Published:Updated:

ஆண்ட்ரியா சொன்ன அந்த `ரிலேஷன்ஷிப் மிஸ்டேக்'... நீங்களும் செய்றீங்களா? #AllAboutLove - 6

Andreah
News
Andreah

பார்ட்னரை உங்களின் உடைமையாகப் பார்ப்பதில்தான் பொஸெஸிவ்னெஸ் தொடங்குகிறது. பொஸெஸிவ் ஆகவில்லையென்றால் அது காதலே இல்லை என்னுமளவுக்கு அதை ரொமான்ட்டிஸைஸ் செய்து வைத்திருக்கிறோம். அது தவறு!

ஒகே.

- காதல் என்றால் என்ன,

- இன்ஃபாச்சுவேஷனுக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்,

- காதல் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவது,

- அதற்கு எப்படிப் பதில் சொல்வது,

- அந்தக் காதலை அடிப்படையாக வைத்து என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைவது,

அதற்கு முன் எதையெல்லாம் யோசிக்க வேண்டும் என்பதையெல்லாம் பார்த்துவிட்டோம். இப்போது ரிலேஷன்ஷிப்புக்குள் வந்துவிட்டோம். ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்புக்கு பிரச்னையாக நிறைய விஷயங்கள் வரக்கூடும். அவை என்ன என்ன, அவற்றை எப்படிக் கையாள்வது என்பதை இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

இந்தத் தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் இளைஞன் அவன். ஒருநாள் அழைத்து ஒரு விஷயம் சொன்னான்.

`அண்ணா... எனக்கு கொரொனா டைம்ல நிறைய பிரச்னை. பெர்சனலா சில இழப்பு. அதனால என் லவ்வருக்கும் எனக்கும் கம்யூனிகேஷன் குறைஞ்சு ஒரு கட்டத்துல இல்லாமலே போச்சு. அவ எனக்கு பல வருஷமா நல்ல ஃபிரெண்டு. 2019ல தான் லவ்ன்னு கமிட் ஆனோம். ஆனால், 2020ல எனக்கு அப்ப இருந்த மனநிலைக்கு யார்ட்டயுமே நான் பேசல. பேச முடியல. அந்த சமயத்துல அவ வீட்டுலயும் பிரச்னை. அவசரமா திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க. என்னை ரீச் பண்ண முடியாம தவிச்சிருக்கா. வேறு வழியில்லாம கல்யாணத்துக்கு அவளும் ஓகே சொல்லிட்டா. நிச்சயம் மட்டும் இப்ப பண்ணிருக்காங்க. இப்ப கொஞ்ச நாளா நான் சரியாகிட்டே வர்றேன். அவகிட்ட பேசுறேன். அவ முதல்ல திட்டினாலும் அப்புறம் என்னைப் புரிஞ்சிக்கிட்டா'

காதல்
காதல்
pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவன் சொல்வதை வைத்து அவர்களுக்கிடையே மூன்றாவதாக வந்த அந்த புது மாப்பிள்ளைதான் பிரச்னை என நினைத்தேன். அதை எப்படி சரி செய்வதென கேட்கப் போகிறான் என நினைத்தேன். ஆனால், அவன் பிரச்னையே வேறு.

`அந்த பையன் இல்லைண்ணா... அவன் இவள வாடி போடின்னு சொல்றாண்ணா... அவன் எப்படிண்ணா அப்படி சொல்லலாம்' என்பதே அவன் முக்கிய பிரச்னையாகச் சொன்னான். அந்தப் பெண் அவளின் வருங்கால கணவனிடம் பேசுவதைக் கூட இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த ஜோடியின் பிரச்னையை ஓரமாக வைப்போம். அந்த இளைஞனுக்கு இருக்கும் அந்த பொஸெஸிவ்னெஸ்தான் என்னை யோசிக்க வைத்தது. எந்த ஒரு ரிலேஷன்ஷிப்புக்கும் வரும் முதன்மையான எதிரி பொஸெஸிவ்னெஸ்தான். இது ஆண்களுக்கு மட்டுமே இருக்கும் பிரச்னையென நினைக்க வேண்டாம். பெண்களுக்கும் உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`நீ இன்னொருத்தன் கூட சினிமாக்கு போயும் உன் ஆளு பொஸெஸிவ் ஆகலையா? சரியில்லையே' என்று கேட்கும் நண்பர்கள்தான் இங்கே அதிகம். பொஸெஸிவ் ஆகவில்லையென்றால் அது காதலே இல்லை என்னுமளவுக்கு அந்த உணர்வை ரொமான்ட்டிஸைஸ் செய்து வைத்திருக்கிறோம். அதுவே தவறுதான்.

பொஸெஸிவ்னெஸ்ஸுக்கு பல காரணங்கள் உண்டு. சந்தேகம், பொறாமை, தன்னம்பிக்கை குறைவு எனப் பட்டியலிடலாம். ஒரு முறை நடிகை ஆண்ட்ரியாவிடம் பேட்டி எடுக்கச் சென்றிருந்த போது ஒன்றைச் சொன்னார்.

`நம்ம பசங்களுக்கு ஒரு பொண்ண லவ் பண்றதுக்கும் posses பண்றதுக்கும் வித்தியாசம் தெரியல'
Andreah

மிகச் சரியான விஷயம் அது. பார்ட்னரை உங்களின் உடைமையாகப் பார்ப்பதில்தான் பொஸெஸிவ்னெஸ் தொடங்குகிறது. சரி, பொஸெஸிவ்னெஸ்ஸை எப்படிச் சமாளிப்பது?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரொம்ப தாங்காதீங்க:

கிண்டலாகச் சொல்லவில்லை. உண்மையிலே உங்கள் இணையை அளவுக்கதிகமாகத் தாங்க வேண்டாம். அதுவே உங்களுக்குச் சுமையாகிவிடும். அவர் உண்மையிலே உங்களைக் காதலிக்கிறாரா, உங்களிடம் நேர்மையாக இருக்கிறாரா என அதிகமாகக் கவலை கொள்ளத் தொடங்குவீர்கள். அதன் மூலம் அவரை நீங்களே உங்களை விட்டு தள்ளிப் போகச் செய்கிறீர்கள் என்பதை உணருங்கள். அவருக்கு நீங்கள் வேண்டுமென்பதால்தான் உங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். வேண்டாமென்றால் விலகியிருப்பார். அதை முதலில் நம்புங்கள்.

உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் உண்டு:

உங்கள் பார்ட்னர் மட்டுமே உங்கள் வாழ்க்கை இல்லை. உங்களுக்கும் நண்பர்கள் வேண்டும்; ஹாபி வேண்டும்; வேலை வேண்டும். இவையெல்லாமும்தான் உங்கள் பார்ட்னருக்கு உங்களை சுவாரஸ்யமான மனிதராக்கும். எப்போதும் ஒருவர் மட்டுமே என்றிருந்தால் ஒருநாள் அது வெறுத்துப் போகும்; அல்லது பிரச்னையில் முடியும். உங்களுக்கென இன்னொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டால் இணை மீதான பொஸெஸிவ்னெஸ் நிச்சயம் குறையும்.

இது புது வாழ்வு:

எல்லோருக்கும் கடந்த காலம் உண்டு; சில கசப்பான அனுபவங்கள் உண்டு. ஆனால், அதை வைத்து நிகழ்காலத்தையும், இன்றைய ரிலேஷன்ஷிப்பையும் அணுகுவது புத்திசாலித்தனமாகாது. ஒவ்வொருவரும் இந்த உலகில் தனித்தன்மையானவர்கள். நீங்கள் முன்பு அறிந்த மனிதர்களை வைத்து உங்கள் பார்ட்னரை ஜட்ஜ் செய்வது எந்த விதத்திலும் உதவாது.

காதல்
காதல்

அவர் நண்பர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்:

யாரோ தெரியாத ஒருவருடன் உங்கள் பார்ட்னர் சினிமா போகிறாரென்றால் உங்களுக்குப் பதறும்; சந்தேகம் வரும்; சண்டைக்குக் காரணமாகும். அதுவே, உங்கள் பார்ட்னர்களின் நண்பர்களை அறிந்திருந்தால் அப்படி சந்தேகப்படும் வாய்ப்பு குறைவு. நண்பர்களை அறிமுகம் செய்து வைக்க வேண்டியது அவர் வேலை; அந்த நட்பைப் புரிந்து ஏற்றுக்கொள்வது உங்கள் வேலை.

யாரையும் மாற்ற எண்ணாதீர்கள்:

இந்த உலகில் எல்லோரும் தனித்தன்மையானவர்கள் என்றேன் இல்லையா? அதனால் யாரும் தன்னைப் பிறர் மாற்ற வேண்டுமென நினைப்பதில்லை. அப்படி மாற வேண்டுமென நினைப்பவர்களை விரும்புவதுமில்லை. எனவே, உங்கள் பார்ட்னரை அவர் இயல்போடு ஏற்றுக்கொள்வதுதான் சரி. அது இயலாமல் போகும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகும்.

நம்புங்கள்; உளவு பார்க்காதீர்கள்:

பொஸெஸிவ்னெஸ் இல்லாமல் போக தேவையான ஒன்று நம்பிக்கை. அது இல்லாமல் போகும்போது உங்கள் பார்ட்னரை உளவு பார்க்கத் தொடங்குவீர்கள். அவர் மொபைலை செக் செய்வது, ஈமெயிலை லாக் இன் செய்து வைத்திருந்தால் அதைப் பார்ப்பது, அவர் யாரிடமெல்லாம் பேசுகிறார் எனத் தெரிந்துகொள்ள முனைவது என எல்லா ஜேம்ஸ் பாண்டு வேலைகளையும் தவிர்க்க வேண்டும். சில சமயம் இது இயல்பான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், தவறான விஷயமென்பதை உணருங்கள். ஏதேனும் சந்தேகம் என்றால் நேரிடையாகக் கேளுங்கள். அது உளவு பார்ப்பதைவிட நல்ல முடிவுகளையே தரும்.

திறந்த மனதோடு உரையாடுங்கள்:

உங்கள் இணை, உங்களுடைய நல்ல, கெட்ட குணங்களைச் சேர்த்தே உங்களைக் காதலிக்கிறார். அதனால், உங்கள் மனதில் என்ன தோன்றினாலும் அதைப் பற்றி வெளிப்படையாக உரையாடுங்கள். அப்போதுதான் உங்கள் பிரச்னையை அவர் உணர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதுவே, உங்களுக்கிடையேயான பல பிரச்னைகளைத் தீர்க்கும்.

இறுதியாக ஒன்று. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதலும், ரிலேஷன்ஷிப்பும் ஓர் அங்கம்தான். அதை நம்மோடு ஒருவர் பகிர்வதாலே அவர் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் நமக்கு உரிமையும் பங்கும் இருக்கிறதென நினைக்க வேண்டாம். அப்படி நினைத்தால் அது காதல் அல்ல; ஆண்ட்ரியா சொல்வது போல உரிமை கொண்டாடுவது.

காதலியுங்கள்; உரிமை கொண்டாடாதீர்கள்!

- காதலிப்போம்