கிறேன்.''

10. புரிந்துணர்வும் ஆதரவும்

"ஆசை, லட்சியம்ல ஆரம்பிச்சு பிடிச்சது, பிடிக்காதது, எதுக்கு கோபம் வரும், எதுக்கு சந்தோஷப்படுறோம்ன்னு ரெண்டு பேரோட இயல்பையும் நாங்க பரஸ்பரம் புரிஞ்சுக்க இந்த 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ரொம்பவே கைகொடுக்குது. அதனால புரிந்துணர்வு மட்டுமல்லாம, ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி ஆதரவு கொடுக்கணும், எங்க விட்டுக்கொடுக்கணும்னு எல்லாத்துலயும் தெளிவு வந்துடுச்சு." - ஜனனி, வினு

வினு - ஜனனி
வினு - ஜனனி

மொத்தத்தில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது ஆரம்பத்தில் வேலை,வீடு என இருபக்கமும் அழுத்தம் கொடுத்தாலும் காலப்போக்கில், என்ன வேலைசெய்கிறோம், எதற்கு வருமானம் ஈட்டுகிறோம் எனத் தம்பதிகளுக்குள் ஒரு தெளிவையும், அதிக அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துகிறது.

கொரோனா வொர்க் ஃப்ரம் ஹோம் சூழல்... சாதக, பாதகங்கள்!
#StayinsideStaySafe
அடுத்த கட்டுரைக்கு